தொடர்கள்
வலையங்கம்
பெருமை பேச்சு வேண்டாம்

20241014090855874.jpeg

20241014091556706.jpg

சென்னை கிண்டியில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவரை கத்தியால் குத்தி கடும் தாக்குதல் நடத்தி இருக்கிறார் ஒரு இளைஞர். அதற்கு அவர் சொன்ன காரணம் என் தாய்க்கு உரிய சிகிச்சை மருத்துவமனையில் அளிக்கவில்லை என்பது தவிர சம்பந்தப்பட்ட மருத்துவர் தவறான சிகிச்சை அளித்தார் என்று அந்த மருத்துவர் மீதும் பிடிப்பட்ட இளைஞர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

சென்னை திருவொற்றியூரில் ஒரு பெண்மணி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அவரது கணவருக்கும் தலையில் சர மாரிவெட்டு .இந்த சம்பவத்திற்கு காவல்துறை இருவருக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்தது என்று மட்டும் விளக்கம் சொல்லியிருக்கிறது.

சென்னை வடபழனியில் பெண் வியாபாரியிடம் தகராறு செய்த போதை ஆசாமியை தட்டி கேட்ட போக்குவரத்து பெண் காவலர் மீதுதாக்குதல் .அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது.

சமீபகாலமாக அதிகளவில் தமிழகத்தில் கத்திகுத்து சம்பவங்கள் ஏற்படுகிறது, இதற்கு நமது சினிமாவும் காரணம் …அதிக வன்முறை காட்சிகளை வெள்ளிதிரையில் இளைஞர்கள் பார்ப்பதால் கத்திகுத்து சம்பவங்கள் அதிகரிக்கிறது. சினிமாவில் அதிக வன்முறை காட்சிகள் தவிர்க்க பட வேண்டும் என மன நல மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்

கிண்டி, திருவொற்றியூர், வடபழனி, நீலகிரி சம்பவம் எல்லாமே இந்த ஆட்சியின் அலங்கோலத்துக்கு ஆதாரம். எனவே நல்லாட்சி தருகிறோம் என்று பெருமை பேசுவதை விட்டு ஆட்சியாளர்கள் எதார்த்தத்தை புரிந்து கொள்வது நல்லது.