தொடர்கள்
Daily Articles
உலகை குலுக்கிய வழக்குகள்! – ஆர் .ராஜேஷ் கன்னா.

20200819202151812.jpeg

முன் ஜென்மத்தில் நடந்தது அடுத்த பிறவியில் தொடரும் என்பது பல மத கோட்பாடுகளின் நம்பிக்கையாக உள்ளது.

சிரியா நாட்டிலுள்ள ஒரு சிறிய கிராமம்…..

மூன்று வயது நிரம்பிய சிறுவன் குழந்தை பருவ விளையாட்டுகளில் முழ்கி இருந்தான்.

தீடீரென ஒரு நாள்…..

அந்த மூன்று வயது இளம் சிறுவன், தன்னை ஒருவன் முன் ஜென்மத்தில் என் முன் தலையில் கொடாரியால் அடித்து கொன்று விட்டான், என்னை கொன்றவனை என்னால் அடையாளம் காட்ட முடியும் என்று தாயிடம் சொன்னான்.

இது என்னடா வீபரீதம், பால்மனம் மாறாத பிஞ்சு தீடீரென தன்னை கொன்றவனை அடையாளம் காட்டுகிறேன் என்று சொன்னதை கேட்ட தாய், அருகிலிருந்த கிராமத்தினரிடம் விவரங்களை எடுத்து சொன்னார்.

மூன்று வயது இளம் சிறுவனை, போன ஜென்மத்தில் உன்னை கொன்றவன் யார் என்று தெரியுமா? என்று கிராமத்தினர் கேள்வி கேட்டனர்.

இஸ்ரேல் நாட்டில் உள்ள கிராமத்தில் நான் போன ஜென்மத்தில் வாழ்ந்திருந்தேன். என் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவன் என்னை சண்டையிட்டு, தன் கையில் வைத்திருந்த கோடாரியால் என் தலையில் அடித்து கொன்று புதைத்து விட்டான்.

போன ஜென்மத்தில் என் தலையில் கொடாரிபட்ட இடம் தற்போது என் முன் தலையில் சிவப்பு நிற மச்சமாக உள்ளது என்றான் மூன்று வயது சிறுவன்.

20200819202921482.jpg

என்னை இஸ்ரேல் நாட்டிற்கு கூட்டி சென்றால், என்னை கொலை செய்தவனை அடையாளம் காட்டுகிறேன். என்னை கொன்று புதைத்த இடத்தினையும் அடையாளம் காட்டுகிறேன் என்று மூன்று வயது சிறுவன் தன் முன் ஜென்ம கதையை சொல்லவும், கிராம மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள்.

சிரியா நாட்டுக்கு அடுத்தாற்போல் இருக்கும் இஸ்ரேல் நாட்டிலிள்ள சிறுவன் சொன்ன கிராமத்திற்கு செல்வதென கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இஸ்ரேலில் இருக்கும் டாக்டர் எலி லாஸ்க் என்பவரிடம் கிராம மக்கள் சிலர் சென்று, மூன்று வயது சிறுவன் சொன்ன முன் ஜென்ம கதையினை சொன்னார்கள்.

மூன்று வயது சிறுவனை அழைத்து வாருங்கள் நான் உதவுகிறேன் என்று சொல்லிய டாக்டர் எலி லாஸ்க், தனக்கு தெரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் மூன்று வயது சிறுவன் சொன்ன கொலையை பற்றி விரிவாக எடுத்து சொல்லி காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதிப்படுத்தி கொண்டார்.

சிரியாவிலிருந்து பக்கத்து நாடான இஸ்ரேலில் இருக்கும் கிராமத்திற்கு மூன்று வயது சிறுவன் கிராமத்தினருடன் வந்து, சிரியா டாக்டர் எலி லாஸ்க்கை நேரில் சந்தித்து, தனக்கு முன் ஜென்மத்தில் நடந்த கொலை சம்பவங்களை விவரித்து சொன்னான்.

மூன்று வயது சிறுவனுடன் கிராமத்து பெரியவர்கள், டாக்டர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறுவன் அடையாளம் சொன்ன இஸ்ரேல் கிராமத்தின் அருகே சென்றனர்.

முதலில் இருந்த இரண்டு கிராமங்களுக்கு சிறுவனை அழைத்து சென்றபோது தான் சொன்னது இந்த கிராமம் இல்லை என சிறுவன் சொல்லிவிட்டு அடுத்த கிராமத்தினை நோக்கி சிறுவன் வேகமாக நடந்து சென்றான்.

முன் ஜென்மத்தில்தான் வாழ்ந்தது இந்த கிராமம் தான் என்று சிறுவன் சொல்லி, மடமடவென்று தான் குடியிருந்த வீட்டின் முன்பு ஒடிப்போய் நின்றான்.

அந்தச் சிறுவன், தன் முன் ஜென்மத்துப் பெயரை எல்லோர் முன்னிலையிலும் சிறுவன் உரக்க சொன்னான்.

தன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபரின் பெயரை சொல்லி அழைத்தான். வீட்டிற்குள் இருந்து வந்த நபர் தன் பெயரை சரியான உச்சரிப்புடன் சொல்லி கூப்பிடும் சிறுவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

வீட்டிற்குள் இருந்து வந்த நபர், சிறுவனுடன் வந்த கிராமத்தினர், காவல்துறையினர் மற்றும் டாக்டரிடம், சிறுவன் தன் பெயரை சொல்லி அழைத்தது சரிதான் என்று ஒத்துகொண்டான்.

சிறுவனை இதற்கு முன்பு பார்த்து இருக்கீங்களா என்று உடன் வந்தவர்கள் கேட்டபோது… மூன்று வயது சிறுவனை இப்போது தான் முதன்முறையாக பார்க்கிறேன் என்று வீட்டிற்க்குள் இருந்து வந்த நபர் பதறியபடி சொன்னார்.

தன்னை சில வருடங்களுக்கு முன்பு வீட்டிற்கு பக்கத்தில் நடந்த சண்டையில் பக்கத்து வீட்டுக்காரர் வேகமாக பேசி, தன் கையில் இருந்த கோடாரியால் என் தலையில் அடித்தார். நான் சம்பவ இடத்தில் மயங்கி விழந்து இறந்துவிட்டேன். என் உடலை அருகில் இருக்கும் மரத்தடியில் புதைத்துவிட்டார் என்று சிறுவன் சொன்னதை, பக்கத்து வீட்டுக்காரர் தான் எந்த கொலையையும் செய்யவில்லை என மறுத்தார்.

மூன்று வயது சிறுவன் சொல்வதை நம்பி வந்து, என்னை கொலையாளி என்கீறீர்களே என்று சிறுவன் அடையாளம் காட்டிய நபருடன் வந்தவர்கள் மேல் ஆத்திரமாகவும், கோபாமாகவும் பேசினார் அந்த பக்கத்துவீட்டு நபர்.

சிறுவன் தன்னை கொன்றவர் இவர் தான் என தனது பக்கத்து வீட்டுகாரரை அடையாளம் காட்டியபோது, கொலையாளியின் முகம் வெளிறியதை டாக்டர் எலி லாஸ்க் கண்டுகொண்டார்.

மூன்று வயது சிறுவன் தனக்கு முற்பிறவியில் கிராம மக்கள் அழைத்த பெயரை சொன்னதும், கடந்த நான்கு வருடங்களாக ஆளை காணவில்லை என்று தேடி வந்தோம் என்று கிராமத்தினர் சொன்னார்கள்.

மூன்று வயது சிறுவன், மேலும் தன்னை கொன்று புதைத்த இடத்தினை காட்டுகிறேன் என்று கிராம மக்களையும் உடன் வந்த காவல்துறையினர், டாக்டர் மற்றும் கொலையாளி என குற்றம் சாட்டப்பட்ட நபரையும் அழைத்துக் கொண்டு கிராமத்தில் இருக்கும் வயல்வெளி அருகில் ஒதுக்குபுறமாக இருக்கும் ஒரு மரத்தின் அருகே சிறுவன் போய் நின்றான்.

காவல்துறையினர் மற்றும் கிராமத்து வாசிகள் மரத்தின் கீழ் சிறுவன் அடையாளம் காட்டிய இடத்தினை தோண்டினார்கள்.

20200819202237635.png

சில அடி அழத்தில் ஒரு எலும்பு கூடும், அதன் அருகில் விவசாயி உடுத்தும் துண்டும், ஒரு கோடாரியும் இருந்தது. எலும்புக்கூட்டின் முகத்தில் கொடாரியால் வெட்டி கொல்லப்பட்ட வடு இருந்தது.

பக்கத்துவீட்டுகாரருக்கு காவல்துறையினர் உரிய மரியாதை கொடுத்ததும், தான் கொலை செய்த விவரத்தினை ஒத்துகொண்டார்.

மரத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த எலும்பு கூடு மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி ஆயுதத்தை காவல்துறையினர் சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றினார்கள்.

கொலையுண்ட நபரின் எலும்புக்கூட்டை காவல்துறையினர் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் முகத்தில் தற்போதுள்ள சிவப்பு நிற மச்சம், கொலை செய்யப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ள எலும்பு கூட்டின் தலையில் கொலை செய்த போது ஏற்பட்ட காயத்தின் வடு இருந்த இடமும் ஒரே மாதிரியாக இருந்ததைக் கண்டு கிராம மக்கள் புல்லரித்து போனார்கள் .

முன் ஜென்மத்தில் தன்னை கொன்றவனை, பால் மனம் மாறாத மூன்று வயது சிறுவன் அடையாளம் காட்டியது கண்டு உடன் வந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

அந்தக் கொலையாளியை காவல் துறையினர் மேல்விசாரனைக்காக அழைத்து சென்றனர்.

மூன்று வயது சிறுவனை, காவல்துறையினர் தனது பெற்றோர் வசிக்கும் சிரியாவிற்கு அனுப்பி வைத்தனர்.

மூன்று வயது சிறுவனின் முன் ஜென்மத்தில் நடந்த கொலைவழக்கின் விசாரணையை இஸ்ரேல் டாக்டர் எலி லாஸ்க் காவல்துறையினருடன் இணைந்து அதிக அக்கறை எடுத்து கவனித்து வந்தார்.

2009 ஆண்டில் இஸ்ரேல் டாக்டர் எலி லாஸ்க் மரணமடைந்த பின் வழக்கின் தன்மை பற்றி தெரியவில்லை .

வழக்கில் ஈடுபட்ட கொலைக் குற்றவாளி மற்றும் மூன்று வயது சிறுவன் பெயர் முழவதும் மறைக்கப்பட்டு வழக்கின் விவரங்கள் வெளியாகி கொலையாளி தண்டனை பெற்ற விவரங்கள் எதுவும் வெளியாக வில்லை.

சிரியாவை சேர்ந்த மூன்று வயது சிறுவன் தன்னை முன் ஜென்மத்தில் கொலை செய்த கொலையாளியை கண்டுபிடித்த விதத்தினை ஜெர்மன் சிகிச்சையாளர் children who have Lived before:Reincarnation Today நடந்த சம்பவங்களை சரிப்பார்த்து புத்தகமாக எழதியுள்ளார்.

முன்ஜென்மத்தில் நடந்த கொலையை தத்ருபமாக அடையாளம் காட்டிய சிறுவனின் சாதுரிய வழக்கு வியக்கவைக்கிறது.