![20250108083642372.jpeg](https://www.vikatakavi.in/upload/image/20250108083642372.jpeg)
இந்தியா இஙகிலாந்து 5 வது டி 20 மேட்ச். அபிஷேக் ஷர்மா சிக்சர் மழையாய்
பொளந்து கட்டும் போது மொபைல் இரண்டு மூன்று தடவை அடித்தது. ஆனால் அவன் கவனம் மேட்சில் இருக்கவே கால் அட்டென்ட் பண்ணவில்லை .
“என்னமா அடிக்கிறான்? இந்த அபிஷேக் சர்மா!” சந்தோசத்தில் சோபாவிலுருந்து குதித்தான் கோபால்.
“இவனுக்குத் தான் நிச்சயம் பிளேயர் ஆப் த.மேட்ச் கிடைக்கப் போகுது !”
ஃபர்ஸ்ட் ஹாஃப் மேட்ச் முடிந்த பிறகு வந்த மிஸ்டு கால் நம்பரை பார்த்தான். அது ஒரு புது நம்பராகத் தெரிந்தது.
யாராக இருக்கும் ? வந்த மிஸ்டு காலைப் பார்த்து கூப்பிட்டான் கோபால்.
“ஹலோ யாரு?”
“டேய் என்னைத் தெரியல. நான் தான்டா கௌசி! என்னும் கௌசல்யாடா ! மேல இரண்டாம் தெரு.” எடுத்த எடுப்பிலயே சுவாதீனமாக ,உரிமையோடு பேசியது அந்தப் பெண்ணின் குரல்.
“மன்னார்குடியில் கணபதி விலாஸ் ஸ்கூலில் படிச்சுட்டு அப்புறம் தேசிய மேல்நிலைப் பள்ளி A குரூப் ஏ செக்சன் சூரி சார் தான் கிளாஸ் டீச்சர். அந்தக் கௌசிடா”
கோபாலுக்கு ஏதும் சட்டென்று ஞாபகம் வராதாதால்,
“சாரி மேடம்.! ஏதோ ராங் கால்ன்னு நினைக்கிறேன். செல்லை ஸ்விட்ச் ஆப் செய்தான் கோபால்.
அவனுக்கு டி 20யின் செகன்ட் ஹாஃ பார்க்கணும். நல்ல விறுவிறுப்பாக மேட்ச் போகும் என்று நினைத்த கோபாலுக்கு 10 ஓவரில் மேட்ச் முடிந்ததும் மொபைலை ஆன் பண்ணிய உடனே மறுபடியும் அதே நம்பரில் இருந்து ஃபோன்.
“என்னடா கோபால் என்னை விட மேட்ச் பெரிசா போச்சு இல்லை”.
நான் மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பது அந்த முனையிலிருக்கும் அவளுக்கு எப்படித் தெரியும்?
ஒரு வேளை வாட்ஸ்அப்பில் விடியோ கால்?
பார்த்தான் அப்படி ஒன்றும் இல்லை.
நான் கிரிக்கெட் பைத்தியம் என்பது இவளுக்குத் தெரிஞ்சு இருக்கு. பாத்த மாதிரி பேசுகிறாள்.
ஆனா கௌசிக்கு .நல்லா தெரியும்.நான் கிரிக்கெட் ல இன்டர்ஸ்ட்ன்னு. அதை ஞாபகம் வைச்சு சொல்லுகிறாளோ?
படித்த போது நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக வேறு சொல்லிக் கொண்டிருந்தாள். அப்ப இது கௌசி தான் .
“ கௌசி.! கொஞ்சம் கொஞ்சமா ஞாபகத்திற்கு வருது.” சாரி.
“வாட் அச் சர்ப்ரைஸ்.எவ்வளவு வருஷம் ஆச்சு. “
முத்தாய்ப்பாக அவள் சொன்ன அந்தச் சம்பவம் யாராலாயும் மறக்க முடியாது. அவள் சொன்னபோது விழுந்து விழுந்து சிரித்தான். அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது மீண்டும் ஒரு முறை.
அன்று ப்ளஸ் 2கடைசிப் பரிட்சை முடிஞ்ச கையோடு , எல்லோரும் ஒத்தை தெரு பிள்ளை யாரை நமஸ்காரம் பண்ணி நல்ல மார்க் கிடைச்சு டிகிரி படிக்கணும், வேலை கிடைக்கணும் என்று வேண்டிகொண்ட பிறகு, மேல இரண்டாம் தெரு முனையில் கௌசி கோபால் கோண்டு,நந்து , விசு ராஜு எல்லோரும் வந்துகிட்டு இருந்தப்ப நந்து அவங்க எல்லோரையும் முன்னாடி போகச் சொல்லிட்டு
அவ கிட்ட வந்து நைசாக இரகசிய குரலில் கேட்கும் படி ஒரு பொட்டாசியம் ,ஒரு அயோடின்,இரண்டு சல்பர் கொடுண்ணு கேட்டதும் அடுத்த நொடியே அவனை அவள் காலில் போட்டிருந்த ஸ்லிப்பர் மூலம் அடிக்கக் கை ஓங்கியதும், மத்தவங்க அவனைப் பார்த்து கிண்டல் பண்ணியதும், அப்பாவி கோண்டுவுக்குக் கெமிஸ்ட்ரி பிடிக்காத சப்ஜெக்ட் எனவே நந்து சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் என்னடா என்று
கேட்டதும், நந்து அவளிடம் கிஸ் கேட்டுருக்கிறான் என்றதும் எல்லோரும் சேர்ந்து நந்துவை தர்ம அடி கொடுத்தது எல்லாம் நினைவுக்கு வந்தது.
இப்ப ஞாபகம் வருது. அதை எப்படி மறக்க முடியும் ?
“நீ இன்னும் அதை நினைச்சுகிட்டு இருக்கியா.? நடந்து எட்டு வருஷம் இருக்கும்ல”
“என்னதான் நந்து ஒன் முறைப் பையன் என்றாலும், பப்ளிக் பிளேஸ்ல கேட்டதும், அதி புத்திசாலியாக எங்களுக்கு அந்தக் கோட் வார்த்தை தெரியகூடாது என்று நினைச்சு முன்னாடி போகச் சொன்னதுக்கு வேறு தர்ம அடி கொடுத்தது எல்லாம் ஞாபகத்துக்கு வருது கௌசி.
“ஆமாம் பிளஸ்2 முடிஞ்ச பிறகு உன்னைப் பத்தி ஒன்னைப் பத்தி எந்தத் தகவலும் இல்லை.
“ கௌசி இப்ப எங்கே இருக்கே? என்ன பண்ற? “
பெங்களூரில் இருக்கேன். எலக்ட்ரானிக் சிட்டி ஐ டி கம்பனி வேலை. ஹாஸ்டல் வாசம்..
“நந்து எங்கே இருக்கான்?”
“அவன் மும்பையில் இருக்கான். அந்த நிகழ்வுக்குப் பிறகு என்னோடு பேசறது இல்லை”.
“ஆமாம் நீ எங்க?”
“நான் சென்னையில் தான். டிசிஎஸ்ல.”
“சூப்பர்.”
“ஆமாம் என் நம்பர் எப்படிக் கிடைச்சுது.”
“அதுவா நம்ம விசு
வைச்சுருக்கிற வாட்ஸ்அப் குரூப் ல இருந்திச்சு. அதான் ஃபோன் செஞ்சேன்.”
வாராவாரம் கோபாலிடம் கௌசி பேசுவதும் கௌசியிடம் கோபால் பேசுவதும் தொடர்ந்தது..
அன்று ஒரு நாள் கௌசி பேசும் போது கொஞ்சம் பதட்டம் தெரிந்த நிலையில் ,” காணப்பட்டாள்.
“ கோபால் எனக்கு அர்ஜெண்டா 30 ஆயிரம் வேணும்; அம்மாவுக்கு உடம்பு சரியில்லை .ஹாஸ்பிடல் செலவு நான் அடுத்த மாசம் திருப்பிக் கொடுக்கிறேன்” முடியுமா?
நோ பிராப்ளம் கௌசி “இப்பவே அனுப்பறேன்.
“ நான் சொல்ற நம்பருக்கு ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் உடனே பண்ணு. “
“இரண்டு நாள் கழித்துக் கௌசி நம்பருக்கு ஃபோன் செய்த போது ஃபோன் ஸ்விட்ச் ஆப் என்று பலமுறை வந்தது.
“என்ன ஆச்சு கௌசிக்கு ?” மனதில் பயம் வந்தது கோபாலுக்கு.
சரி !நம் வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள கௌசி நம்பரை பார்க்களாம் . வேறு நம்பர் ஏதும் இருக்கலாம் என்று பார்த்த போது அதில் உள்ள நம்பரும் கௌசி பேசிய நம்பரும் வெவேறாக இருந்தது.
உடனே விசு இந்தக் குருப்க்கு அட்மின் அவனிடம் கேட்டபோது வாட்ஸ்அப் நம்பர் குரூப்பில் உள்ள ஒரே நம்பர் தான். வேறு நம்பர் ஏதும் அவளுக்கு இல்லை என்று சொல்லவும். அதிர்ச்சி அடைந்தான் கோபால் .
வாட்ஸ்அப்பில் உள்ள கௌசி நம்பரை கண்டாக்ட் பண்ணி பேசும் போது
“இப்ப தான்டா நான் உன்னிடம் பேசறேன்.என்ன ஆச்சு? என்று கேட்டாள் கௌசி.”
“இப்ப எங்கே இருக்கே நீ. பெங்களூரில் தான் இருக்கேன்.
எலக்ட்ரானிக் சிட்டியில்.”
“ஒன்னுமில்ல அப்புறம் விரிவா பேசறேன்.”ஓகே.போனை கட் செய்தான் கோபால்.
பேசும் போது பழைய கௌசி குரல் இவ்வளவு நாள் தன்னோடு பேசியதும் இதே குரல். தான்.
எல்லாத்தையும் விசு மூலம் கேள்விப்பட்ட கௌசி
கோபாலுக்கு ஃபோன் செய்து “ஒன் மேல பரிதாப படுவதை விட வேறு என்னடா செய்ய முடியும்?. நல்ல ஏமாந்துருக்கடா கோபால்? “ இப்படி ஒரு சைபர் கிரைமா? பயமா இருக்குடா.”
“என்னை மாதிரி பேசி யாரோ நம்மளைப் பத்தி தெரிஞ்சவங்க பண்ணின மோசடிடா இது.”
“நீ உடனே போய்ப் பக்கத்துப் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடு. “
“அரசாங்கம் அவ்வப்பொழுது சைபர் குற்றம் பத்தி தகவல் எச்சரிக்கை ஃபோன் மூலம் கொடுத்தாலும் இது புது மாதிரி சைபர் குற்றமாக இருக்கே?”
அவள் சொன்ன மாதிரி பக்கத்துப் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விபரம் முழுவதையும் எழுதி புகாராகக் கொடுத்தான் கோபால்
வருத்தப் பட்டார்கள் விசுவும் கௌசியும்.
ஆனாலும் கோபாலுக்குச் சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது.
“தன்னிடம் கௌசி என்று அறிமுகப்படுத்திப் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்வுகளை அச்சுப் பிசகாமல் சொன்னது யார்? “
“ஏன் அந்தப் பெண் தன்னிடம் கௌசி என்று அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும்?”
என்னை எப்படித் தெரியும்?
கௌசியைப் பற்றி எப்படித் தெரியும் ?
ப்ளஸ் 2பரிட் சை முடிந்த அன்று நடந்த விஷயம் எப்படித் தெரியும் ?”
“யார் அந்த ஆள்.? மிமிக்ரி ஆர்டிஸ்ட்? ஒரு பெண் ?அல்லது ஒரு ஆணா?”
தன் பணம் மீண்டும் கிடைக்குமா?
இப்போதைக்குக் கோபாலைப் பொருத்து இவைகள் விடை தெரியாத வினாக்கள்?
ஆனாலும் தமிழ்நாடு போலீஸ் ரொம்பத் திறமையானவர்கள். போலீஸும் சைபர் கிரைம் எக்ஸ்பர்ட் இரண்டும் பேரும் நிச்சயம் குற்றவாளியை கண்டு பிடிப்பார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட ஆபிசுக்குக் கிளம்பினான். கோபால்.
Leave a comment
Upload