தொடர்கள்
கவர் ஸ்டோரி
இரட்டை இலை எடப்பாடிக்கு--விகடகவியார்

20230110174038325.jpg

எடப்பாடியை பொருத்தவரை ஓபிஎஸ் தினகரன் சசிகலா வேண்டாம் இரட்டை இலை சின்னத்தை முடக்கினாலும் சுயேச்சை சின்னத்தில் நாங்கள் போட்டி போடுவோம் என்றார். அதேசமயம் இரட்டை இலைக்கான சட்டப் போராட்டத்தை அவர் கைவிடவில்லை. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இடைக்கால தீர்ப்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடுவார் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக் கொண்டு இரட்டை இலை சின்னத்தை அந்த வேட்பாளருக்கு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

20230110182417105.jpg

இது சம்பந்தமான வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நீங்கள் எந்த முடிவு எடுக்க வேண்டாம். நாங்கள் முடிவை சொல்கிறோம் என்று இந்த தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி வழங்கினார். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பக்கம் இருப்பதாலும் தமிழ் மகன் உசேன் எடப்பாடி ஆதரவாளர் என்பதாலும் விஷயம் சுலபமாக முடிந்தது தமிழ் மகன் உசேன் சிவி சண்முகம் இருவரும் பொதுக்குழு உறுப்பினர்கள் தென்னரசை வேட்பாளராக பரிந்துரை செய்த விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்திடம் தந்த சில மணி நேரங்களில் தென்னரசு அதிமுக வேட்பாளர் அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

ஓபிஎஸ் தரப்பு கிட்டத்தட்ட அனாதையாகி விட்டார்கள். நான் கையெழுத்து போட்டால் தான் இரட்டை இலை கிடைக்கும் என்றார் ஓபிஎஸ். நான் இப்போதும் ஒருங்கிணைப்பாளர் என்றார் இவை எல்லாவற்றையும் விட பாரதிய ஜனதாவை வலிய போய் ஆதரித்தார் பாரதிய ஜனதா ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர் நிறுத்தினால் நாங்கள் ஆதரிப்போம் என்றார். ஆனாலும் கட்சி எடப்பாடியிடம் தான் இருக்கிறது என்பதை சற்று காலதாமதமாக புரிந்து கொண்டது பிஜேபி.

20230110182327626.jpg

அதிமுக வேட்பாளரை ஆதரிப்பதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் எடப்பாடியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு இருந்தார் அண்ணாமலை. நீதிமன்றம் பொதுக்குழு எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்ததை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை பாரதிய ஜனதா எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு விட்டது என்பதைத்தான் அந்த அறிக்கை சொல்கிறது.

வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு அண்ணாமலையை எடப்பாடி அழைத்தார் மத்திய அமைச்சர் முருகனுடன் அண்ணாமலை மூன்று நாள் பயணமாக இலங்கை செல்வதால் தான் சார்பாக சிபி ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என்று எடப்பாடியிடம் சொல்லி இருக்கிறார். அண்ணாமலை மூன்று நாள் பயணம் முடிந்து சென்னை திரும்பியதும் அண்ணாமலை ஈரோடு கிழக்கில் போய் பிரச்சாரம் செய்வாரா என்பது இன்று வரை சஸ்பென்ஸ் தான். அதேசமயம் பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி சொல்லி இருக்கிறார் அதாவது அதிமுக தலைமையில் என்று அதேசமயம் பாரதிய ஜனதா விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் காய் நகர்த்துகிறார் எடப்பாடி.