‘ரஜினி’யின் பரிதாப நிலை..! - மாலாஸ்ரீ
இதுவும் தற்கொலையும் சமம். அதற்குத் தான் ஆசைப்படுவது கிடைக்கவில்லையெனில் கிடைப்பதை வைத்து சந்தோசப்பட வேண்டும் என்பது. தனியார் நிறுவனத்தில் மேலாளர் என்பது குறைவானதா?? ஐ.ஏ.எஸ். ஒரு வேளை கிடைக்கவில்லையெனில் பைத்தியமாகத்தான் வேண்டுமா?? பரிதாபம்.
ரமணா, சென்னை
கடக ராசியும்.. காயலான் கடையும்... - பா.அய்யாசாமி
கடக ராசியும் காயலான் கடையும் கதை செம கலக்கல். அன்றைய ராசி பலனை டிவியில் காணும் கடைக்காரருக்கு, ஒரு நிலத்தினால் ஆதாயம் அடையச் செய்த போது அய்யாசாமி... எங்களை பொறுத்தவரை 'அடடே' சாமியாகிவிட்டார்!
வி.கே.ராமச்சந்திரன், பெங்களூர்
எங்கே நீ அன்பே...? - சி. கோவேந்த ராஜா
கோவேந்தராஜாவின் 'எங்கே நீ அன்பே?' கவிதை, தீபாவளி பண்டிகைக்கு வாங்கிய இனிப்பு பலகாரங்களை போல் சுவையாக இருந்தது.
சௌதாமினி சந்திரசேகர், மணப்பாறை
‘ரஜினி’யின் பரிதாப நிலை..! - மாலாஸ்ரீ
அடக் கஷ்டகாலமே...! ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற, ஐடி நிறுவன மேலாளர் பதவியை கைவிட்டு ரஜினி எனும் பெண் மனநோயாளியாகவே மாறி பிச்சை எடுப்பது கண்ணீரை வரவழைத்தது. அவருக்கு தொடர் கவுன்சலிங் கொடுத்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.
அனுராதா ஶ்ரீதேவ், அச்சிறுப்பாக்கம்
“சிவலோகத்தில் விசாரணை” - வெ. சுப்பிரமணியன்
வெ.சுப்பிரமணியனின் 'சிவலோகத்தில் விசாரணை' சிறுகதை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மறுநாள் பிபி, ஷுகரின் அளவு கணிசமாக குறைந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அதிகரித்தது. வெல்டன்!
வத்சலா வெங்கடேசன், வியாசர்பாடி
உலகம் சுற்றும் விகடகவி - இந்த வாரம் ராம்.
உலகம் சுற்றும் விகடகவியில், எங்களுக்கு பிடித்தது - கமலா ஹாரீஸை சொந்தம் கொண்டாடும் தமிழர்கள் பற்றிய செய்திக்கு 'மூன்றாம் பிறை' பட ஸ்டிலை போட்டு, ரயிலில் இருந்து கோமாளியாகத் தெரியும் கமல் உருவிலான தமிழர்களை ஏளனமாக பார்க்கும் ஶ்ரீதேவி போல் கமலா ஹாரீஸ் இருக்கும் 'மீம்ஸ்'... செம சூப்பர்ப்! இதுக்கே ராமை நிற்கவெச்சு பாராட்டி, தீபாவளியன்று 10 ஆயிரம் வாலா சரவெடி கொளுத்தி, குலோப் ஜாமூன் ஊட்டி கொண்டாடணும்.
அமிர்தா சண்முகம், பெரவள்ளூர்
மார்பக புற்றுநோயினை தடுக்க ஒரு அமைப்பு! - ஸ்வேதா அப்புதாஸ்..
பெண்களின் மார்பக புற்றுநோயை தடுக்கும் விழிப்புணர்வில் ஈடுபடும் 'இந்தியா டர்ன்ஸ் பிங்க்' அமைப்பின் சமூகப்பணி மிகவும் பாராட்டுக்கு உரியது. இது அனைத்து பெண்களிடம் முறையாக சேர்க்க வேண்டியது நமது கடமை என்பதை அழகுற விளக்கியுள்ளார் ஸ்வேதா அப்புதாஸ்! பாராட்டுக்கள்.
அபிராமி செல்வநாதன், காரைக்குடி
பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்... ஒரு நினைவேந்தல் - வேங்கடகிருஷ்ணன்
அந்த காலத்தில் ஜேம்ஸ் பாண்ட் படம் என்றாலே ஷான் கேனரிதான் நினைவுக்கு வருவார். அழகிகள் சூழ, வாயில் புகைக்கும் சிகரெட்டுடன் 'பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்' என கூறும் ஸ்டைலே தனி. அதை வீட்டில், ஸ்கூலில் செய்யும்போது மாட்டி அடி விழுந்ததும் உண்டு. ஜேம்ஸ்பாண்ட்னா அவர்தான். அவரை மாதிரி இனி வேறு எவரும் இல்லை.
கார்த்திக், பிரபு, ஶ்ரீதேவ், காஞ்சிபுரம்
தீபாவளி ஸ்வீட்ஸ்...
விகடகவியில் பல்வேறு தீபாவளி இனிப்பு மற்றும் கார வகைகளின் செய்முறைகள் எங்களை போன்று தனியாக வெளியூரில் வசிப்பவர்களுக்கு பலனுள்ளதாக அமைந்தது. எங்க வீட்டு தீபாவளிக்கு வாங்க. நாங்க செய்த பலகாரங்களை சாப்பிட்டு வாழ்த்துங்க. விகடகவி குழுவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.
விஜயா ராஜசேகர், தர்மபுரி
மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
அந்த காலத்தில் பெற்றோர் பட்டாசு வாங்கித் தர யோசிப்பார்கள். அதற்கு பதிலாக நிறைய தீபாவளி பலகாரங்களை செய்து, எடுத்து சாப்பிடும்படி அன்புடன் கூறுவர். நாம் சம்பாதிக்க ஆரம்பித்ததும், தங்களுக்கு தேவையான துணிமணிகளைக்கூட அவர்கள் வாங்கிக் கொள்ள யோசிப்பது உண்மையே என்பதை மாண்புமிகு மனிதர்கள் மூலம் ஜாசன் வெளிப்படுத்திவிட்டார்.
அன்னலட்சுமி ஜெகதீசன், வேலூர்
மண்ணில் பூத்த கவிதைகள்... - மரியா சிவானந்தம்
ஶ்ரீரங்கம் மங்களம் சீனிவாசனின் கோலங்களயும் தஞ்சாவூர் ஓவியங்களையும் பார்த்து அசந்து போனேன். தொடரட்டும் அவரது கைவண்ணங்கள். மிக சிறப்பு.
விஜயலட்சுமி, மண்ணடி
ஜியாரத்... - ஆர்னிகா நாசர்
ஜியாரத் பற்றி இருவித செயல்பாடுகளை மிக அழகாக விளக்கினீர்கள். எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்ட கேரக்டரே, தந்தையின் சமாதியை வர்த்தகப் பொருளாக்கியது வேதனை அளித்தது.
மனோகரன், நாகப்பட்டினம்
வழுக்கைத்தலை மாப்பிள்ளை தலைமறைவு!! - ஆர்.ராஜேஷ் கன்னா.
வழுக்கை என்பது இயற்கையாக வருவதுதானே... அல்லது, நாமே ஏற்படுத்திக் கொள்வதுதானே? அதை திருமணத்துக்காக ஏன் மூடி மறைக்க வேண்டும்?.. பின்னர் தலைமறைவாக வேண்டும்? அப்படி பார்த்தால், ஒவ்வொருவரிடமும் குறை இருக்கே... இதுபற்றி புகார் அளித்தால், நாடு தாங்குமா?
ஊர்மிளா தனசேகரன், நாகர்கோவில்
தெளிவு தரும் இந்து மதம் - உணவு உண்ணும் முறை... - கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்
உணவு உண்ணும் முறை முறை குறித்து சுந்தர்ராமனின் விளக்கம் மிக அருமை. இவற்றை எனது ஓட்டலில் வாழை இலையில் சாப்பிட திணறுபவர்களுக்கு விளக்கிக் கூறியதும் மகிழ்ந்து பாராட்டுகின்றனர்.
கற்பகவள்ளி பிரபாகரன், ஊத்துக்கோட்டை
‘ட்வின்ஸ்’ பெற்ற ஆந்திர மூதாட்டி..! - ராஜஶ்ரீ
74 வயதிலும் குழந்தை பெற்று வளர்க்கலாம் என்பதை நிரூபித்த ஆந்திர தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிவசங்கரி ராஜசேகர், திருவள்ளூர்
தங்க மீன் தந்த அதிபத்த நாயனார்!! ஆரூர் சுந்தர சேகர்.
நாகையை பூர்வீகமாக கொண்ட எனக்கு, சிவபெருமானுக்கு தங்க மீன் அளித்த அதிபத்த நாயனார் குறித்தும், அவருக்கு காயாரேணஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் விழா நடைபெறுவது குறித்தும் சுந்தரசேகரின் வரிகள் மகிழ்வை ஏற்படுத்தியது.
நாகலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, வாரணாசி
தலைதூக்கும் தீவிரவாதம்_ தவிக்கும் ஐரோப்பா... - தில்லைக்கரசி சம்பத்
தலைதூக்கிய இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலினால் தவிக்கும் ஐரோப்பிய நாடுகளை படித்ததும் உடல் நடுங்கியது. ஒரு நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் மதவாத குழுக்களை, அமைதியை விரும்பும் அம்மதகுருமார்கள் ஏன் தடை செய்யக்கூடாது என யோசிக்க வைக்கிறது தில்லையின் கட்டுரை.
சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை
வாவ் வாட்ஸப்!
வாட்ஸ் அப் படங்களில் உங்களை வீட்டுக்குள்ளே விட்டா எனக்கேவா, சின்ன பந்து பெத்த சந்தோஷம், ஜிக்குபுக்கு ரயிலே செம கலக்கல். மற்ற படங்கள் கூட அட்டகாசம்!
கௌஷிக், தீட்சிதா, சூர்யா, சென்னை
வாசகர் மெயில்
இவ்ளோ நாள் ஜெயிண்ட் வீல் சைஸ்ல 'பெரிசா இருந்த விகடகவியார்... ரெண்டு வாரமா சைஸ் குறைஞ்சு 'என்றும் 16'ஆ மாறிட்டாரே! ஹேவ் எ நைஸ் லுக்... கீப் இட் அப்!
ரேணுகா ஹரி, விருகம்பாக்கம்
வலைக்கள்ளன்
ஆண்கள் மகிழ்ச்சியாக இருக்க காரணம்னு பட்டியல் போட்டு கவுத்திட்டியே தலீவா... பொண்டாட்டிகிட்ட பேஜரா போயிடுச்சு! அப்படியே அவங்களை தாஜா பண்றது எப்படினு போடும்மா வலைகள்ளா!
ரவீந்திரன், தினகரன், வந்தவாசி
உலகை குலுக்கிய வழக்குகள்! - ஆர். ராஜேஷ் கன்னா
உலகை குலுக்கிய வழக்குகள் தொடரில், டெட்பண்டி கேரக்டர் மிகக் கொடூரம். இப்படியா ஒரு மனுஷன் இருப்பான்? செத்த பொணத்தை பாலியல் பலாத்காரம் செய்தல் ரொம்ப டூ மச்... தியேட்டர்ல இங்கிலீஷ் கிரைம் திரில்லர் படம் பார்த்த மாதிரி இருந்துச்சு. கடைசியில் 'முற்றும்' போட்டு கலங்கடிச்சிட்டீங்க!
உலகநாதன், பார்த்திபன், கொரட்டூர்
இன்றைய தினம் 10-11-2020
migha payanulla.thaghvalgalai alli tharugirar Madipakkam jothidar.Thiru.Sairam avargal.
சுப்ரமணியன்
“முதல்வரின் ஊட்டி விசிட்..” - ஸ்வேத அப்புதாஸ்
ஊட்டி மக்கள் சொல்ற மாதிரி, சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் துவக்கி வைத்திருக்கலாம். இதில் பாதிக்கப்பட்டது - காவல்துறையும், மாவட்ட கலெக்டருக்கு நேர்ந்த அவமானமும்தான். அதிமுகவினர் கூற்றுப்படி, இரவுபகலாக கஷ்டப்பட்டவனை பின்னுக்கு தள்ளி, சொகுசாக காரில் வந்தவனை முன்னே நிறுத்தியது வேதனை. கலக்கிட்டீங்க ஸ்வேதா அப்புதாஸ்!
ஜானகி ராமச்சந்திரன், அண்ணாநகர்
கொரோனா அனுபவங்கள்! ...மக்கள் கருத்து... - தில்லைக்கரசி சம்பத்
கொரோனா பாதிப்பினால் எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாத ஒரு டாக்டருக்கு ஏற்பட்ட சங்கடங்களை படித்தபோது உடல் நடுங்கியது. இதே சாமான்ய மக்களின் கதி என்னாகி இருக்கும் என்பதை நினைக்க மனம் பதறுகிறது. இனியாவது மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கணும் என்பதை தில்லைக்கரசி கட்டுரை வலியுறுத்துகிறது.
கார்த்திக் ரகுராம், பெங்களூர்
வந்தார்கள்... வென்றார்கள்... - 12 - மதன்
மதனின் வந்தார்கள் வென்றார்கள் தொடரில் கியாஸுதீன் மற்றும் முகமது பின் துக்ளக்கின் ஆட்சி மற்றும் நயவஞ்சக செயல்பாடுகளை படித்தபோது, நடிகர் சோவின் துக்ளக் தர்பார் நாடகத்தை மீண்டும் நினைவுபடுத்தியது. செம இன்ட்ரஸ்டிங்!
ராஜேந்திரன், வளசரவாக்கம்
உணவே மருந்து... - 04 - மீனாசேகர்
நமக்கு புத்திக்கூர்மை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளை தீர்ப்பதில் வல்லாரை கீரை சகல கலா வல்லவனாகத் திகழ்கிறது என்பதை சுந்தரசேகர் மிக அழகாக எடுத்து கூறியுள்ளார். இனிமே எங்க வீட்டுல எல்லாமே வல்லாரை கீரையிலதான். ஏன்னா, எங்க வீட்டுல வயசானவங்க ஜாஸ்தி!
ராதா வெங்கடேசன், ஆலப்பாக்கம்
ராக தேவதைகள்... - 12 - மாயவரத்தான் சந்திரசேகரன்
ராக தேவதைகள் 12-வது தொடரில், மாண்டு ராகத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் அனுபவங்கள், பிரபல கர்நாடக பாடகிகளின் குரல் வளங்கள், தஞ்சை அக்ரஹாரங்களில் எழும் பாடல்களின் அனுமானங்களை படிக்கப் படிக்க தேன்சுவையாக இருந்தது. டிசம்பர் சபா கச்சேரியில் மாயவரத்தானின் பாடல் அரங்கேற்றம் செய்ய இடம் கன்ஃபர்ம் ஆயிடுச்சு!
மாயா குப்புசாமி, வடபழனி
எதற்கும் தயார் எடப்பாடி... - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
அடடே... ஜெகஜ்ஜால கில்லாடி பேர்வழியாக மாறிவிட்டாரே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?! அவரது நிதான செயல்பாடுகளும் அரசியல் சூட்சமங்களை படிக்கப் படிக்க, இப்பவே எங்களுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. பலே பலே... விறுவிறுப்பான கட்டுரை!
ராதாகிருஷ்ணன், திருப்பூர்
வலையங்கம்
ஆரம்பத்தில் கமல் உள்பட எல்லா அரசியல் தலைவர்களும் நல்லாத்தான் பேசுறாங்க, வாக்குப்திவுக்கு முன்புவரை! 2 பிரதான கட்சிகள் மக்களுக்கு பணத்தை வாரி இறைக்கின்றனர். ஆட்சியில் அமர்ந்ததும் 'பணத்தை வாங்கிட்டு தானே ஓட்டு போட்டே?' என கதிகலங்க வைக்கின்றன. தமிழக மக்களின் மனம் மாறினால் மட்டுமே ஆட்சி மாற்றம் உண்டாகும். இந்த சாராம்சத்தை புரியவைத்த வலையங்கத்துக்கு பாராட்டுகள்.
செல்வ ராஜசேகர், திருத்தணி
“சிவலோகத்தில் விசாரணை” - வெ. சுப்பிரமணியன்
Incredible imagination and excellent narration. The difficulty of readers is well told. In all, a story of reality studded with humor.
வி. விக்னேஷ்
ராக தேவதைகள்... - 12 - மாயவரத்தான் சந்திரசேகரன்
wonderful...
ராவ்
“சிவலோகத்தில் விசாரணை” - வெ. சுப்பிரமணியன்
Good entertainment
அருள்தாஸ், சென்னை
மண்ணில் பூத்த கவிதைகள்... - மரியா சிவானந்தம்
பிரமிக்க வைக்கும் கலைப்படைப்பு. கைகளிரண்டும் பேசுகின்றன! இக்கலையை பயிற்றுவிக்க அவர கொண்டுள்ள ஆர்வம் பாராட்டுக்குரியது. இலட்சக்கணக்கலில் முகநூலில் பின்தொடர்வோர் இருப்பினும் அவரது ஆர்வத்தினையும் திறமையையும் பத்திரிக்கை வாயிலாக உலகுக்கு வெளிக்கொணர்ந்த விகடகவிக்கு பாராட்டுக்கள்....
சிவா, வேலூர்.
Leave a comment
Upload