தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

மாணவர்களுக்கு நயன்தாரா அட்வைஸ்

20230109210857272.jpg

பெற்றோர்களிடம் தினம் சில நிமிடங்கள் பேசுங்கள். பெற்றோர்கள் நமக்காக படும் கஷ்டங்களை மாணவர்கள் உணர வேண்டும். அவர்களுக்கு மரியாதை கொடுங்கள். கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகு எத்தனை உயரத்துக்கு போனாலும் கஷ்டப்பட்ட காலங்களை மறந்து விடாதீர்கள் பணிவாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். கல்லூரி விழாவில் மாணவ மாணவிகளுக்கு நயன்தாரா சொன்ன அறிவுரை தான் இது.

மீண்டும் பிந்து மாதவி

20230110171821245.jpg

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் யாருக்கும் அஞ்சேல் சசிகுமாருடன் பகைவனுக்கும் அருள்வாய் மற்றும் மாயன் படத்தில் நடித்து வரும் பிந்து மாதவி நடிப்பில் சிறு இடைவெளி வீழுந்துருப்பது உண்மைதான். அது நானாக ஏற்படுத்தியது கிடையாது நல்ல கதை அமையாமல் போனது தான் காரணம் என்று தன்னிலை விளக்கம் சொன்னார் பிந்து மாதவி.

வேண்டாம் ஜாதி

20230110172211389.jpg

வாத்தி படத்தில் நடிக்கும் சம்யுக்தா மேனன் தயவு செய்து என்னை சம்யுக்தா என்று அழையுங்கள். எந்த ஒரு ஜாதிப் பெயரையும் நான் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை வாத்தி பட டைட்டில் கார்டில் கூட சம்யுக்தா என்று தான் போட்டு இருக்கிறார்கள் பள்ளியில் நான் சேரும் போது பெரியவர்கள் என் ஜாதிப்பெயரும் சேர்த்து சம்யுக்தா மேனன் என்று சேர்த்து விட்டார்கள். இப்போது மாற்றிக் கொள்வது என் விருப்பம் தானே அதுதான் மாற்றி விட்டேன். நான் பிளஸ் டூ மட்டுமே படித்தவள் தனது கல்வித் தகுதியையும் வாத்தி இசை வெளியீட்டு விழாவில் சம்யுக்தா சொல்லிவிட்டார்.

நளினி பாட்டி

20230110173249877.jpg

1988-இல் வெளிவந்த படம் பாட்டி சொல்லை தட்டாதே மனோரமா எஸ்.எஸ்.சந்திரன், பாண்டியராஜன் நடித்தது இப்போது பாட்டி சொல்லை தட்டாதே படத்தை மீண்டும் தயாரிக்கிறார்கள் இதில் நளினி, ஆர்.சுந்தர்ராஜன், எம்.எஸ். பாஸ்கர் பாண்டியராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள் இதன் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.

கங்கணா ராவத்

20230110172519853.jpg

தலைப்புச் செய்தியாக ஏதாவது சொல்வது தான் நடிகை கங்கணா ராவத் வழக்கம். நடிகர் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி திருமண வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அவர்கள் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து. இந்த காதல் ஜோடி எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சினிமா துறையில் உண்மையான காதலை பார்ப்பது அரிதாகி விட்டது இவர்கள் ஒற்றுமை பார்ப்பதற்கு தெய்வீகமாக உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார் கங்கணா ராவத்.

பேபி நடிகை

20230110172746150.jpg

2011-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளி வந்த தெய்வத்திருமகள் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் பேபி சாரா. அதற்குப் பிறகு குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சிறுவயது நந்தினி வேடத்தில் நடித்தார் நடிகை பேபி சாரா. இப்போது கொட்டேஷன் கேங் என்ற திரைப்படத்தில் பிரியாமணி ஜாக்கி ஷரப் சன்னி லியோன் ஆகியோருடன் சாராவும் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகை சாரா கையில் சிகரட்டை புகைத்த படி சாரா நடித்திருக்கிறார் தற்போது சமூக வலைத்தளத்தில் நடிகர் சாராவுக்கு கடும் எதிர்ப்பும் விமர்சனமும் புகைப்பிடிக்கும் காட்சி காரணமாக வரத் தொடங்கி இருக்கிறது.

காஷ்மீர் குளிரில் திரிஷா அவஸ்தை

20230110172936716.jpg

விஜயின் லியோ படத்தில் திரிஷா இணைந்து நடிக்கிறார் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. இந்த சூழ்நிலையில் திரிஷா விஜய் நடிக்கும் லியோ படத்திலிருந்து விலகிவிட்டார் என்று வதந்தியை யாரோ கொளுத்தி போட்டு விட்டார்கள். ஆனால் உண்மையில் நடந்தது இதுதான். காஷ்மீர் படப்பிடிப்புக்கு போன திரிஷாவிற்கு காஷ்மீரின் கடும் குளிர் ஒத்துக்கொள்ளவில்லை தனது படப்பிடிப்புக் காட்சிகள் முடிந்ததும் இடைவெளியில் டெல்லியில் சில நாட்கள் தங்கினார் தனது படப்பிடிப்புக் காட்சிகள் வரும்போது மீண்டும் காஷ்மீர் போனார் இதுதான் உண்மையில் நடந்தது லோகேஷ் கனகராஜ் காஷ்மீரில் இரண்டு மாதம் சூட்டிங் நடத்த முதலில் திட்டமிட்டு இருந்தார் கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்த நாட்களில் காஷ்மீர் சூட்டிங் முடித்துக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறார் என்று திரிஷாவின் அம்மா திருமதி உமா தந்து விளக்கம் இது.

கதாநாயகன் எம் எஸ் பாஸ்கர்

நகைச்சுவை நடிகர் குணச்சித்திர நடிகராகவும் நடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர் அக்ரான் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் இயக்குனர் அருண் பிரசாத் எம்.எஸ்.பாஸ்கர் இந்தப் படத்தில் விவசாயி அவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகள் தேர்வு எழுத செல்லும் போது அரசியல் காரணமாக கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார் அவரை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் கதை இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கருக்கு சண்டைக் காட்சிகள் உண்டு என்கிறார் இயக்குனர்.

மலையாள நடிகை ஜோடி

20230110173110461.jpg

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் புதிய படத்தில் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி ஜோடி இசை யுவன் சங்கர் ராஜா.