தொடர்கள்
அனுபவம்
" ஊட்டியில் ...பறந்து செல்ல வழியில்லாமல் மிதந்த ராட்சச பலூன்"-ஸ்வேதா அப்புதாஸ்

ஊட்டி 200 வருடத்தின் சிறப்பை உயரத்தில் நிறுத்தும் ஒரு அழகிய யுக்தியாக பறந்த ராட்ச பல்லூன் அனைவரையும் ஈர்த்தது .

20230507144721553.jpg

ஏற்கனவே முன்னாள் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா இந்த ஐடியாவை முன்மொழிந்து ஊட்டி கோடை நிகழ்வின் ஒரு அங்கமாக பலூன் திருவிழா நடத்த எடுத்த முயற்ச்சி முடியாமல் போய்விட்டது .

பொள்ளாச்சியில் இதே பலூனில் பறந்து பிரமித்து போனார் சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் .

ஊட்டியில் இந்த பலூன் பறக்கவேண்டும் என்று ' SKYTERS adventure ' உரிமையாளர் பெனடிக்ட் சேவியோ விடம் அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப அதற்கான ஏற்பாடுகள் நடை பெற ஊட்டி அரசு கல்லூரி மைதானத்தில் பலூன் பறக்க ஏற்பாடு செய்யப்பட்டது . பின்னர் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை சுற்றளவு பழைய ஸ்கெட்ச்சில் இந்த பகுதியில் இருப்பதால் பலூன் பறக்க முடியாது என்று தடை வர .

20230507144916570.jpg

பேர்ன்ஹில் பகுதியில் உள்ள கிரசென்ட் ஸ்கூல் மைதானத்தில் பறந்தது .

காலை 6 மணிக்கு துவங்கி 9 மணிவரை தான் பறந்தது .காரணம் உயர் அழுத்த காற்றில் பலூன் மிதக்காது .மீண்டும் மாலை 3 மணிக்கு துவங்கி 6 மணிக்கு முடியும் .

நாம் காலை 6 மணிக்கு மைதானத்தில் ஆஜர் .

20230507145128428.jpg

காலையில் ஊட்டி அழகாக இருக்கும் பனி படர்ந்து இருக்க சில் குளிர் பெரிய பலுனை மைதானத்தில் விரித்து வைத்து அதனுள் காற்றை கொண்டு பலூனை உயர்த்தும் பணி சற்று சிரமம் தான் என்று புரிந்தது .

யு .கே யில் இருந்து வந்திருந்த மரியா பலூனுள் சென்று சூப்பர் டான்ஸுடன் கலாய்த்து வந்தது அவர்களின் காலை சிரமமான வேலையை ஜாலியாக்கியது .

பின்னர் பலூன் பைலட்டுகள் பலூனை அதன் நிலையில் நிறுத்த ஹாட் கேஸ் நெருப்பு வாயுவை செலுத்தி பலூன் அந்தரத்தில் மிதக்க ரெடியானது .

2023050714542428.jpg

நாமும் உரிமையாளர் பெனடிக்ட் சாவியோ மற்றும் மரியா பலூனுள் நின்று வானை நோக்கி சென்றோம் எங்கோ மிதப்பது போல இருந்தது .நூறு அடி உயரத்தில் நாம் மிதக்க ஊட்டி அழகாக தெரிந்தது . காலை சூரிய ஒளியில் பலூனின் நிழல் தெரிந்தது .

20230507145458143.jpg

நாம் ஸ்லொவ் மோஷனில் தரையை தொட்டோம் கேஸ் நெருப்பின் உஸ்ஸ்ஸ் சப்தம் தான் காதில் ஒலித்து கொண்டிருந்தது .

20230507145605597.jpg

மதுரையை சேர்ந்த மூன்று குழந்தைகள் லோகேந்திரா , லோகஜனனி மற்றும் குட்டி தவனேஷ் காலையில் எழுந்து வந்து பலூனில் சென்று மிதந்து வந்தனர்

" ரொம்ப ஜாலியா இருந்தது .எங்கோ மிதந்து செல்வது போல இருந்திச்சி .

கீழே பார்த்தால் அப்பா அம்மா இத்துணுண்டா தெரிந்தாங்க .ஊட்டி மேலே இருந்து பார்த்தபோது சூப்பராக இருக்கு ". என்று கூறினார்கள் .

20230507145714523.jpg

நர்மதா நம்மிடம் கூறும் போது , " ஒரு வித்தியாசமான அன்பவம் .ஒரு பெரிய கூடையினுள் ஏறி குதித்து நிற்பது போல தான் நின்று சென்றேன்

பலூனை மேலே பார்க்க சற்று பயம் தான் காஸ் பையர் பிளேம் உஸ் என்று பற்றி எரிய அந்த சூட்டில் பலூன் எங்களை தூக்கிக்கொண்டு மேலே செல்வது ஒரு திரில்லிங் தான் .என்ன சொல்ல ஒரு சூப்பர் அனுபவம் தான் ".

20230507145825811.jpg

சென்னையை சேர்ந்த மாலதி ,ஸ்ரீவர்ஷினி மற்றும் முத்துக்குமார் , " இப்படிப்பட்ட பெரிய பலூனில் பறப்பது முதல் முறை ரொம்ப திரில்லிங்கா இருந்தது .

⁸மேலே போகும் பொது தான் கொஞ்சம் பயமாக இருந்தது அந்த சில் காற்றால் மற்றபடி சூப்பர் இது ஊட்டியில் தொடரவேண்டும் ".

20230507145933172.jpg

உரிமையாளர் பெனடிக்ட் சாவியோ நம்மிடம் பேசும் போது , "நான் குளோபல் மீடியா பாக்ஸ் பலூன் ஆக்ட்டிவிட்டி செய்து கொண்டிருக்கிறோம் .பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் பிரபலம் . இது ஒரு ஏர் கிராப்ட் தான் .இரண்டு வகை உண்டு விளம்பரங்களுக்காகவும் மற்றது பயணிகள் பறந்து செல்ல உபயோகிப்பது .இதை இந்தியாவில் ப்ரமோட் செய்ய முயன்று முதலில் பொள்ளாச்சியில் தான் நடத்தினோம் நல்ல வரவேற்பு .இப்பொழுது ஊட்டி 200 கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக மிதக்கும் ஹாட் ஏர் பலூன் இயக்கி கொண்டிருக்கிறோம் .இது எப்படி ஒரு விமானம் பறக்க சிவில் ஏவியேஷன் அனுமதி தேவையோ அதே போல தான்

.

ஊட்டியில் மிக சிரமம் பறந்து செல்ல முடியாது வனங்கள் இருப்பதால் .மேலும் கேஸ் வசதி இங்கு இல்லை அதனால் மேட்டுப்பாளையம் சென்று கேஸ் நிரப்பி வரவேண்டும் .இந்த பலூன் அதிகாலை இரண்டு மணிநேரம் மாலை ஆறு மணிக்கு முன்பு இரண்டு மணிநேரம் தான் பறக்க முடியும் .

⁸ இந்த ஹாட் ஏர் பலூன் உருவாகியது ஒரு சுவரசியான கதை 1874 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் மங்கோ பியர் சகோதரர்கள் தங்களின் பழைய பேப்பர் கடையில் தீ பற்றிக்கொள்ள அந்த வெப்பத்தில் காகிதங்கள் வானோக்கி பறந்து சென்றதை பார்த்து உருவாக்கியது தான் இந்த ஹாட் ஏர் பலூன் .முதலில் வாத்து , ஆடு கோழி ஏற்றி அனுப்பி டெஸ்ட் செய்த பின் தான் அவர்களே அதில் பறந்து சென்றார்கள் .

20230507150218387.jpg

இப்படி உருவாகிய ஹாட் ஏர் பலூன் வெளிநாடுகளில் ஒரு பயணிகள் பலூனாகவே உருவாகிவிட்டது .அடுத்த வருடம் ஊட்டியில் சற்று பலூன் பறக்கும் முயற்ச்சி எடுக்கப்படும்" என்று கூறினார் .

20230507150422453.jpg

பெனடிக்ட் சாவியோ முதலில் துபாய் விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து எமிரேட் ஏர் லைன் உலக டூர் விளம்பரத்திற்காக ஹாட் ஏர் பலூன் அறிமுகம் செய்ய அது என் மனதில் பிடித்து போக அதை இந்தியாவில் ப்ரமோட் செய்ய எடுத்த முயற்சி தான் இது என்கிறார் .

ஒரு பலூனின் விலை ஐம்பது லட்சமாகுமாம் இது அமெரிக்காவில் தான் தயாரிக்க படுகிறது .

இந்த ஊட்டி 200 வருடத்தை சிறப்பிக்க இந்த பலூன் சாகசம் ஒரு சிறப்பு அம்சமாக அமைய சுற்றுலா துறை சார்பாக ஊட்டி 200 என்ற விளம்பர பலூனும் அந்தரங்கத்தில் பறந்தது .