லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் லியோ. அக்டோபர் 19-ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக சனிக்கிழமை சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க இருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. தயாரிப்பு நிறுவனம் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து நேரு ஸ்டேடியத்தில் மேடை மற்றும் இதர விஷயங்களை தயார் செய்து கொண்டிருந்தது. சனிக்கிழமை பாடல் வெளியீட்டு விழா ஆனால், புதன்கிழமை லியோ பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி ரத்து என்று அறிவித்த பட நிறுவனம் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இதற்கு எந்த அரசியல் காரணமும் இல்லை என்று தாங்களாகவே விளக்கம் சொன்னார்கள். இதுதான் சந்தேகத்துக்கான முதல் ஆரம்பம்.
உண்மையில் லியோ படம் பாடல் வெளியீட்டு விழா ரத்துக்கு என்ன காரணம் என்று சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்திலும், போலீஸ் தரப்பிலும் நாங்கள் விசாரித்தோம்.அப்போது நமக்கு கிடைத்த தகவல்களை உள்ளது உள்ளபடி நாம் இங்கே தந்து இருக்கிறோம்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் பட நிறுவனம். முக்கிய நடிகர்கள் நடிக்கும் படம் எதுவாக இருந்தாலும் அதன் வெளியீட்டு உரிமை முதலில் அவர்களுக்கு தான் அவர்கள் வேண்டாம் என்று சொன்னால்தான் மற்ற வெளியீட்டு நிறுவனத்துக்கு தரப்படும். சினிமா படம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் ரெட் ஜெயன்ட் தொடர்பு எல்லையில் தான் இருந்தது. ஆனால், லியோ பட விநியோக உரிமை இந்த முறை ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு தரமாட்டோம் என்று படத் தயாரிப்பு நிறுவனம் உறுதியாக சொல்லிவிட்டது. அதனால்தான் லியோ பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு காவல்துறை மூலம் மறைமுகமாக நெருக்கடி தர தொடங்கியது ஆளுங்கட்சி என்கிறார்கள்.
சரி காவல்துறை எந்த வகையில் நெருக்கடி தந்தது என்று விசாரித்த போது நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்த முதலில் அனுமதி என்று சொன்னார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் 5000 முதல் 6000 பேர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஏனெனில் உள் விளையாட்டு அரங்கில் அவ்வளவு பேருக்கு மட்டும் தான் உட்கார வசதி இருக்கிறது.ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சிக்கு நாங்கள் அனுமதி தந்து கூடுதலாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் டிக்கெட்டுகளை விற்பனை செய்து அந்தப் பகுதி போக்குவரத்து நெரிசலில் இரண்டு மணி நேரம் முதல்வரே சிக்கிக்கொண்டார். எனவே அது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பட நிறுவனத்தை அழைத்து இந்த நிபந்தனைகளை எல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கையெழுத்து போட்டு தர வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இவற்றுக்கெல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் பாதுகாப்பு தர முடியாது எல்லா விளைவுகளுக்கும் நீங்கள் தான் பொறுப்பு என்றும் எச்சரிக்கை செய்தார்கள். அப்போதுதான் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு கொஞ்சம் சந்தேகம் வரத் தொடங்கியது. இந்த விஷயத்தை அவர்கள் விஜய் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்கள். இது என்ன புது கதையாக இருக்கிறது.
ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சி நடந்த அரங்கத்துக்கு வெளியிலும் பெரிய திரைகள் வைத்து அதில் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள் நிறைய ரசிகர்கள் பார்த்தார்கள். அப்படி இருக்கும்போது இப்போது நமக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடு என்று கேட்டிருக்கிறார். அப்போது காவல்துறை ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியை உதாரணம் காட்டியது இப்போது அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது போன்றவற்றை படத் தயாரிப்பு நிறுவனம் விஜய்க்கு சுட்டிக்காட்டி இருக்கிறது. லியோ பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை பொருத்தவரை விஜய் ரசிகர்கள் குறைந்தது 50,000 பேர்கள் கலந்து கொள்வார்கள் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. சமீபத்தில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற கருத்து பலமாக பரவத் தொடங்கியதும் விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அதிக கூட்டம் என்பது தவிர்க்க முடியாது என்பதை விஜய் மற்றும் பட நிறுவனம் ஒப்புக்கொண்டது அதன் பிறகு விஜய் படம் வெளியிட்டுக்கு நமக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது இப்போதைக்கு நாம் யாருடன் சண்டை செய்ய வேண்டாம் நிகழ்ச்சியை ரத்து செய்து விடுங்கள் என்று உறுதிப்பட தெரிவித்தார். கூடவே இந்த நிகழ்ச்சி ரத்துக்கு எந்த அரசியல் காரணமும் இல்லை என்றும் குறிப்பிடுங்கள் என்று விஜய் சொன்ன யோசனையை தான் பட தயாரிப்பாளர் குறிப்பிட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து லியோ பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் நிறுவனம் நேரு உள் விளையாட்டரங்கம் எல்லைக்கு உட்பட்ட பெரியமேடு காவல் நிலையத்திற்கு அதிகாரபூர்வமாக நிகழ்ச்சி ரத்து உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி என்று கடிதம் எழுதி தந்து விட்டது.
ஜெய்லர் பட விழாவில் ரஜினி விஜய் நடித்த பீஸ்ட் படம் நன்றாக ஓடவில்லை என்ற ஒரு கருத்தை பதிவு செய்தார் அதேபோல் சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடிக்க விஜய் போட்டி போடுகிறார் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு கழுகு காக்கா கதை சொன்னார். சன் பிக்சர் பட தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. 73 வயதிலும் சுறுசுறுப்பாக நடிக்கும் வெற்றி படத்தை தரும் ரஜினி தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று பேசினார். அப்போதே விஜய் ரசிகர்கள் கொந்தளித்து ரஜினிக்கு எதிராக விமர்சனங்களை சொல்ல ஆரம்பித்தார்கள். அப்போது விஜய் மக்கள் இயக்கம் யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தடை போட்டு இருந்தார்கள். விஜய் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் எப்போதும் ஏதாவது ஒரு குட்டி கதை சொல்லி பரபரப்பு ஏற்படுத்துவது விஜய் வழக்கம் சென்ற பட விழாவில் ஆமாம் என் பெயர் ஜோசப் விஜய் தான் என்று பகிரங்கமாக சொல்லி அதற்கும் ஒரு குட்டி கதை சொன்னார் விஜய். அதேபோல் இந்த முறையும் கழுகு காக்கா கதைக்கு ஒரு குட்டி கதை சொல்ல இருந்தார்.
விஜய் இந்த குட்டிக்கதை என்ன என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்து நிகழ்ச்சி ரத்து என்பதால் ஏமாந்து விட்டார்கள். நிகழ்ச்சி ரத்தானதும் அரசியல் காரணத்தில் தான் இந்த நிகழ்ச்சி ரத்து என்று விஜய் ரசிகர்கள் நம்புகிறார்கள். அதனால், எக்ஸ் தளத்தில் விஜயைப் பார்த்து திமுக பயப்படுகிறது. D.M.K fears என்ற வார்த்தையை ட்ரெண்டிங் ஆக்கி இருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் திமுகவை விஜய் ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.
சில மாதங்களாகவே விஜய் நடவடிக்கை அவர் அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறார் என்பதை சொல்லத் தொடங்கியது. பனையூரில் பத்தாம் வகுப்பு பிளஸ் டூ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து பேசினார். ஓட்டுக்கு பணம் குறித்து அவர் பேசியது பரபரப்பானது. அதன் தொடர்ச்சியாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஐடி விங் கூட்டம் வக்கீல் அணி கூட்டம் பெண்கள் அணி கூட்டம் நிர்வாகிகள் கூட்டம் என்று விஜய் மக்கள் இயக்கம் பரபரப்பாக தங்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. இது போதாது என்று தலைவர்களின் பிறந்தநாளுக்கு கொண்டாட்டம் ஊர்வலமா போய் மாலை அணிவித்தல் என்று அவர்களின் அரசியல் நிகழ்வு காய் நகர்த்தல் எல்லோரையும் கவனிக்க வைத்திருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடுவார்கள் என்ற ஒரு பேச்சு வரத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சி ரத்து என்பது அரசியலாக பார்க்கப்படுகிறது அது தான் உண்மை.
இது போன்ற சர்ச்சை விஜய்க்கு புதியதில்லை. 2013- ஆம் ஆண்டு சென்னை மீனம்பாக்கத்தில் நடக்க இருந்த விஜய் பிறந்தநாள் பொதுக்கூட்டம் கடைசி நிமிடத்தில் ரத்தானது. அப்போது ஜெயலலிதா தந்த அழுத்தம் தான் அதற்கு காரணம் என்று பேசப்பட்டது. இப்போதும் அரசியல் காரணங்களுக்காக நிகழ்ச்சி ரத்தாகி விட்டதாகத்தான் விஜய் தரப்பு யோசிக்கிறது. இது போன்ற நிகழ்வுகளே நடிகர் விஜய் அரசியலுக்கு வர தூண்டுகிறது என்கிறார்கள். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.
கணக்கு கேட்டு எம்.ஜி.ஆரை நிரந்தர முதல்வராக்கியது தி.மு.க. கைது செய்யப்பட்டு மீண்டும் கருணாவை முதல்வாராக்கியது ஜெயா.. உசுப்பேத்தி மூப்பனாரை தா.ம.க துவங்க வைத்தது காங்கிரஸ்....
இன்னும் சொல்லப்போனால் டம்மியாக இருந்த வைகோவை ஒரு வருடம் பொடாவில் போட்டுத் தான் பெரிய அரசியல் தலைவர் ரேஞ்சுக்கு உயர்த்தினார் ஜெயா... ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள். when something is working dont fix it என்று அது போல விஜய் பாட்டுக்கு ஓரமாக போய்க் கொண்டிருந்தார் தேவையில்லாமல் அவரை அல்ப சினிமா வினியோகத்திற்காகவும், அதிகாரத்தை வைத்து சீண்டியும், தாங்களாகவே தங்களுக்கு ஒரு மிக பலத்த எதிரியை உதயநிதி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தி.மு.க. உருவாக்குகிறதோ என்று தான் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
Leave a comment
Upload