தொடர்கள்
நொறுக்ஸ்
நாய்க்கு நடந்த வளைகாப்பு!- மாலாஸ்ரீ

20201013134023121.jpg

தஞ்சை மாவட்டம், தென்றல் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (68). இவர் நீண்ட காலமாக ஆடு, மாடு, கிளி உள்ளிட்டவற்றை செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார். இவர் அபிராமி என்ற பெண் நாயையும் வளர்த்து வருகிறார்.

தற்போது அந்த நாய் கர்ப்பமாக உள்ளது. அதன்மீதுள்ள அளவுக்கு அதிகமான பிரியத்தால், தங்கள் மகளுக்கு சீமந்தம் நடத்துவது போல், வளர்ப்பு நாய்க்கும் வளைகாப்பு, சீமந்தம் நடத்த கிருஷ்ணமூர்த்தி முடிவு செய்தார். தன் வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் என பத்திரிகை அடித்து, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி, தனது வளர்ப்பு நாய்க்கு கிருஷ்ணமூர்த்தி வீட்டில், உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு சீமந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, பெண் வீட்டார் சார்பில் கோயிலில் இருந்து பழங்கள், வளையல்கள் என பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் அந்த வளர்ப்பு நாய்க்கு பட்டுத் துணி கட்டி, மாலையிட்டு, அதன் கால்களில் மஞ்சள், குங்குமம் வைத்தனர். இதையடுத்து கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவிப்பது போலவே வளர்ப்பு நாய்க்கும் வளையல்கள் அணிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வளர்ப்பு நாய் மாஸ்க் அணிந்திருந்தது.தனக்கு வளையல்கள் போடும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டது.

இதில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் மஞ்சள், குங்குமம், இனிப்பு வழங்கப்பட்டது. நாய்க்கு நடைபெறும் வளைகாப்பு சீமந்த நிகழ்ச்சியை அப்பகுதி மக்கள் அனைவரும் கண்டு ரசித்தனர்.