ஒடிசா மாநிலத்தின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாம் தீவில், இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பின் சார்பில் கடந்த 7-ம் தேதி இரவு ‘அக்னி பிரைம்’ எனும் புதிய தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய தலைமையான ‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
திட்டமிட்டபடி, இந்த ஏவுகணை இலக்குகளை நோக்கி துல்லியமாக பாய்ந்தது. இந்த ஏவுகணையை இந்திய ராணுவத்தில் சேர்ப்பதற்கு முன், தற்போது பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த அக்னி பிரைம் ஏவுகணையின் மூலமாக துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
எல்லாம் கண்டுபிடிங்கப்பா... எதையும் உபயோகிக்கும் நிலமை மட்டும் வரவே வேண்டாம். பூமி தாங்காது..
Leave a comment
Upload