ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சாரிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.
சிவன் சாரின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
ஸ்ரீ ஆர்யாம்பாள் சன்னதி
கோயில்களால் சூழப்பட்ட நங்கை நல்லூரில் மாபெரும் சிறப்பாக,மணிமகுடமாக உருவாகியுள்ளது பகவத்பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரரின் குரு பரம்பரையும் தன் தாயாருடன் அருள் பாலிக்கும் ஆதிசங்கரர் சன்னதி.
ஸ்ரீ ஆதிசங்கரர் முதல் தற்போது பீடாதிபதியாக வீற்றிருக்கும் ஸ்ரீ விஜயேந்திரர் வரை அனைவரையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒரே இடத்தில் அனைத்து குருமார்களையும் தரிசிக்கும் வாய்ப்பு என்பது சிறப்பு.
இந்த வார காணொளியில் அது உருவான கதை அறிவோம்
Leave a comment
Upload