தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

20221131080143305.jpg

இந்த வாக்குறுதியை மட்டும் ......

"என்னால் என் மகனை காப்பாற்ற முடியவில்லை மது அருந்துபவர்களுக்கு பெண்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் " மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் இப்படி ஒரு உருக்கமான வேண்டுகோளை விடுத்திருக்கிறார். எனது மகனை என்னால் காப்பாற்ற முடியவில்லை எனது மருமகள் விதவையானார் . எனது பேரனுக்கு இரண்டு வயது. இது போன்ற சோகத்தில் இருந்து உங்கள் மகள் மற்றும் சகோதரிகளை காப்பாற்றுங்கள் குடிகார அதிகாரியை விட குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளி சிறந்த மாப்பிள்ளையாக என்று ஒரு பொது நிகழ்ச்சியில் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வார்த்தைகள் உண்மையில் வலி நிறைந்தவை. இதே கொடுமைகள் தான் தமிழ்நாட்டில் தெருத்தெருவாக நடந்து வருகிறது அவர்களின் குரலாக தான் அமைச்சர் பேசியிருக்கிறார். குடி குடியைக் கெடுக்கும் என்று மது பாட்டிலில் குறிப்பிட்டதுடன் தனது வேலை முடிந்தது என்று ஆளும் அரசு முக்கிய பண்டிகை தினங்களில் இலக்கு வைத்து மது விற்பனை பெருகுவதில் கவனம் செலுத்துகிறது. இந்த வருமானம் பெண்களின் சாபம் என்பதை தனது சௌகரியத்துக்காக அரசாங்கம் மறந்து போகிறது. அரசாங்கமே மது வருமானத்தை நம்பி இருப்பது தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சோகம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று திமுக சொல்லியது. திமுக தேர்தலின் போது சொன்ன எத்தனையோ வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்ற வாக்குறுதியை யாவது நிறைவேற்றி தாய்மார்களின் அன்பையும் நன்றியையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். குடும்பம் இனிமையான சூழல் பெருமானால் மற்ற வாக்குறுதி பற்றி மக்கள் கவலைப்பட மாட்டார்கள். அமைச்சரின் குரல் உங்களுக்கும் கேட்டிருக்க வேண்டும் குறைந்தபட்சம் இந்த வாக்குறுதியை ஆவது நிறைவேற்றுங்கள். மதுவால் மக்கள் சீரழிகிறார்கள் என்றால் அந்த நாடு சீரழிகிறது என்று அர்த்தம்.

20230001091041747.jpg