கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் முக்கிய பதார்த்தம் .
கேக் தயாரிப்பு என்பது ஒரு முக்கிய பாரம்பரிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு சிறப்பான சுவையான ஒன்று .
ஊட்டி ஜெம் பார்க் ஹோட்டல் இந்த பாரம்பரிய கேக் தயாரிப்பை சிறப்பாக நடத்துகிறார்கள் .
14 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு கேக் மிக்சிங் வைபவம் நடந்தது .
ஊட்டியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர் .
கேக் மிக்சிங் வைபவத்திற்கு சிறப்பு விருந்தினராக நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்வியா தண்ணீரு எஸ் .பி .நிஷா கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
கலெக்டரும் எஸ் .பியும் ஏப்ரன் அணிந்து கொண்டு மிக்சிங்கிற்கு வந்து நிற்க இங்கிலாந்து மான்சேஸ்ட்டரில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஐந்து பெண்கள் கலந்து கொண்டனர் .
செஃப் சுரேந்தரன் கேக் மிக்சிங் பாரம்பரிய வரலாற்றை கூறி மிக்சிங்கை துவக்கி வைக்க உடன் கலெக்டர் மற்றும் எஸ் .பி, மிக்சிங் செய்து அசத்தினர் , வந்த விருந்தினர்கள் அனைவரும் கையில் கிளவுஸ் தலையில் சாண்டாக்ளாஸ் தொப்பி அணிந்து மிக்ஸ் செய்தனர் .
உலர் திராட்சை , செரி , நட்ஸ் ,அதனுடன் ரம் , விஸ்கி , பிராந்தி , ஜின் , வொட்க்கா , பழ ஜூஸ் என்று அனைத்தும் ஊற்றி ஒரு மாதத்திற்கு ஊற வைத்து டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் கிறிஸ்துமஸ் கேக் ரெடி யாகும் .
கலெக்டர் லட்சுமி பவ்வியா தண்ணீரு விடம் பேசினோம் , "ஏற்கனவே கடந்த வருடம் ஒரு கேக் மிக்சிங் நிகழ்வில் கலந்து கொண்டேன் இங்கு ஜெம் பார்க்கில் இது தான் முதல் முறை இட் வாஸ் திரில்லிங் " என்று கூறினார் .சீனியர் செஃப் சுரேந்தர் கூறும் போது ,
" கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு ஒரு பாரம்பரியமான ஒன்று . அதிலும் மிக்சிங் ஒரு சிறப்பான ஒன்று , உலர்ந்த திராட்சை , பிளம் , நட்ஸ் , ஜூஸ் , பிராண்டி , ரம் , விஸ்கி , வோட்கா , ஜின் , ஸ்பைசஸ் என்று அனைத்தையும் கலந்து ஒரு மாதம் ஊறவைத்து தயாரிக்கும் கேக் கிறிஸ்துமஸ் பனி குளிருக்கு ஏற்ற ரீச் பிளம் கேக் அதை உட்கொள்ளும் போது குளிர் பறந்து உடல் சூடாகிவிடும் கிறிஸ்துமஸ் உட்சாகம் நம்முள் ஏற்படுவதை இந்த பிளம் கேக் உணர்த்தும் ".
இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த கிரிஸ் ,
" இங்கு நடந்த கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் அருமையான ஒன்று , எங்க நாட்டில் நாங்கள் வீட்டில் தான் கேக் மிக்ஸ் செய்து ஹோம் மேட் கேக் ரெடியாகும் .அங்கு இப்படி ஹோட்டலில் தயாரிக்க மாட்டோம் இது எங்களுக்கு கிடைத்த கிபிட் " என்று கூறினார் .
அழகான வைட் அண்ட் ரெட் சாண்டா க்ளாஸ் அழகிய மது பாட்டில்களுடன் நின்று கொண்டு அனைவருக்கும் வரவேற்பு கொடுத்தனர் .
இந்த சூப்பர் கிறிஸ்துமஸ் பிளம் கேக்கை சுவைக்க ஒரு மாதம் கட்டாயம் வாய் ஊற காத்திருக்க வேண்டும் .
கிறிஸ்துமஸ் பிளம் கேக்கை டிசம்பர் 24 ஆம் தேதி நள்ளிரவில் எல்லா விளக்கையும் அணைத்து விட்டு கேக் மேல் கொஞ்சம் ரம் ஊற்றி நெருப்பை கொளுத்தும் போது அழகான ப்ளூ கலர் தீ ஜுவாலை ஒளிர குடும்பத்துடன் ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாப்பி பிரத் டே ஜீசஸ் என்று உட்சகமாக கூறி " "sailent Night holy night " கரோல் பாடலை பாட கிறிஸ்துமஸ் அதிகாலை கொண்டாட்டம் பிறக்கும் பின்னர் பிளம் கேக்கை வைனில் டிப் செய்து உட்கொண்டால் அதன் சுவையோ சுவை தான் .
இது இன்னும் பல இல்லங்களில் பாரம்பரியமாக நடந்து வருகிறது .
ஒருவருடம் வரை வைத்து சாப்பிடும் ஒரு கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு சூப்பர் தான் .
ஊட்டியில் ஜெம் பார்க் ஹோட்டலில் இருந்து கேக் வாசனையும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட மூடும் வந்து விட்டது .
Leave a comment
Upload