கூட்டுக் குடும்பம்...
மணக்கும் கதம்பம்...!
கூட்டுக் குடும்பம்...
வண்ணமிகு ஓவியம்...!
வளர்மிகு காவியம்....!
இல்லம் நிறைந்திருக்கும்...
உள்ளம் மகிழ்ந்திருக்கும்...
இதயம் நெகிழ்ந்திருக்கும்...
இன்னல் ஒழிந்திருக்கும்...
ஒருவருக்கு பலர் துணை...
பலருக்கும் உறுதுணை...
கூட்டுக் குடும்பம்...
மனச் சுவர்கள் இல்லாத
வனப்புமிகு சுவர்க்கம்...
மனச் சுமைகள் இல்லாத
உணர்வுமிகு புத்தாக்கம்...!
அனுதினமும்... அன்பு மயம்...!
அங்கில்லையே... அல்லல் மயம்...!
தலைவன், தலைவியின் ...
அன்பு அமைப்பில்... ஒரே நிலை...
அன்பு சமைப்பில்...ஒரே உலை...!
நிஜங்கள்... பலவாக இருக்கும்...
நிழல்கள்... பலவாக இருக்கும்...
நினைவுகள்.. ஒன்றாக இருக்கும்...
நிகழ்வுகள்... நிம்மதியைக் கொடுக்கும்...!
விருப்புகள் பெருகும்...
வெறுப்புகள் விலகும்...
வியப்புகள் தொடரும்...!
உறவு உரசல்கள் வரலாம்...
உன்னத அலசல்கள் தரலாம்...
உருக்க வேண்டுகோள் பெறலாம்...
உறுதியான உள்ள நிலைப்பாடு -
உணரப்படலாம்...!
உள்ள விரிசல்கள் தவிர்க்கலாம்...!
விட்டுக் கொடுத்து.... தட்டிக் கொடுப்பர்...
தட்டிக் கொடுத்து.... விட்டுக் கொடுப்பர்...
தட்டிப் பறிக்கும்... அவல நிலை அறுப்பர்...!
அனைவரையும் மதிப்பர்...!
அகந்தையை அழிப்பர்...!
அன்பு பங்களிப்பில் செழிப்பர்...!
அதிகாரப் பகிர்ந்தளிப்பில் கொழிப்பர்...!
சமூகத்தில்...
சண்டைகள் குறையும்...
சச்சரவுகள் மறையும்...
சமாதானம் நிறையும்...!
கூட்டுக் குடும்பம்...
சமூகத்தின் நிரந்தர பலம்...
உறுதி மிக்க உறவுப் பாலம்...!
கூட்டுக் குடும்பம்...
உறவுகளின் அணிவகுப்பு...
உள்ளங்களின் கலகலப்பு...
உரிமைகளின் பகிர்ந்தளிப்பு...
உரைத்திடுமே...
ஆக்கப் பரிமளிப்பு...!
அரிதாகவே... அமைந்திடும்...
இவ் வரிய வாய்ப்பு....!
கூட்டுக் குடும்பம்...
மணக்கும் கதம்பம்...!
வண்ணமிகு ஓவியம்...!
வளர்மிகு காவியம்....!
Leave a comment
Upload