விகடகவியார் உள்ளே நுழைந்ததும் இந்த சில் வானிலைக்கு ஏற்றபடி சூடாக கீரை வடை சாப்பிடுங்கள் என்று ஒரு தட்டில் கொண்டு வந்து வைத்தார் ஆபீஸ் பையன். கூடவே சாப்பிட்டு முடித்ததும் இஞ்சி டீ எடுத்து வருகிறேன் என்று சொன்னார்.
விகடகவியார் அவருக்கு கண்ணால் நன்றி சொன்னார்.
வடையை சாப்பிட்டபடியே "உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சந்தித்தார்" என்று விகடகவியார் ஆரம்பிக்க,
"நீர் தமிழக அரசியலில் இருந்து இப்போது ஆந்திரா அரசியலுக்கு போய் விட்டீர்களா? என்று நாம் கேட்டதை கண்டு கொள்ளாமல்...
"அமித்ஷாவுக்கு பவன் கல்யாணை ரொம்பவும் பிடிக்கும்.
பாராளுமன்றத் தேர்தலின் போது தெலுங்கு தேசம் பாஜக கூட்டணியில் வர பவன் கல்யாண் தான் முக்கிய காரணம்.
பாஜக தெலுங்கு தேசம் பவன் கல்யாண் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதில் பவன் கல்யாண்க்கு முக்கிய பங்கு உண்டு. அவர் ஆந்திராவில் ஒரு பெரிய வாக்கு வங்கி ஆகிவிட்டார் என்பது அமித்ஷா கணக்கு என்றார் விகடகவியார்.
"சரி இருவரும் அப்படி என்ன பேசினார்களாம் அதை சொல்லும்" என்றோம்.
நம்மை ஒரு மாதிரி பார்த்த விகடகவியார் "பவன் கல்யாண் ஜனசேனா கட்சி நரசிம்ம வராகி படை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறது. சனாதானத்தை பாதுகாப்பது தான் இந்த அமைப்பின் வேலை என்று சொல்லி இருக்கிறார் பவன் கல்யாண். ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு கருத்தை கடுமையாக விமர்சனம் செய்தவர் பவன் கல்யாண். இது தமிழ்நாட்டில் கூட பேசும் பொருளாக இருந்தது. எனவே தமிழக அரசியலில் பவன் கல்யாணை பயன்படுத்துவது பற்றி அமித்ஷா யோசித்து வருகிறார்.
நீங்கள் தமிழ்நாட்டுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்யுங்கள் சனாதன தர்மத்துக்கு ஆதரவாக பேசுங்கள் அதற்கான கூட்டமேடைகளை பாஜக ஏற்படுத்தித் தரும் திமுகவுக்கு சரியான பதிலடி நீங்கள்தான் என்று சொல்லி இருக்கிறார் அமித்ஷா, பவன் கல்யாண் அதற்கு ஓகே சொல்லிவிட்டார், எனவே சரியான சமயத்தில் பவன் கல்யாண் தமிழக அரசியலில் பரபரப்பு பிரமுகராகி விடுவார் என்று சொல்லி சிரித்தார் விகடகவியயார்.
"சரி திமுக செய்திக்கு வரும்"
என்று நாம் சொன்னதும் இப்போதைக்கு திமுக விஜய் பற்றி தான் நிறைய யோசிக்கிறது. நவம்பர் 27 உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை திமுக கிட்டத்தட்ட ஒரு மாதம் கொண்டாடுமாம். பொதுக்கூட்டம், கருத்தரங்கு, பட்டிமன்றம்,நலதிட்டஉதவி என்று நிகழ்ச்சிகள் களைக்கட்டுமாம். அதில் விஜய் பற்றிய விமர்சனங்கள் நிறைய இருக்குமாம். இந்த நிகழ்ச்சிகளில் கூட்டணிக் கட்சிகளையும் அழைப்பது பற்றியும் யோசித்து வருகிறது திமுக" என்று விகடகவியார் சொன்னபோது "அதாவது உதயநிதி ஸ்டாலின் புகழ் பாடும் தலைவர்களை மட்டும் அப்படித்தானே" என்று நாம் கேட்டோம் "உமது பேச்சுக்கு அப்பில் ஏது" என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.
Leave a comment
Upload