தொடர்கள்
தொடர்கள்
விரல்களில் விந்தை 11-ரஜனி சுப்பிரமணியம்

லிங்க முத்ரா

20230508080343375.jpeg

நம் உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் நமது எல்லா நரம்புகளும் முடிகின்றன. ஆன்மீக ரீதியாக சொல்லப்போனால், சூட்சும நரம்புகள் மற்றும் சூட்சும நரம்பு முடிச்சுக்கள் நமது உடல் முழுதும் பரவியுள்ளன. சூட்சும நரம்பு முடிச்சுக்கள் தான் நாடிகள் எனப்படும். வர்மக்கலை வல்லுனர்கள் இதையே வர்மப்புள்ளிகள் என்கின்றனர். முத்திரைகள் செய்யும்போது, நாம் இந்த வர்மப்புள்ளிகளைத் தொடுகின்றோம். அதன் மூலமாக உள் உறுப்புகள் ஆரோக்கியம் அடைகின்றன. இதிலிருந்து முத்திரைகளின் முக்கியத்துவம் தெரிகிறது அல்லவா?

உடல் சூட்டிற்குக் காரணம் மன அழுத்தம், கவலை, ஓய்வற்ற தொடர்ந்த உடலுழைப்பு போன்றவையே. இதனால் உடல் உறுப்புக்கள் பாதிப்படைந்து ஆரோக்கியம் கெடும். உடல் சூட்டை சம ப்படுத்தும் லிங்க முத்திரையைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

இப்போது லிங்க முத்திரையை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். இரண்டு கைவிரல்களையும் கோர்த்து இறுக்கி பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இடதுகை கட்டைவிரலை, மேல்புறமாக பார்த்தபடி நிமிர்த்தி வைத்தபடி படத்தில் காட்டியது போல வலது கட்டைவிரலாலும், ஆள்காட்டி விரலாலும் இறுக்க பிடிக்க வேண்டும். கிட்டத்தட்ட லிங்கத்தின் உருவத்தை நாம் கையில் கொண்டு வருகிறோம்.

லிங்க முத்திரையை தினமும் காலையிலும் மாலையிலும் சுமார் 10 நிமிடங்கள் செய்துவந்தால், உடல்சூடு சமமாகி மூல வியாதி குணமாகிவிடும்.
பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் தொற்றுக்கள், ஜலதோஷம், இருமல் ஆகியவை இம்முத்திரையையைச் செய்வதால் குணமாகும்.

குளிர் பிரதேசத்தில் இருப்பவர்கள், இம்முத்திரையை செய்து கொண்டு வந்தால் குளிரினால் வரும் பாதிப்பை தடுக்கலாம். AC பஸ் மற்றும் AC ரயில் பெட்டியில் பயணம் செய்யும்போது AC பாதிப்பு அதிகமாகும்போது, நம்மால் அதை குறைக்க முடியவில்லை என்ற நிலை வரும்போது லிங்க முத்திரை செய்தால், குளிர் நம்மை பாதிக்காது.

இந்த முத்திரை, உடலில் உள்ள அதிக கொழுப்பை கரைக்க வல்லது. ஆஸ்த்மா, சைனஸ் சரியாகும். நீண்ட பயணம் செய்பவர்களுக்கு உடல் வெப்பம் அதிகமாகும்போது பயணம் முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தவுடன், கண்களை மூடி 2நிமிடங்கள் இந்த முத்திரையைப் பயிற்சி செய்தால், உடல் வெப்பம் உடனே குறைவதை உணரலாம்.

வாதம் மற்றும் கபம் சார்ந்த உடலைக் கொண்டவர்கள் இந்த முத்திரையை செய்யலாம். பித்த உடலைக் கொண்டவர்கள் செய்யக் கூடாது. இந்த முத்திரையை குறைந்தது 2 நிமிடமும், அதிகப்படியாக 10நிமிடமும் செய்யலாம். இதை நின்று கொண்டோ, படுத்துக்கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ கூட செய்யலாம்.

லிங்க முத்திரை செய்வதால் ஏற்படும் மற்ற பலன்கள் - மூட்டு வலி, கால்வலி தீரும். பெண்களுக்கு மாதவிலக்குக் சமயங்களில் ஏற்படும் வயிற்று வலி, அதிக இரத்தப்போக்கு ஆகியவை சரியாகும். சூட்டினால் வரும் வயிற்றுவலி குணமாகும்.

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், வறண்ட சருமம் கொண்டவர்கள், சமீப காலத்தில் வாதத்தால் பாதிக்கப் பட்டவர்கள் ஆகியோர் இந்த முத்திரையை ச் செய்யாமல் இருப்பது நல்லது.

லிங்க முத்திரையை பயன்படுத்தி, உடல் வெப்பத்தால் நேரும் அனைத்து நோய்களையும் தவிர்த்து நலமாக வாழ்வோம்.