லஞ்சத்துக்கு முற்றுப்புள்ளி?!
லஞ்சம் தொடர்பான நேரடி அல்லது ஆவண ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் சூழல் சாட்சியத்தின் அடிப்படையில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை தண்டிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளது.அரசு ஊழியர் லஞ்சம் கேட்கும் பொழுது அதை அவர் பெற்றுக் கொண்டால் அது லஞ்சம் தான் என்றும் உச்சநீதிமன்றம் விளக்கம் சொல்லி இருக்கிறது.லஞ்சம் தொடர்பான வழக்கில் சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து இனி லஞ்சப் பேர்வழிகள் தப்பிக்க முடியாதபடி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு செக் வைத்து விட்டது.இந்த தீர்ப்பு லஞ்சப் பேர்வழிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி.இனிமேல் லஞ்ச வழக்கில் முறையீடு மேல்முறையீடு ஜாமீன் போன்றவற்றுக்கு இந்த தீர்ப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புவோமாக....!
Leave a comment
Upload