தொடர்கள்
Daily Articles
டிரம்ப் நாக்கை கடித்த அழகி... - பிரபா சங்கர்

2020082210551436.jpg


அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.


இந்நிலையில், ‘தி கார்டியன்’ என்ற பத்திரிகைக்கு முன்னாள் மாடல் அழகி எமி டோரிஸ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்து, காரசார பேட்டியளித்தார். தனது பேட்டியில், ‘கடந்த 1997-ம் ஆண்டில் அமெரிக்க ஓபன் ஸ்டாண்டில் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், என்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார். அவர் தனது நாக்கை, எனது தொண்டைக்கு கீழே வைத்து முத்தமிட்டார்.


நான் அவரை தள்ளிவிட்டும், என்னை அவர் இறுக்கமாக கட்டிப் பிடித்தார். அவரது கைகள், எனக்கு மிகவும் மோசமான அனுபவங்களை கொடுத்தது. எனது உடலின் பிற பாகங்களையும் டிரம்ப் இறுக பிடித்தார். அவரது பிடியிலிருந்து என்னால் தப்ப முடியவில்லை. ஒரு கட்டத்தில், அவரது நாக்கை எனது பற்களால் கடித்து தள்ளிவிட்டேன். இதனால் அவரது நாக்கில் காயம் ஏற்பட்டிருக்கும். தற்போது அதற்கான தழும்போ, அடையாளமோ இருக்கும் என நினைக்கிறேன்.


‘டிரம்ப்புக்கு அப்போது வயது 51, எனக்கு 24 வயது’ என முன்னாள் மாடல் அழகி எமி டோரிஸ் கடுமையாக குற்றம்சாட்டினார். இதற்கு அதிபர் டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் மறுத்து, பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. ‘அமெரிக்க ஓபன் ஸ்டாண்ட் போன்ற பொது இடத்தில், அவ்வாறு டிரம்ப் நடந்து கொண்டிருந்தால் சாட்சிகள் இருந்திருப்பர். கடந்த 1997-ம் ஆண்டு நடந்த சம்பவத்தை போலீசாரிடம் ஏன் டோரிஸ் தெரிவிக்கவில்லை?’ என டிரம்ப் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தற்போது புளோரிடாவில் வசிக்கும் முன்னாள் மாடல் அழகி எமி டோரிஸ், 2 மகன்களுக்கு தாயாக இருக்கிறார். கடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டபோதே, நடந்த சம்பவத்தை வெளியே சொல்ல விரும்பியதாகவும், அதனால் தனது குடும்பத்துக்கு தீங்கு ஏற்படுமோ என்ற அச்சத்தால் தகவலை வெளியிடவில்லை என முன்னாள் அழகி எமி டோரிஸ் கூறியிருக்கிறார்.


இதன்மூலம், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பல பெண்களின் பட்டியலில் முன்னாள் மாடல் அழகி எமி டோரிசும் இணைகிறார். ஏற்கெனவே கடந்த 2019-ல் டிரம்ப்புக்கு எதிராக கட்டுரையாளர் ஈ ஜீன் கரோல் என்ற பெண் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இவ்வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் மாடல் அழகி எமி டோரிசின் புதிய குற்றச்சாட்டு, அமெரிக்க தேர்தல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.