தொடர்கள்
கவர் ஸ்டோரி
புள்ளிங்கோ !! எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை. - ஜாசன்.

20230021003930571.jpeg

தமிழ்நாட்டில் சினிமா ஒரு முக்கிய அங்கம் கதாநாயகர்கள் எப்போதும் கொண்டாடப்படுவார்கள். தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து தொடங்கப்பட்டது. ஆனால், எம்ஜிஆர் காலத்தில் ரசிகர்கள் எம்ஜிஆரை கொண்டாடியது வேறு மாதிரியாக மாறியது. எம்ஜிஆரை அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினராகவே பாவித்தார்கள்.

20230021004440932.jpeg

எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலத்தில் ஒருமுறை அண்ணாவின் கார் விழுப்புரம் அருகே ரயில்வே கேட் மூடி இருந்ததால் காரை நிறுத்தி இருந்தார். அண்ணா காரை விட்டு இறங்கி வெளியே வந்து நின்றார். அப்போது அங்கு வந்த கிராமத்து பெரியவர் ஒருவர் திமுக கொடியை பார்த்துவிட்டு "நீங்கள் எம்ஜிஆர் கட்சியை சேர்ந்தவரா "என்று அண்ணாவைப் பார்த்து கேட்டார் அண்ணா "ஆமாம் நான் எம்ஜிஆர் கட்சி தான்"என்றார். திமுகவை தொடங்கியவர் அண்ணாதான் என்றாலும் பாமரனுக்கு திமுக எம்ஜிஆர் கட்சியாக தான் தெரிந்திருக்கிறது. இதுதான் எம்ஜிஆர். அண்ணா தனது இந்த அனுபவத்தை சம நீதி இதழில் பெருமையாக குறிப்பிட்டார். எம்ஜிஆர் இந்த கட்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அண்ணா தெரிந்து கொண்டிருந்தார். கருணாநிதிக்கு அது தெரியவில்லை அதனால் தான் எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கியதும் அவரது ரசிகர்களும் திமுகவை விட்டு லட்சக்கணக்கில் விலகினார்கள்.

20230021004533384.jpg


எம்ஜிஆர் இல்லாத கட்சியில் நமக்கு என்ன வேலை என்பதுதான் அந்த ரசிகர்களின் நிலைப்பாடு. எம்ஜிஆர் ரசிகர்களைக் கொண்டாடினார் அவரிடம் தேவை என்று கேட்டவர்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் அவர்.அவர் கட்சி தொடங்கியதும் தனது ரசிகரான சைதை துரைசாமியை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய வைத்தார். திருச்சி சௌந்தர்ராஜன் அமைச்சராக்கி அழகு பார்த்தார். முசிறி புத்தன் ஐசரி வேலன் ஆகியோரை எம்எல்ஏவாக ஆக்கினார். எம்ஜிஆர் எந்த சூழ்நிலையிலும் தனது ரசிகர்களை மறந்தது கிடையாது. பூலாவரி சுகுமாரன் என்ற ஒரு ரசிகர் தேர்தல் பணியின் போது திமுகவினர் வெட்டி கொன்று விட்டார்கள். அவர்கள் குடும்பத்தை அப்படி தாங்கினார். எம்ஜிஆர் பூலாவரி சுகுமாரன் சகோதரி விஜயலட்சுமி பழனிச்சாமியை அமைச்சர் ஆக்கினார். இப்படி எம்ஜிஆர் பற்றி அவர் ரசிகர்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். எம்ஜிஆருக்கு ஈடு இணை எம்ஜிஆர் தான் வேறு யாரும் கிடையாது.
இப்போது ரஜினி அஜித் விஜய் படங்களின் டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் 500 ரூபாய் என்று அநியாய கொள்ளை நடக்கிறது. எம்ஜிஆர் சிவாஜி பட ரிலீஸ் இன் போது இந்தக் கொள்ளைகள் எல்லாம் கிடையாது அதேபோல் அதிகாலை காட்சி நள்ளிரவு காட்சி என்று ரசிகர்களை எம்ஜிஆர் சிவாஜி துன்புறுத்தியது கிடையாது. இப்படி தவறான வழிகாட்டுதலை தங்கள் ரசிகர்களுக்கு அவர்கள் என்றுமே செய்தது கிடையாது.

20230021004632451.jpg

ஒருமுறை இயக்குனர் பாரதிராஜா உச்சத்தில் இருந்த போது ஒரு தயாரிப்பாளரிடம் அவரது படம் பற்றி பேசும் போது இந்தப் படம் உங்களுக்கு மத்திய அரசு விருதான தங்கமயில் விருது வாங்கித் தரும் என்று பெருமையாக சொன்னார்.அப்போது தயாரிப்பாளர் என்னிடம் தங்க சுரங்கமே இருக்கிறது என்று சொல்லி எம்ஜிஆர் நடித்த ஐந்து படங்களை பட்டியல் போட்டு சொல்லி அதன் விநியோகஸ்தர் உரிமை என்னிடம் இருக்கிறது.எனக்கு எப்போதெல்லாம் பணத்தட்டுப்பாடு வரும்போது கபாலி காமதேனு வெலிங்டன் ஸ்டார் ஆகிய திரையரங்குகளில் ஏதாவது இரண்டு திரையரங்குகளில் எம்ஜிஆர் படத்தை திரையிடுவேன் ஒரு வாரம் பத்து நாள் போதும் பணம் கொட்டும் என்று சொல்லி இருக்கிறார் அதன் பிறகு பாரதிராஜா தங்கமயில் பற்றி பேசவில்லை

20230021004338612.jpeg

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அவருக்கு பாதுகாவலர் யாரோ ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 15,000 வாங்கி விட்டார்.இந்த விஷயம் எப்படியோ எம்ஜிஆர் காதுக்கு எட்டியது இது உண்மைதானா என்று விசாரித்தார் உண்மை என்று தெரிந்ததும் அந்தப் பணம் தந்தவரை அழைத்து உங்களிடம் நிறைய பணம் இருக்கிறதா எதற்கு இப்படி பணமெல்லாம் கொடுத்து வேலை கேட்கிறீர்கள் இந்த ஆட்சியில் தகுதி உள்ள எல்லோருக்கும் வேலை தரப்படும் அதற்கு லஞ்சம் எல்லாம் யார் கேட்டாலும் தராதீர்கள் என்று சொல்லி அவரிடம் தன சொந்த பணத்திலிருந்து பதினைந்தாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பினார்.அந்த பாதுகாவலரை பணி நீக்கம் செய்தார்.இந்த விஷயம் எப்படியோ எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதிக்கு தெரிந்து விட்டது சட்டசபையில் முதலமைச்சர் எம்ஜிஆர் அவமானப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ராமாவரம் தோட்டத்தில் லஞ்சம் எல்லாம் வாங்குகிறார்களாம் உண்மையா என்று கேள்வி கேட்க முதல்வர் எம்ஜிஆர் எழுந்து நீங்கள் சொன்னது உண்மைதான் என்று நடந்தது எல்லாவற்றையும் சட்டசபையில் வெளிப்படையாக தெரிவித்தார்.அதன் பிறகு கருணாநிதி யால் எதுவும் பேச முடியவில்லை எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆர் பொய் சொல்ல மாட்டார் என்று நம்பினார்கள் அந்த நம்பிக்கையை கெடுக்காமல் பார்த்துக் கொண்டார் எம்ஜிஆர். எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் உண்மையில் ஒவ்வொரு ரசிகனுக்கும் உள்ளே தமிழகத்தில் உறைந்திருந்தது.

20230021004711980.jpeg
ரஜினிக்கு ரசிகர்கள் இருந்தார்கள் ரஜினி படத்தில் எம்ஜிஆர் மாதிரி நல்லவராக எல்லாம் நடிக்கவில்லை சிகரெட் பிடித்தார் தண்ணி அடித்தார் கற்பழிப்பு காட்சிகளில் கூட நடித்தார் ஆனாலும் அவரது ரசிகர்கள் அதை ரசித்தார்கள். ரஜினி ரசிகர்களை ஏமாற்றியது எப்போது என்றால் நான் அரசியலுக்கு வருவேன். 234 தொகுதிகளிலும் போட்டி போடுவேன். தனி கட்சி தொடங்குவேன் என்று சொன்னபோது அவரது ரசிகர்கள் தங்களை எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், கவுன்சிலர்கள், மேயர்கள் என்று கனவு காண ஆரம்பித்தார்கள். திடீரென நான் அரசியலுக்கு வரவில்லை இன்று ரஜினி பல்ட்டி அடித்ததும் ரசிகர்களிடம் ரஜினி என்ற இமேஜ் பிம்பம் உடைந்து சுக்கு நூறானது வலைதளங்களில் நம்பிக்கை துரோகி ஏமாற்றுப் பேர்வழி என்றெல்லாம் ரஜினியை விமர்சனம் செய்தார்கள். எம்ஜிஆர் தனது ரசிகர்களை எப்போதும் ஏமாற்றியது கிடையாது.

20230021100958888.jpg20230021114603424.jpg

இதேபோல் ரசிகர்களை அதிக அளவு கொண்டாடியது நடிகர் விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் என்று ரசிகர்கள் அவரைப் பாசமாக அழைத்தார்கள். நடிகர் விஜயகாந்தும் தனது ரசிகர்களை கொண்டாடினார் தேவை என்று அவரிடம் கேட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கினார். அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொன்னவர்கள் கூட உண்டு. அவரது அரசியல் கட்சியும் அவரது ரசிகர்கள் நம்பித்தான் இருந்தது அவருக்கென்று ஒரு வாக்கு வாங்கி உருவாகுவதற்கு காரணம் அவருக்கும் ரசிகர்களுக்கும் இடையே இருந்த உறவு பாலம் தான்.

20230021004919256.jpg
விஜய் ரசிகர்கள் உறவு என்பது அவரது படத்தை பிரமாதப்படுத்திக் கொள்வதற்காக என்பது போல் தான் இதுவரை இருக்கிறது. இது ரஜினிக்கும் பொருந்தும் ரஜினியும் தனது சுயலாபத்துக்காக தான் ரசிகர்களை பயன்படுத்தினார். ரஜினிக்கு அடுத்து விஜய்க்கும் அரசியல் கனவு இருக்கிறது. சமீபத்தில் அவரது ரசிகர்களை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வைத்து கணிசமாக வெற்றி பெற்று இருக்கிறார்கள். இப்போதும் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்திக்கிறார் பாராளுமன்றத் தேர்தலில் விஜய் ரசிகர்கள் போட்டியிட வாய்ப்பு என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது. அதே சமயம் எம்ஜிஆருக்கு பிறகு தனிக்கட்சி ஆரம்பிச்ச நடிகர்கள் வெற்றி பெற்றதாக தெரியவில்லை காரணம் எம்ஜிஆர் மக்களுக்காக சிந்தித்தார் மற்ற நடிகர்கள் தங்களுக்காக சிந்தித்தார்கள் என்ற காரணமாக அது இருக்கலாம் இது விஜய்க்கும் பொருந்தும் கார்ப்பரேட் கம்பெனிகள் பற்றி வசனம் பேசும் விஜய் படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் கம்பெனிகள் தான்.

20230021005006790.jpg
அஜித் ரசிகர் மன்றமே வேண்டாம் என்று தெளிவுபட சொல்லிவிட்டார். அஜித்தை பொருத்தவரை சினிமாவில் நடிப்பதோடு என் வேலையை முடிந்து விட்டது என்று ஒதுங்கி விடுவார் படத்தின் பிரமோஷன் வேலைக்கு மேடையில் தோன்றும் வழக்கமெல்லாம் அஜித்துக்கு என்றுமே கிடையாது. அது என் வேலை அல்ல தயாரிப்பாளர் வேலை என்று தெளிவுபட சொல்லிவிடுவார். அஜித் ரசிகர் மன்றம் வேண்டாம் என்று சொன்னாலும் அஜித்துக்கு என்று ஒரு கும்பல் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. கட்டவுட் பால் அபிஷேகம் போன்றவை எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் அஜித் ரசிகர் ஒருவர் துணிவு படம் பார்த்துவிட்டு லாரி மேல ஏறி நடனம் ஆடும் போது கீழே விழுந்து இறந்து போனார். அதற்காக அவர் அலறி அடித்துக் கொண்டு ஓடிப்போய் அஞ்சலி செலுத்தி நிதி உதவி எல்லாம் செய்யவில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக கூட அவர் கண்டுகொள்ளவில்லை. அதுதான் அஜித். (அப்படி ஒரு வேளை செய்திருந்தாலும் அது ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு ரசிகர்கள் கூட்டம் கிள்ம்பியிருக்கும் அதை அஜித் விரும்பவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம்).

20230021005216584.jpg

19 வயதான இளைஞர் பரத் குமார் மரணம் பற்றி கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் நிருபர்கள் கேட்டனர்.அதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் "ரசிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் இது வெறும் சினிமா தான் உயிரை விடும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை.சந்தோஷமாக படத்தைப் பாருங்கள் பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டுக்கு சென்றாலே போதும் உயிர் போகும் அளவுக்கு கொண்டாட்டம் எல்லாம் தேவையில்லை என்று கருத்து சொன்னார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

20230021005634613.jpeg

இப்போது இருக்கும் நடிகர்களுக்கு இதுதான் பொருந்தும் உண்மையும் கூட எல்லோரும் எம்ஜிஆர் அல்ல இதைப்போல் இன்றைய தலைமுறை ரசிகர்கள் தெரிந்து கொண்டு தங்கள் வேலையை பார்க்க போவது உத்தமம் இன்றைய சினிமா ஒரு டைம் பாஸ் பொழுதுபோக்கு அவ்வளவுதான்.

இதை ஒரு இயக்குனரே தைரியமாக சொல்லியதற்கு அவரை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.