தொடர்கள்
அரசியல்
விரைவில் பாம்பன் பாலத்தில் செல்லலாமா ?? மாலா ஶ்ரீ

20221117092641370.jpeg

பாம்பன் பகுதியில் இருந்து வங்காள விரிகுடா கடல் மார்க்கமாக ஏற்கெனவே ராமேஸ்வரம் பகுதிக்கு ஏற்னெவே ரயில் பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியே கப்பல்கள் செல்லும்போது, அங்குள்ள கிரேன் மூலமாக ரயில் தண்டவாளப் பகுதி தூக்கப்படுவது வழக்கம். இதை பலர் நேரில் கண்டு ரசித்தும் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்வது வழக்கம். மேலும், தமிழகத்தில் புயல் மற்றும் மழைக் காலங்களில் இந்த பழைய ரயில் பாலம் மூடப்படும். இதனால் அவ்வழியே பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக ஒரு மாதம் வரையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும்.

தற்போது கடலுக்கு மேற்பரப்பில் கட்டப்பட்ட பழைய ரயில் மேம்பாலத்தின் தூண்கள் கடல் நீர் அரிப்பினால் வலுவிழந்த நிலையில் இருந்ததாக ரயில்வே அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.

‘‘தற்போது புதிய ரயில் பாலப்பணிகள் 84 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவு பெறும். தற்போது இப்பாலத்தில் சோதனை ரயில் ஓட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தர ஆய்வு அதிகாரி சான்று அளித்ததும், வரும் மார்ச் மாதம் முதல் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கும் வாய்ப்பு உள்ளது!’’ என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கடலுக்கு மேல ரயில்ல போக ரெடியா ????

பழைய பாம்பன் பால வீடியோ இங்கே....14 வருடங்களுக்கு முன் சாதா காமிராவில் எடுத்தது...