பான் இந்தியா நட்சத்திரம்
தமிழ் படம் 2 மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். இப்போது ஸ்பை படம் மூலம் பான் இந்தியா நட்சத்திர நடிகையாக உயர்ந்து இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். இது தவிர இரண்டு தமிழ் படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்
சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு தற்சமயம் புதுச்சேரியில் நடக்கிறது. கடலுக்கு அருகில் சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் அமைத்துத் தந்திருக்கிறார்.
டிக்கெட் விற்றார்
டிக் டிக் டிக் சங்கத்தமிழன் திமிரு புடிச்சவன் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தற்சமயம் இவர் தெலுங்கில் பிசியான நடிகையாக இருக்கிறார். இவர் நடித்த தஸ்கா தம்கி என்ற தெலுங்கு படம் இரண்டு நாட்கள் முன்பு ரிலீசானது படத்தில் பிரமோஷனுக்காக வித்தியாசமாக செய்வதாக ஐதராபாத் திரையரங்கில் டிக்கெட் கவுண்டரில் தனது படத்துக்கு டிக்கெட் விற்பனை செய்தார் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த செய்தி பரவி வேறு படம் பார்க்க வந்தவர்கள் நிவேதா பெத்துராஜ் கையால் டிக்கெட் வாங்குவதற்காக டிக்கெட் கவுண்டர் முன்பு குவிந்தார்கள்.
பிள்ளையார் வேடத்தில் யோகி பாபு
யானை முகத்தான் படத்தில் விநாயகர் வேடத்தில் நடிக்கிறார் யோகி பாபு. இந்தப் படத்தில் யோகி பாபு இரட்டை வேடம் இந்தப் படத்தில் முதல் பாதி கதை சென்னையிலும் அடுத்த பாதி கதை ராஜஸ்தானிலும் நடப்பது போல் அமைந்திருக்கிறது.
மீண்டும் அபிராமி
பாபா பிளாக் ஷீப் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு மறுபிரவேசம் செய்து இருக்கிறார் விருமாண்டி பட நாயகி அபிராமி. இந்தப் படம் குழந்தை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை பற்றிய கதை ஒரு காட்சியில் அபிராமியின் நடிப்பை பார்த்து படக்குழு உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டது.
ஐம்பதாவது படத்தை இயக்கும்
வாத்தி படத்தை அடுத்து நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். அதற்கு அடுத்ததாக தனது ஐம்பதாவது படத்தை நடிகர் தனுஷ் தானே இயக்கி நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.
சாயிஷாவின் கவர்ச்சி நடனம்
நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார் சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார் சாயிஷா.
வெளி வருவதற்கு முன்பே லாபம்
இப்போது அதிக படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது நடிப்பில் நடித்து முடிந்த படம் சொப்பன சுந்தரி.இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை ஒன்றரை கோடிக்கும் ஓ டி டி வெளியிடும் உரிமை நாலு கோடிக்கும் வியாபாரம் ஆகி இருக்கிறது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவ்ளோ பணத்தை சம்பாதித்ததால் தயாரிப்பாளர் மகிழ்ச்சி.
Leave a comment
Upload