தொடர்கள்
பொது
வெடித்து சிதறும் தீவு - மாலா ஶ்ரீ

20230510074447716.jpeg

அமெரிக்காவின் மிகப் பிரபலமான ‘காஸ்ட்லி’ சுற்றுலாத் தலமான ஹவாய் தீவில் உள்ள கிளாயுவா எரிமலை, கடந்த சில நாட்களாக வெடித்து சிதறத் துவங்கியிருக்கிறது. இந்த கிளாயுவா எரிமலை, உலகிலேயே எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கிளாயுவா எரிமலை சீற்றத்தினால், அதற்குள் இருந்து ஏராளமான தீக்குழம்புகள் வெடித்து வெளியே சிதறியபடி உள்ளன. இதனால் ஹவாய் தீவில் உள்ள பெரும்பாலான வீடுகள் பலத்த சேதமடைந்தன.

இதேபோல், கடந்த 2019-ம் ஆண்டில் கிளாயுவா எரிமலை வெடித்து சிதறியபோது பலர் பாதிக்கப்பட்டனர். கடைசியாக, இந்த எரிமலை கடந்த ஜனவரி மாதம் வெடித்தபோதும் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு இந்த எரிமலையின் சீற்றம் தணிந்து காணப்பட்டது.

இந்நிலையில், தற்போதும் கிளாயுவா எரிமலை வெடித்து சிதறிக்கொண்டே இருப்பதால், அதிலிருந்து வெளியாகும் தீக்குழம்புகளால் அமெரிக்கா வரையிலான சுற்றுப்புற பகுதிகள் பழுத்த மஞ்சள் நிறமாகவே மாறிவிட்டன. தற்போது ஹவாய் தீவில் எரிமலை சீற்றத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டு வருகிறது.

இயற்கை அளப்பறியது. அது போலவே கணிக்க முடியாததும் கூட.....