தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20230109211524527.jpeg

குக்கர் கிடைக்கவில்லை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் வாபஸ் டிடிவி தினகரன்

சரி விடுங்க டெபாசிட் பணம் மிச்சம்

நீதிபதிகள் செயல்பாடு கண்காணிக்கப்படும் உச்சநீதிமன்றம்

நீதிக்கு வந்த சோதனை இதுதான்

அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு அண்ணாமலை அறிவிப்பு

வலிமையான வேட்பாளர் தான் செக் பண்ணிங்களா தலைவரே

ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க வாய்ப்பு இல்லை முன்னாள்அமைச்சர் ஜெயக்குமார்

திரும்பத் திரும்ப சொல்றீங்க திரும்பத் திரும்ப சொல்றீங்க

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கிரானைட் கற்கள் கடத்தல் தடுத்து நிறுத்த தலைமைச் செயலாளருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

தலைமைச் செயலர் சொன்னா கடத்தல் நின்று போய்விடும் என்று யாரோ இவருக்கு தப்பா சொல்லி இருக்காங்க

பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு என்ன நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி

கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது தலைவரே

அதிகாரம் என் கைக்கு வரும்போது பேனா சின்னத்தை உடைப்பேன் சீமான்

அதாவது அத்தைக்கு மீசை முளைத்தால் தானே தலைவரே அப்ப பாத்துக்கலாம்

இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் தென்னரசு வெற்றி பெற அல்ல ஓபிஎஸ் ஆதரவாளர் குபா கிருஷ்ணன்

உங்களை யார் கூப்பிட்டாங்க நீங்க லிஸ்டிலேயே இல்லையே

கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது அவசியம் கே எஸ் அழகிரி

ஆமாமா உங்களை அப்படித்தானே சொல்ல சொல்லி இருக்காங்க

தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்று புதிய கட்சியை தொடங்கினார் பழ கருப்பையா

தேர்தல் ஆணையம் மீது நடிகருக்கு என்ன கோபமோ தெரியல பாவம் பழி வாங்குகிறார்

இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் அதிமுக வெற்றி பெற முடியாது டிடிவி தினகரன்

குக்கர் சின்னம் கிடைத்தால் உங்களுக்கு டெபாசிட் கிடைக்குமா அதை சொல்லுங்க முதல்ல

சாலை விபத்தை குறைக்க டேராடூனில் பயிற்சி

இதற்கு எதற்கு பயிற்சி சாலை ஒழுங்கா இருந்தா விபத்து குறையுமே

பேனா சிலை அவசியம் தானா என்று கேள்வி எழுகிறது கே பாலகிருஷ்ணன்

காம்ரேட் முதல்ல தொடர்ந்து முரசொலி படிங்க உங்க கேள்விக்கு விடை அதில் இருக்கு

இரட்டை இலை சின்னத்தால் எந்த மாற்றமும் நிகழாது அமைச்சர் செந்தில் பாலாஜி

அதாவது கவனிப்பு எல்லாம் ஜாஸ்தியா பண்ணிட்டு அமைச்சர் இப்படி தைரியமா பேசுறாரு

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை யாரும் குறை சொல்லவில்லை பிரதமர்

அந்த யாரும் யார் யார் பிரதமர் சார் அத சொல்லுங்களேன்