தொடர்கள்
அரசியல்
திப்பு சுல்தானின் வாள் - மாலா ஶ்ரீ

20230503072552488.jpg

கர்நாடக மாநிலம், தேவனஹள்ளி என்ற இடத்தில் கடந்த 1750-ம் ஆண்டு, நவம்பர் 20-ம் தேதி சுல்தான் ஹைதர் அலி, பாக்ர்-உன்-நிசா தம்பதிக்கு திப்பு சுல்தான் மகனாகப் பிறந்தார். கடந்த 1782-ம் ஆண்டில் தந்தை இறந்த பிறகு, தனது 32-வது வயதில் சுல்தானாக திப்பு சுல்தான் அரியணை ஏறினார். அதன்பின் ஆங்கிலேயர்களை எதிர்த்து திப்பு சுல்தான் தொடர்ந்து போர் புரிந்தார். கடந்த 1799-ம் ஆண்டில் 4-வது மைசூர் போரில் திப்பு சுல்தான் ஆங்கிலேயப் படைகளால் தோற்கடிக்கப்பட்டு மரணமடைந்தார். மேலும், இவர் 'மைசூர் புலி' என்றும் அழைக்கப்படுகிறார்.

திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு, அவரது ஸ்ரீரங்கபட்டினம் அரண்மனையில் இருந்து பல்வேறு அரிய வகை போர் ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது, மேலும், அவரது படுக்கையில் இருந்து கைக்கு எட்டும் தூரத்தில் தற்போது ஏலம் விடப்பட்ட நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய வாளும், 2 துப்பாக்கிகளும் ஆங்கிலேயர்களுக்கு கிடைத்தன. இதன்பிறகு திப்பு சுல்தானின் வாள், இங்கிலாந்தின் மேஜர் ஜெனரல் டேவிட் பயர்டுக்கு, அவரது வீரத்துக்காக ஆங்கிலேய அரசினால் வழங்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திப்பு சுல்தான் பயன்படுத்தி வந்த நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய வாள், கடந்த சில நாட்களுக்கு முன் லண்டனில் உள்ள பான்ஹாம்ஸ் நிறுவனத்தில் ஏலத்துக்கு வந்தது. அப்போது இந்த வாளை ஏலத்தில் எடுக்க இருவரிடையே கடும் போட்டி நிலவியது. இதில் ஒருவர் போனிலேயே, ஏலத்தின்போது நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட இது 7 மடங்கு கூடுதலாக ஏலத்தில் எடுத்துள்ளார்.

அதாவது, இந்த நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய திப்பு சுல்தானின் வாள் இங்கிலாந்தின் 14 மில்லியன் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ₹140 கோடிக்கு) ஏலம் போனது எனக் குறிப்பிடத்தக்கது. இதில், திப்புவின் வாளை ஏலம் எடுத்தவர் இன் பெயரை வெளியிடாமல் ஏல நிறுவனம் ரகசியம் காத்து வருகிறது.

தெரிஞ்சு நாங்க என்னடா பண்ணப் போறோம் ????