மார்கழி மாத குளிருக்கு தேநீர் சாப்பிட்டால் இதமாக இருக்கும் என்று அந்த அதிகாலை வேளை 5 மணி க்கு.காரில் போய்க் கொண்டுருந்த அவன் அந்தக் கிராமத்தின் எல்லையில் இருந்த அந்தத் தேநீர் கடை முன்பு நிறுத்தினான்.
அந்தத் தேநீர் கடையின் அருகில் .நாலு விதமான சாலைகள் தென்பட்டன. தான் எதிர்பார்த்து வந்த அந்த ஊரின் பெயரை தெரிந்து கொள்ள .
அந்த இளைஞன் அந்தத் தேநீர் கடையில் தேநீர் அருந்திவிட்டு, தான் போகவேண்டிய முகவரியை அவரிடம் விசாரித்தான்..
“சிவசாமி அய்யா வீடா! இப்படியே வடக்கால ஒரு கிலோமீட்டர் உள்ளே போயி,கிழக்குப் பக்கம் போங்க , அவங்க வீடு வரும்”.
ஆமாம் “நீங்க கார்த்திக் ஃப்ரெண்டா . ஆனா அல்பாயுசு அந்தத் தம்பி இறந்து ஆறு மாசம் ஆச்சு!”
“வந்தவர் யார் என்று தெரியாமல் இப்படி மற்றவர் குடும்பத்தைப் பத்தி சொல்வது கிராம மக்களின் வெள்ளந்தியான பழக்கம்.
டீ குடித்த கிளாஸ் மற்றும் பத்து ரூபாய் பணத்தைக் கொடுத்து விட்டு, டீ நல்லா இருக்கு ; ரொம்ப நன்றி கடைக்காரரே”. வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
அடுத்தப் பத்தாவது நிமிஷம் தாங்கள் வீடு முன்பு அதுவும் அதிகாலை யார் வந்துருப்பாங்க? என்று ஆவலுடன் அந்த வீட்டில் இருந்த மூன்று பேரும் வாசலுக்கு வந்தனர்.
ஒரு கூடை நிறையப் பழங்கள் மற்றும் புதுத் துணிகள் சகிதமாக உள்ளே வந்த இளைஞனை கண்ட சிவசாமி, அடையாளம் கண்டு வரவேற்றார்.
“வாங்க தம்பி.!வாங்க!”
“இத பாரு மீனாட்சி!. இது மனிந்தர் சிங். நம்ம கார்த்திக் மூளை சாவில் இறந்த போது ,உறுப்புகளை மத்தவங்களுக்குக் கொடுத்த மாதிரி, இவருக்கு நம் கார்த்திக்கின் இதயத்தைத் தானம் பண்ணி இருக்கோம்.”
“கார்த்திக் இறந்த சோகத்தில் நீ மயக்கமா இருந்தப்ப, இவருக்கும் அறுவை சிகிச்சை; நீயும் இவரைப் பார்க்க முடியல. அவரும் உன்னைப் பார்க்க முடியல”.
கார்த்திக்கை பற்றிச் சொன்னதும் மீனாட்சியின் கண்கள் கலங்கின.
“ஒங்களைப் பார்த்து நேரில் நன்றி சொல்லணும் ; நந்தினியை பார்க்கணும்ன்னு நினைச்சேன்.இப்ப தான் வர முடுஞ்சுது.”
“என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா. அய்யா நீங்களும் நில்லுங்க”
இருவரையும் நமஸ்கரித்து எழுந்தான்.
“ரொம்பச் சந்தோசம் தம்பி.
ஒரு வாரம் இருந்துட்டு போகலமில்ல.கார்த்திக் இதயத்துடன் நாங்க பேசணும் .”
“நிச்சயமா அய்யா”.
அழகிய கிராமம் எங்கும்
பச்சைப்பசேல் வயல்கள். நாரைகள் பறந்து அங்கும் இங்கும் சென்றகாட்சி , பறவைகளின் ஒலி.ஒரு சங்கீதம் போல் இருந்தது. ஓடையில் ஓடும் தண்ணீரின் சலசலப்பு ;. ஆற்றில் இறங்கி ஆசை தீர குளித்தது.. எல்லாமே பிடித்திருந்தது.
கார்த்திக் பற்றியும், அவன் அம்மா மேல் வைத்துருந்த பாசம். அம்மாவுக்குப் பிளட் கேன்சர் எப்படி வந்தது .விவசாயியான அப்பா கடன் வாங்கிக் கார்த்திக்கை படிக்க வைத்தது.அந்த குடும்பத்தின் எதிர்காலம்? அவன் மூலம் குடும்பம் நிமிர போகிறது .இனி அந்தக் குடும்பம் செழிப்பாகப் போகிறது என்று நினைக்கும் நேரத்தில் தான்
கார்த்திக் டூ வீலரில் ஆபிஸ் போன போது , லாரி ஒன்று நிலை தடுமாறி, இவன் மீது மோதி மூளை சாவு தெரிந்த போது மனிந்தர் கண்கள் கலங்கின.
சிவசாமியின் உன்னதத் தன்மை செயலினால், தன் மகனின் உடல் உறுப்புகள் பிறருக்கு உதவட்டும்; எரிப்பதால் என்ன நன்மை? என்று செயல்பட்டு , இதயம்,கிட்னி கல்லீரல் முதலியவற்றைத் தானமாகக் கொடுத்ததும்.....
மனிந்தர் பஞ்சாப்பை சேர்ந்தவன் .
சாப்ட்வேர் இஞ்சினியராகச் சென்னையில் வேலை பார்க்கும் போது இறுதி நிலை இதயச் செயலிழப்பை சந்தித்தவன் மருந்துகள் மூலம் தீர்வு இல்லை என்கிற நிலை .மனிந்தர் இதயம் நிரந்தரமாகச் சேதமடைந்துள்ளது ,அதே சமயம் உடல் முழுவதும் போதுமான இரத்தத்தைப் பம்ப் செய்ய முடியாது என்று நிலை வந்த போது இதய மாற்று அறுவை சிகிச்சையே கடைசித் தீர்வு .ஏற்கனவே பதிவு செய்து இருந்ததால் சீக்கிரமே . அவனுக்கு மாற்று இருதயம் பொருத்தப் பட்டுருந்தது.
“அந்த ஒரு வாரமும் அவன் அந்தக் குடும்பத்துடன் நெருங்கி பழக மீனாக்ஷிக்கு மனிந்தர் மீது அதிகப் பாசம்
ஏற்பட்டிருந்தது.
“நானும் ஒங்க கார்த்திக் மாதிரி தான்.எனக்கு வாழ்வு கொடுத்த கார்த்திக் குடும்பத்துக்கு நான் கை கொடுப்பேன்.நந்தினியை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுப்பேன். நெகிழ்ச்சியுடன் சொன்னான்.
பெரும்பாலான மதங்களில் மற்றவர்களுக்கு உதவுமாறும் நல்லது செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. என்பது எல்லோருக்கும் தெரியும் .
“ எங்கள் சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக், மரபணுக்களில் தன்னலமற்ற சேவையும் கடின உழைப்பும் பிரார்த்தனையின் அளவுக்கு முக்கியமானது என்று அறிவுறுத்தியுள்ளார்.
சீக்கியர்கள் குருத்வாராவுக்குச் செல்லும்போது புனித நூலின்முன்பு நன்றி தெரிவிப்பார்கள், ப்ரார்த்தனை செய்வார்கள். நானும் அப்படித்தான் நன்றி சொல்ல தான் இங்கு வந்தேன். ஒங்க வீடு தான் எனக்குக் குருத்வாரா
பஞ்சாபில் உள்ள ஒரு மசூதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகைக்கு வரும் பக்தர்களின் காலணிகளைக் கடந்த 40 வருடங்களாகப் பார்த்துக்கொள்கிறார் என் அப்பா ராகுல்சிங்.
"மனிதநேயம் என் மதத்தை விட உயர்வானது" என அப்பா உணர்த்திகொண்டே இருப்பார். . ஆனால் என் அப்பாவை விட ஓசந்த மனசு ஒங்களுக்குத் தான்.
“என்ன மனிந்தர்! இந்தச் சின்ன வயசுல இவ்வளவு பக்குவப்பட்ட மனசு
. ஒங்க அப்பா அம்மா கொடுத்து வைச்சவங்க.”
“இல்லப்பா எங்க அம்மா எனக்காகப் பட்ட கஷ்டம் நிவர்த்தி ஆகும் நேரம் அவங்க பார்க்க கொடுத்து வைக்கல”. இறந்துட்டங்கா.
அம்மாவை பற்றி நினைத்ததும் கண் கலங்கவே
மீனாட்சி அவனை அணைத்து ஆறுதல் சொல்லவும்.இருவரும் உணர்ச்சி வசப்பட்டார்கள்
அப்பா ஊர்ல சேவை செய்யறது தன் விருப்பம். எனவே என்னுடன் சென்னை வரமாட்டேன்னு சொல்லிட்டாரு.”
சீக்கிய மதத்தில் நன்மை செய்வது என்பது ஒரு கொண்டாட்டம், கடமை அல்ல.
உன்னைப் போல் எல்லாச் சீக்கியர்களும் சேவை செய்வதிலமகிழ்பவர்களாகவும் இருக்கிறார்ளா? என்று எதிர் கேள்வி கேட்டார் சிவசாமி.
“இல்லை அய்யா நிச்சயமாக இல்லை.ஆணாதிக்கச் சிந்தனை, வன்முறை சீக்கியர்களின் நற்பண்புகளைப் போலவே அந்தப் பிரச்னைகளும் பரவலானாவை”.
.ஆமாம் உன் பெயருக்கு அர்த்தம் என்ன ? தெரிந்த கொள்ள விருப்பம் என்றார் சிவசாமி.
இதயங்களின் கடவுள்; மனம் கடவுள்; அன்பின் கடவுள்; இதயத்தின் அரசன்தோற்றம். என்று பல அர்த்தம் அய்யா.
ஒருவேளை கார்த்திக்கின் நல்ல இதயம் என்னுள் இருக்க வைத்த ஆண்டவனின் விளையாட்டு இது என நினைக்கிறேன்.
இதை முன்கூட்டியே அனுமானித்துத் தான் என் பெற்றோர்கள் அப்படிப் பெயர் வைத்தார்களோ என்னவோ. நல்ல இதயமும் என் எண்ணமும் என்னுள் இருக்கே அதான் அப்படி.”
மீனாக்ஷி அவனைத் தழுவி கொண்டாள்.அதில் தாய்மை. உணர்வு இருந்தது
“தாங்க்ஸ் அண்ணா! அம்மா ரொம்ப நாளைக்குப் பிறகு ஒங்க பேச்சை கேட்டு சிரிக்காறாங்க.”
“அய்யா இப்படிச் செஞ்சா என்ன ?நீங்க அம்மா நந்தினி மூணு பேரும் என்னோட சென்னை வந்து தங்குங்க! “
“அம்மாவுக்கு டிரிட்மென்ட் எடுக்க வசதியா இருக்கும்.”
வேண்டுகோள் விடுத்தான் மனிந்தர்.
“இல்லப்பா !அது நல்லா இருக்காது. சிவசாமி மகனின் உடல் உறுப்புகள் தானம் என்கிற பெயரில் கொடுத்துட்டு, காசு வாங்கி இருப்பான். இப்ப இதயத்தைக் கொடுத்துட்டு இந்த இளைஞனிடம் அதுக்கும் விலை பேசி இருக்கான். அப்படின்னு ஊர் பேசும். ஊர் வாயை மூட முடியாது.”
“நான் பணம் காசு எதிர்பார்க்கல. எங்கோ யாருடைய உடம்பிலோ என் கார்த்திக் வாழ்கிறான்.அது போதும்.”
.”இனி மாச மாசம் நான் வந்து இரண்டு நாள் தங்கி அம்மாவுக்கு வேண்டிய எல்லா உதவியும் செய்ய விருப்ப படுகிறேன் .”
அப்புறம் நந்தினியை காலேஜில் சேருங்க. இதயத் தானம் பண்ணிய குடும்பத்துக்குக் கல்வி தானம் கொடுக்கணும். டிகிரி முடிக்கிற வரைக்கும் நான் படிக்க வைக்க அனுமதி கொடுக்கணும்.
எதிர்பாராமல் அன்று இரவே மீனாட்சி ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனாள்.
சிவசாமி நந்தினி இரண்டு பேருடைய சோகம்
ஆறுதல் கூற முடியாமல் தவித்தான்.மனிந்தர்
“அம்மா அம்மா என்னை விட்டு விட்டு போய் ட்டடீங்களே..”!
யார் மீனாக்ஷிக்கு அந்திமகிரியை செய்வது என்று மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென உள்ளே போனவன், வேட்டி துண்டுடன் தீ சட்டி ஏந்தி அந்திமகிரியைக்குத் தயார் ஆனான். கார்த்திக் அம்மா என் அம்மா. அம்மாவுக்கு .என் இதய அஞ்சலி.
மனிந்தரின் இந்தச் செய்கையைக் கடலளவு மனசு என்று பாராட்டிய ஊர் மக்களிடம் . எங்க சீக்கிய மாதம் கற்று கொடுத்ததை விடச் சிவசாமி அய்யா செய்த காரியம் தான் கடலளவு மனசு என்று அவரைத் தழுவி கொண்டான் மனிந்தர்.
Leave a comment
Upload