முகம்.. உதய ஞாயிறு..
மேனி.. மேன்மைத் திங்கள்..
அதரம்.. கோவை செவ்வாய்..
அங்கம்.. பொன்னிற புதன்..
வண்ணம்.. பள பள.. வழ வழ தங்க வியாழன்..
வெட்க சிரிப்பு.... வெள்ளி மணிகள்...
ஆட்டோ டிரைவரின் அதட்டல் குரல்.. சனியனே..!
சாலை நடுவே சகுனப் பூனையாய்.. நான்..!
எண்ண அலைகள் சிதறிக் கலைந்தன..!
கனவுத் தொல்லைகள் தொடர்ந்து வந்தன...!
Leave a comment
Upload