ராஷ்மிகா
ஹீரோயினிக்கு முக்கியத்துவம் தரும் "தி கேர்ள் பிரண்ட் "படத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா.
விடாமுயற்சி
அஜித் நடிக்கும் விடாமுயற்சி படபிடிப்பு முடிந்து விட்டதாக இயக்குனர் மகிழ் திருமேனி நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன்
புஷ்பா 2 படம் மூலம் இந்தி ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறார் அல்லு அர்ஜுனா. நேரடி இந்தி படத்தில் நடிக்க அவரை கரண்ஜோக்கர் அழைத்து இருக்கிறார். 400 கோடி ரூபாய் சம்பளம் தர தயார் என்றும் சொல்லியிருக்கிறார்.
புறநானூறு
அமரன் படம் வெற்றியை தொடர்ந்து புறநானூறு படத்துக்கு தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சமந்தா
"தி பேமிலிமேன்" வெப் சீரிஸ் இயக்குனர்களான ராஜ், டி.கே ஆகியோரில் இயக்குனர் ராஜ்ஜை சமந்தா காதலிக்கிறாராம். விரைவில் இவர்கள் திருமணம் என்கிறார்கள்.
சாய் பல்லவி
சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம் படத்தின் முதல் பாகம் முடிவடைந்து விட்டது. இப்போது இரண்டாவது பாகம் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பிரக்யா நக்ரா
நடிகர் ஜெய் அறிமுக இயக்குனர் பிரதாப் இயக்கத்தில் பேபி & பேபி படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி பிரக்யா நக்ரா.
அம்பி
காமெடி நடிகர் ரோபோ சங்கர் அம்பி என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
ட்ராப்
இளையராஜா பற்றிய பயோபிக் தனுஷின் கனவு படம் தி ராஜா சாப். இப்போது ட்ராப் என்ற ஒரு பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது. திரைக்கதை எழுதும் பொறுப்பில் இருந்து ஏற்கனவே கமல் விலகி விட்டார். தற்சமயம் இந்த படம் பற்றிய எந்த அப்டேட்டும் இல்லை. அதனால் இப்போது இப்படி ஒரு பேச்சு வருகிறது.
வாமிகா
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பஞ்சாபி என்று எல்லா வுட்களிலும் நடிக்கிறார் வாமிகா. இவர் நடித்த பேபி ஜான் படம் அடுத்த வாரம் ரிலீஸ். இந்த படத்தில் என் ரசிகர்கள் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் என்கிறார் இவர் அது என்னவோ தெரியல
நயன்தாரா
தமன்னா, ஸ்ரீ லீலா சமந்தா வரிசையில் ஒரு பாடலுக்கு நடனமாட நயன்தாராவும் முடிவு செய்துவிட்டார். தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் தி ராஜா ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதித்திருக்கிறார் நயன்தாரா.
திரிஷா
படப்பிடிப்புக்காக கோவை சென்ற நடிகை திரிஷா மருதமலை முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்த ஒரு ரசிகர் தொடர்ந்து அக்கா.. அக்கா... என்று அவரை அழைக்க திரிஷா சிரித்தபடி கையசைத்தார்.பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்களிடம் தானே பேசி இப்பவும், ஹீரோயினி சான்ஸ் கேட்டு வருகிறார் திரிஷா.
Leave a comment
Upload