காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர், குண்டுகுளம் கிராமப் பகுதியில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் செந்தில்குமார்-செல்வி தம்பதி. இவர்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை பாரம்பரிய முறைப்படி குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களுடன் கொண்டாடி வருகின்றனர். இத்தம்பதி, ஆண்டுதோறும் விவசாயத்தை போற்றும் வகையிலும், இளம்தலைமுறையினரிடம் விவசாயத்தின் சிறப்பு குறித்து, செங்கரும்பில் பிரமாண்ட பானை, ஜல்லிக்கட்டு காளை, பிரதமர் மோடியின் உருவம், பாரம்பரிய குடில் என 3 டன் செங்கரும்பில் வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, விவசாயத்தையும் அழிந்து வரும் நாட்டு காளை மாடுகள் மற்றும் மாட்டுவண்டிகளை கவுரவித்து, இதுபற்றி இளம்தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த ஒரு வார காலமாக 3 டன் எடையிலான செங்கரும்பில் மாட்டு வண்டி, 5 அடி உயரமுள்ள 2 காளை மாடுகளை உருவாக்கி வண்டியில் பூட்டி, பாரம்பரிய முறைப்படி கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினருடன் செந்தில்குமார்-செல்வி தம்பதி கொண்டாடி மகிழ்ந்தனர். செங்கரும்பில் மாட்டுவண்டி, காளை மாடுகள் அமைத்து, தங்களை போன்ற விவசாய குடும்பத்தினர் பாரம்பரிய முறைப்படி வணங்குவதை
கண்டு காஞ்சிபுரம் மாவட்ட கிராம மக்கள் நேரில் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Leave a comment
Upload