1.அரசியல் தலைவர்கள் ஒரு கருத்தை சொல்வதும் பிறகு மறுப்பதும் சரியா?
நன்றி: தினமணி
ஒரே கருத்தை விடாமல் சொல்லிக் கொண்டிருந்தால் அவர் அரசியல் தலைவர் அல்ல!
2.குழந்தைகள் மழலைப் பேச்சை ரசிப்பீர்களா?
ரசிப்பேன்.ஆனால் சில சமயம் புரிய மாட்டேன் என்கிறது!
3.ரஜினிகாந்த் அரசியல் வேண்டாம் முடிவு சரிதானா?
ரொம்ப சரிதான். ரொம்ப அல்லல் படுத்தி விடுவார்கள். சுதந்திரம் பறி போகும். வேண்டிய புகழ் அவருக்கு இப்போதே இருக்கிறது!
4.முதல் நாள் முதல் ஷோ பார்த்த அனுபவம் உண்டா?
பலமுறை. பள்ளிப்பருவத்தில் க்யூவில் தலைக்கு மேலெல்லாம் நடந்து போய் டிக்கெட் வாங்கியிருக்கிறேன்!
5.காஷ்மீர் போயிருக்கிறீர்களா?
ரொம்ப ஆசை. இதுவரை வாய்ப்பு கிடைக்க வில்லை. அந்தக்காலத்தில் 'தேன்நிலவு' படத்தில் பார்த்ததோடு சரி!
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: vikatakavi.weekly@gmail.com
Leave a comment
Upload