தமிழகத்தில் மிக பெரிய அளவில் அறிய வன உயிரின விலங்குகள் மாயமாகியுள்ளன இதற்கு முக்கிய காரணம் இந்த விலங்குகள் தொடர்ந்து வேட்டையாட பட்டுக்கொண்டிருப்பது தான் .
கடந்த 2022 மார்ச் மாதம் சென்னையை சேர்ந்த சசி என்பவர் யானை தந்தங்களை தன் வாட்சப் ஸ்டேட்டஸாக போட்டு விட அதை கவனித்த வனத்துறை அவரை வளைத்து பிடித்து விசாரிக்க , தமிழகத்தில் மிக பெரிய வேட்டை கும்பல் சைலண்டாக பல வன உயிரினங்களை கொன்று வியாபாரத்தில் முழ்கியுள்ளது தெரிய வந்துள்ளது .
திருப்பூர் மற்றும் தேனி பகுதிகளில் இருந்து யானை தந்தங்கள் மோட்டார் பைக்கில் கடத்த பட்டது தெரிய வந்துள்ளது . அண்மையில் தமிழக வனத்தில் இருந்து ஒரு சிறுத்தையின் நகங்களும் தோல் மற்றும் எலும்புகள் கர்நாடகாவில் விற்பனை செய்த தகவல் வனத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த வருடம் மட்டும் 18 வன விலங்கு வேட்டைக்காரர்கள் பல வகைப்பட்ட அறிய விலங்குகளை வேட்டையாடியுள்ளனர் .இவர்களுக்கு உதவியாக மோசடி வியாபாரிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் மற்றும் தின கூலிகள் மூலம் காடுகளில் இருந்து விலங்குகளின் தோல்கள் மற்றும் எலும்புகள் கடத்த பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது .
சென்னை விமான நிலைய கஸ்டம் அதிகாரிகள் வெளிநாட்டிற்கு கடத்த இருந்த 134 அரிய வன விலங்குகளின் உடற்கூறுகளை கைப்பற்றுள்ளனர் .
இப்படி 11 முறை இந்த கடத்தல் முயற்ச்சி பிடிக்கப்பட்டுள்ளது .
பல மிருக விரும்பிகள் சமூக வலைத்தளங்களில் கிளிகள் , குரங்குகள் , பெரும் சிலந்தி , மலை பாம்பு , யானை தந்தங்கள் விற்பனை குறித்து விளம்பரமும் செய்து வருகின்றனர் .
அதிலும் விலங்கு உடல் பாகங்களுக்கு ஆன்ட்டிக் கடைகள் , மர வேலைப்பாடுகள் மற்றும் நாட்டு மருந்துகள் தயாரிப்புக்கு உபயோகிக்க விற்பனை செய்யப்படுகிறது .
இந்த வன உயிரின ஜீவன்களை வேட்டையாடுவதை வன துறையால் தடுக்கமுடியவில்லை என்பது தான் வருத்தமான ஒன்று .
தமிழக வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாச ரெட்டி கூறுகிறார் , " வன உயிரினங்களை வேட்டையாடுபவர்களை எங்களால் பிடிக்க முடியவில்லை . அந்த விலங்குகளின் கூறுகளை எடுத்து செல்லும் போக்குவரத்து ஓட்டுநர்களை தான் பிடிக்க முடிகிறது .இந்த வேட்டையில் ஈடுபடுபவர்கள் ஒரு பெரிய குற்ற குழுவாக செயல் படுவதால் இவர்களை நெருங்க முடியவில்லை".
யானை முடியை எடுத்து பிரேஸ் லெட்டில் பொருத்தி அணிந்தால் உடலுக்கு நல்லது மற்றும் எந்த தீட்டும் அண்டாது என்ற மூட நம்பிக்கை வேறு .மேலும் புலி நகத்தை கழுத்தில் அணிந்தால் உடலுக்கு நல்லதாம் அதனால் பணக்காரர்கள் அதிக பணம் கொடுத்து வாங்குவதால் புலி வேட்டையும் அரங்கேறுகிறது .
இப்படி வன உயிரினங்கள் சர்வசாதாரணமாக வேட்டையாடப்பட்டு விற்பனையும் செய்வது ஒரு தொடர்கதை .
இதை தடுக்க, குற்றவாளிகளை பிடிக்க வன துறையிடம் பிடிக்க சரியான படைகள் இல்லை .1972 வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி ஒரு காட்டு விலங்கை கொன்றால் மூன்று ஆண்டு சிறை அதே சமயம் பெயிலில் குற்றவாளி வெளியே வந்து மீண்டும் வேட்டையை துவங்குவது வேடிக்கையான ஒன்று என்கிறார் ஒரு வன அலுவலர் .
வன துறையினருக்கு ஒரு வருடத்தில் நூறு உளவு தகவல் வேட்டை தொழிலை பற்றி கிடைத்தாலும் இவர்களிடம் சரியான ஆட்கள் இல்லை .காவல் துறை மற்றும் மற்ற முக்கிய அரசு துறையுடன் சுமுகமான உறவு பாலம் இல்லை என்பது தான் உண்மை .
மேலும் சட்டம் பணக்காரர்களுக்கு வேறு விதமாக செயல்படும். நம்மூரில் அறிய வகை மானைக் கொன்ற நடிகர் கொஞ்சநஞ்ச கூச்சமும் இல்லாமல் வளைய வரவில்லையா ???
தமிழகத்தில் நாற்பத்தி ஐந்து வன உயிரின பிரிவுகள் உள்ளன அவைகளில் ஒரு ரேஞ்சர் அதிகாரி , வன துறை அலுவலர் இரண்டு வன உயிரின பாதுகாவலர்கள் , மற்றும் வாட்சர் இவர்கள் தான் தங்களின் உயிரை பணையம் வைத்து செல்கின்றனர் எந்த செலவும் தங்கும் வசதி செய்து கொடுப்பது இல்லை என்ற வருத்தம் வேறு .
மாநில சுற்றுசூழல்செயலர் சுப்ரியா சாகு கூறுகிறார் , " வனத்துறையை புதுப்பிக்கவும் நவீன படுத்தவும் பாதுகாப்புக்காகவும் 52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது விரைவில் அந்த பணிகள் துவங்கும் " என்கிறார் .
வன உயிரின இயற்கை பாதுகாப்பு ஆர்வலர் சிவதாஸ் அவர்களிடம் பேசினோம் , " இந்த வன உயிரின விலங்குகளின் வேட்டை என்பது நாடு முழுவதும் நடந்த வண்ணம் உள்ளது இதை தடுத்து நிறுத்துவது வன துரையிடம் எந்த சரியான பாதுகாப்பு யுக்திகளும் தடுத்து நிறுத்த காவல் துறைக்கும் இவர்களுக்கும் சரியான தொடர்பு இல்லை .
மேலும் நம் காடுகளில் வேட்டையாடும் சிறுத்தை , புலி , யானை , கிளிகள் , பாம்புகள் ,அரிய ஓணான் என்று அனைத்தையும் வேட்டையாடி சீனாவுக்கு கடத்துவது சகஜசம் .அங்கு தான் பல மருந்துகள் உணவு என்று எல்லா செயல் பாடுகளும் கச்சிதமாக கடத்தல் வேலை தொடர்கிறது .
ஸ்டார் மீன் , ஆமைகள் , உடும்பு , கருங்குரங்கு, பறவைகள் என்று படு ஈசியாக வேட்டையாடி வெளிநாட்டிற்கு கடத்துவது சாதாரண விஷயம் .
யானை தந்தம் , குரங்கு கறி , மயில்களின் இறகுகள் அறிய பறவைகள் கடத்த படுகின்றன.
அலங்கார பொருட்கள் செய்யவும் , மருத்துவ தயாரிப்புக்கு எடுத்து செல்கின்றனர் . அறிய வகை கிளிகள் பிடிக்கப்பட்டு கூண்டுகளில் அடைத்து வைத்து அழகு பார்க்கின்றனர் . சமீபத்தில் காட்டு பன்றிகள் மிஸ்ஸிங் .
இதை தடுத்து நிறுத்த முடியாமல் தவித்து கொண்டிருக்கிறது வன உயிரின துறை .
மொத்தத்தில் வனத்துறை பின்தங்கியுள்ளது என்ற வருத்தம் உண்டு தக்க நடவடிக்கைகளை அரசு எடுக்காவிட்டால் காடும் காட்டு விலங்குகளும் காணாமல் போய்விடும் என்கிறார் .
எதோ நீலகிரி புலிகள் காப்பகமான முதுமலை வனத்தில் உள்ள புலிகள் இந்த வேட்டை கடத்தல் கும்பலிடமிருந்து தப்பித்துள்ளது. அதே சமயம் தமிழக வன உயிரினத்துறை தத்தளித்து கொண்டிருப்பது என்பது உண்மை.
எது விலங்குகள் ?
தன் உணவுக்காக அன்றி பிற உயிர்களை சாதரணமாக உயிரினங்கள் வேட்டையாடாது.
இப்படிப் பட்ட வன உயிரினங்களை வேட்டையாடி பிழைப்பு நடத்தும் மனிதர்கள் தான் உண்மையான விலங்குகள். இவர்களை யார் வேட்டையாடி நிறுத்துவது ??
Leave a comment
Upload