அமெரிக்காவின் மெக்சிகன் நகரில் வசிப்பவர்கள் கட்டேரி (50), ஜேஸ்வாண்ட் (45) தம்பதியர். இவர்களுக்கு பெண் குழந்தைகள்மீது அதிக பாசம். இதனால் தங்களுக்கு பெண் குழந்தை வேண்டும் என்று பல வருஷங்களாக முயற்சித்தும் ஆண் குழந்தைகளே பிறந்தனர். இப்படியே 14 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த மராத்தான் பிரசவத்துக்குப்பின், தற்போது இத்தம்பதிக்கு கடந்த 5-ம் தேதி 15-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அத்தம்பதி உள்பட குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.
தற்போது அந்த வீட்டின் தேவதையாக பிறந்த பெண் குழந்தை 3 கிலோ 40 கிராம் எடை உள்ளது. இப்பெண் குழந்தைக்கு ‘மேகி ஜெய்னே’ என பெயர் சூட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஜேஸ்வாண்ட் கூறுகையில், ‘இந்த வருடம் நிறைய வழிகளில், பல்வேறு காரணங்களுக்காக எங்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக மாறிவிட்டது. ஆனால், எங்களுக்கு மேகி ஜெய்னே மறக்க முடியாத ஸ்பெஷல் பரிசு’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
கட்டேரி - ஜேஸ்வாண்ட் தம்பதியின் முதல் மகனுக்கு தற்போது 26 வயதாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது.
தற்போதைய 21-ம் நூற்றாண்டில் ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கவே தயங்கும் தம்பதிககளுக்கு இடையே, இத்தம்பதியர் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு பெண் குழந்தையை பெற்று..அதை சிறப்பாக வளர்க்கத் துடிப்பதை சமூகவலைதள பக்கங்களில் புகைப்படங்களாகப் பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Leave a comment
Upload