பூவேந்திரன்
இன்றைய அலோபதி உலகில் உடலில் எந்த சிறிய பிரச்சினை என்றாலும் மாத்திரை வாங்கிப் போட்டுக் கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
அலோபதி மருந்துகள் அறிகுறிகளை அமுக்கி நோய் போனது போல ஒரு உணர்வை தோற்றுவித்தாலும் நோயின் முக்கியக் காரணத்தை கண்டறிய விடுவதில்லை.
நம் முன்னோர்கள் விட்டு வைத்த ஆயுர்வேதமும் யோகா கலையும் அப்படியல்ல.
நீட்டி முழக்காமல் யோகாசனத்தின் பல்வேறு ஆசனங்களை தொடர்ந்து செய்து வந்தால் பல்வேறு வகையான உடல் உபாதைகளை அவை தானாக தீர்க்க வல்லது எனப் புரியும்.
யோகாசனத்தை பத்திரிகைகளில் சொல்லிக் கொடுப்பது புதிய விஷயமல்ல. என்ன ஒன்று பக்க வாட்டில் படுத்துக் கொள்ளுங்கள், கையை இடது புறம் தூக்குங்கள் அல்லது இழுத்து மூச்சு விடுங்கள் என்று எழுதி அதை படித்து அது போல் செய்வதற்கு கோனார் தமிழ் உரை படிப்பது போல அயர்ச்சியாக இருக்கும். இதில் யோகாசனத்தை ஒழுங்காக எப்படி செய்வது?
ஆனால் விகடகவியில் அந்த பிரச்சினை இல்லை. இது டிஜிட்டல் பத்திரிகை. இதன் வெற்றியே பல்வேறு ஊடகங்கள் மூலமாக செய்திகளை கடத்துவது தான். ஆக இதன் முழுப் பலனையும் வாசகர்களுக்கு அளிப்பதற்கும், உங்கள் உடல் ஆரோக்யத்திற்கான உத்திரவாதமாகவும் இதோ வாரம் ஒரு யோகாசனம் வீடியோ வடிவில்!
ஏதோ ஆசனம் சொல்லித் தருகிறோம் என்றில்லாமல் அது ஏதேனும் உடல் உபாதையை சார்ந்து சொல்லிக் கொடுத்தால் வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்றார் திரு. யோகராஜ் பூவேந்திரன்.
விகடகவி வாசகர்களுக்காக பிரத்யேக யோகப்பயிற்சி இதோ…
- ராம்
Leave a comment
Upload