ஒரு நாள் காட்டுப் பகுதி....
அந்தப் பக்கமாக ஜாகிங் செய்து வந்து கொண்டிருந்த பெண் ஒருவர், வழி தவறி கொஞ்சம் காட்டுக்குள் போகும்படி ஆகி விட்டது.
அங்கே ஒரு மர இடுக்கில் குட்டிக்குரங்கு ஒன்று கொடியில் சிக்கிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் இருப்பதைப் பார்த்தாள்.
அதற்கு உதவி செய்யலாம் என்று எண்ணம் வந்து விட்டது. அதே சமயத்தில் அந்த குட்டிக்குரங்கு பேசியது.
“என்னை இதிலிருந்து விடுவித்தால் உனக்கு மூன்று வரங்கள் தருவேன்...”
ஆச்சரியத்தில் உறைந்து போனாள். அட குரங்கு பேசுகிறது. வரம் தருவேன் என்றும் சொல்கிறது. விடுவித்தாள்.
குரங்கு வெளியே வந்ததும் சொன்னது... “ஆங் மறந்து விட்டேன். நீ என்ன வரம் கேட்டாலும், அது பத்து மடங்கு அதிகமாக உன் கணவனுக்கு போகும். நினைவில் கொள்...”
அவள் சொன்னாள்... “அது பரவாயில்லை...”
முதல் வரம்....
“உலகிலேயே மிக அழகான பெண்ணாக நான் மாறவேண்டும்...”
குரங்கு சொல்லியது. “ஆகட்டும். ஆனால் அது உன் கணவனை உலகிலேயே மிக அழகான ஆண்மகனாக மாற்றி விடும். பெண்கள் அவன் மீது அலைமோதுவார்கள்.”
அவள் சொன்னாள். “பரவாயில்லை...”
ஜீம்பூம்…… அவள் மிக அழகான பெண்ணாக மாறி விட்டாள்.
இரண்டாவது வரம்....
“உலகிலேயே பணக்காரப் பெண்ணாக வேண்டும்...”
குரங்கு மீண்டும் சொன்னது... “ஹே.. உன் கணவன் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனாகி விடுவான்.”
பெண் “இருக்கட்டுமே. அந்தப் பணமும் என்னுடையது தானே சட்டப்படி. ஆகட்டும்...”
ஜீம்பூம். பணக்காரியாகி விட்டாள்.
மூன்றாவது வரம்.
பெண் யோசித்தாள். என்ன கேட்கலாம். என்ன கேட்கலாம்.. என்ன கேட்கலாம்... என்ன கேட்கலாம்....
குரங்கு, “சட்டுனு சொல். மூன்றாவது வரம் என்ன..”
பெண் சொன்னாள்... “எனக்கு மெலிதான ஒரு ஹார்ட் அட்டாக் வரணும்.”
கதையின் படிப்பினை: பெண்கள் எப்போதுமே புத்திசாலிகள். அவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். கணவனின் மொத்த சொத்தும் அவளுக்கு தானே?? எப்படி.. ??
பெண் வாசகிகள் : கதை முடிந்தது. நீங்கள் இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
ஆண் வாசகர்கள் தொடர்ந்து படிக்கவும்.
மூன்றாவது வரத்தின் படி அவள் கணவனுக்கு அவளை விட பத்து மடங்கு மெலிதான மாரடைப்பே வந்தது.
கதையின் படிப்பினை: பெண்களுக்கு அவ்வளவாக போறாது. ஆனால் அவர்கள் நிறைய புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இருக்கட்டும். அந்த நினைப்பை கலைக்க வேண்டாம்.
பின்குறிப்பு: பெண்வாசகிகள் இன்னமும் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால்… பார்த்தீர்களா.. நிறுத்திக் கொள்ளலாம் என்று சொன்ன பிறகும் தொடர்ந்து படிக்கிறீர்கள். பெண்கள் சொன்ன பேச்சை கேட்கவே மாட்டார்கள்.
Leave a comment
Upload