2024 ஆண்டு முடிந்து…. 2025 புது வருட பிறப்பு ஆரம்பம்…!.
வல்லரசு நாடுகள் தயாரித்து ஸ்டாக்கில் வைத்திருந்த ஆயத குவியல்களை எதிரி நாடுகள் மீது போர் தொடுத்து தங்கள் ஆயுத குடவுன்களை காலி செய்து ஷோ காட்டியது தான் ஹாட் டாபிக்.
போர்விமானங்கள் சென்று எதிரி நாட்டு நிலைகள் மீது குண்டு வீசுவது ஓல்டு ஸ்டைல் .தற்போது ட்ரோன் முலம் குண்டு வீச செய்வது புதிய டெக்னிக் .
ரஷ்யா தனது சூப்பர் ஏவுகணையை உக்கிரைன் மீது வீசியது .சூப்பர் ஏவுகணை வீசப்பட்ட இடத்தில் சுமார் 4000°C வெப்பம் வெளியானதாக தகவல். புல் ,பூண்டு முதல் இரும்பு வரை உருகிவிடும் வெப்பம் .
சில வல்லரசு நாடுகள் போர் மூலம் தங்கள் ஆயுதங்களை வெடிக்க வைத்து பூமி பந்தில் நச்சு வாயுக்களை வெளியிட்டு ப்ரிவியூ நடத்தி காட்டியதால் புவி மேலும் வெப்பமயமாக்கியது .
தமிழகத்தில் தெரு நாய்கள் மற்றும் ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு இருந்தாலும் இதற்கான தீர்வினை எட்டாமல் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருவது வேதனை என்று பொதுமக்கள் கருத்தாக உள்ளது.
தமிழக அரசியலில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதிவியேற்று கொண்டார்.சென்னையின் பிரதான சாலையில் எப்-4 கார் ரேஸ் நடத்தி அசத்தினார்.
துணை முதல்வர் பதவியேற்பிற்கு பின்பு தமிழக அரசியலில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தார்.அனைத்து எதிர்கட்சிகளும் ஆளும் திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்து வருகிறது.
திமுகவின் அடுத்த கட்ட தலைவர்கள் தினந்தோறும் அறிக்கைகள் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
2026 சட்டசபை தேர்தல் வர இன்னும் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் அதற்குள் எந்த கூட்டணி பிரியும் , எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டிபி ரேட் எகிற தனியார் தொலைகாட்சிகள் டிபேட் காதை கிழித்து கொண்டிருக்கிறது.
வோட்டுக்கு விட்டமின் “ப”தேர்தல் நேரத்தில் யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவரே வெற்றி வீரர் என்று தமிழகத்தில் திருமங்கலம் பார்முலா தான் வெற்றி பெறும் என்று மூத்த அரசியல்வாதிகள் நமட்டு சிரிப்புடன் பேசி கொள்கிறார்கள்.
எடப்பாடி ,அன்பு மணி ராமதாஸ்,திருமா , விஜய் , ,அண்ணாமலை, சீமான் என இவர்களும் தங்கள் பங்குக்கு சூடான சுவையான டாபிக் பேசி தமிழக மக்களை கவர்ந்து வருகிறார்கள் . இவர்களின் பெரும் குறிக்கோள் ஆட்சியில் பங்கு அல்லது அதிகாரம் என்பதே மெயின் டாபிக்காக இருக்கிறது.திமுக விற்கு பெரும் தலைவலி இவர்கள் என்பது அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருக்கிறது.
நிர்மலா சீதாராமன் தன் பங்குக்கு எதில் எல்லாம் ஜிஎஸ்டி வரி ஏற்றி வசூல் செய்யலாம் என்று ரூம் போட்டு யோசித்து அறிவித்து வருகிறார்.
நன்றி: தினமணி
பாராளுமன்ற விவாதம் என்பது தற்போது அடிதடி கலாட்டா மன்றம் ஆகிவிட்டது.
நாடு முழுவதும் கிட்டதட்ட 40 சதவீத விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு எகிறி மிடில் கிளாஸ் பேமிலி,ஏழை எளிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது.இதை பற்றி எந்த பிரதான அரசியல் கட்சியின் எம்-பியும் பாராளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் தடியெடுத்தவன் தண்டல்காரன் மாதிரி எம்பிக்கள் நடந்து கொள்வது பொதுமக்கள் இடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் தெரியாமல் ஏதாவது ஒரு உபயோகமில்லாத டாபிக் எடுத்து கொண்டு அரசியல்வாதிகள் பேசி வருவது 2024 காமெடி காலட்டா தான்.
பாராளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போட்ட தள்ளுமுள்ளு சண்டை நாடே பார்த்து சிரித்தது.மக்கள் பிரச்சனை பேசுங்கள் என்று எம்பிக்களை தேர்ந்தெடுத்து அனுப்பினால் மக்கள் பணத்தினை இப்படி விரயம் செய்கிறார்களே என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.
வேலைவாய்ப்பு குறித்து எந்தவொரு அரசியல் கட்சியும் சிறிதும் கவலை படாமல் இருப்பது வேதனையான செய்தியாக உள்ளது.
வடகிழக்கு பருவ மழை அதிகப்படியாக 33 சதவீதம் தமிழகத்தில் பொழிந்தது. மழை நீரை உரிய முறையில் வரும் காலத்திற்கு சேமித்து வைத்தோமா என்பது பில்லியன் டாலர் கேள்வி.
மார்கழி மாதத்தில் தமிழகமெங்கும் பெண்கள் விடியற்காலை நேரத்தில் மா-கோலமிட்டு பூசணி பூ வைத்து கொண்டாடுவது இந்த ஆண்டு இது மிஸ்ஸிங். பெண்கள் கோலமாவு அரிசியில் தயாரித்து கோலமிடுவார்கள்.இப்போது ரெடிமேட் கல் கோலமாவு பயன்படுத்துகிறார்கள்.
பேன் இந்தியா படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அறிவித்து ரிலீஸ் செய்தால் மூன்று நாள் கூட திரைப்படம் ஓடாம ப்ளாப் ஆகிவிடுகிறது.
திரைப்படத்திற்கு கதை , திரைக்கதை பற்றி கவலை படாமல் ஸ்டார் வேல்யூ நடிகர்களை முன்னிறுத்தி படத்தினை விளம்பரம் செய்து தயாரிப்பாளர்கள் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தினை சந்திக்கிறார்கள்.
இனிமையான இசை என்பது தமிழ் சினிமாவில் கேட்டு நீண்ட நாட்களாகி விட்டது.
ஒரே பேய் கத்தல் சவுண்ட் ஒரு புறம், சென்சார் மீறி வரும் அதிக வன்முறை காட்சிகள் மறுபுறம் என திரைபடங்கள் படுதோல்வி அடைந்துவருகிறது. எளிமையாக ஆரவாரமில்லாமல் வந்த லப்பர் பந்து, மெய்யழகன் போன்ற சிறிய பட்ஜெட் திரைபடங்கள் பெருமளவில் வெற்றி பெற்றது .
திரிஷா நாய் இறந்தது கூட தமிழகத்தில் மீடியா பிரேக்கிங் நியூஸ் போடும் அளவிற்கு சென்றுவிட்டது.
தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பேர் திருமலை திருப்பதி கோயில் சென்று வழி படுவது வழக்கம், தற்போது பெங்களூரில் இருந்து சிறப்பு டிக்கெட் போலியாக அச்சடித்து வந்துள்ளது என்று திருப்பதி போலீசார் ஒருவரை கைது செய்து திருமலை தரிசனம் தற்போது அதிக கெடுபிடி ஆகிவிட்டது.
ஜனவரி 10 ந் தேதி வைகுண்ட ஏகாதசி …ஸ்ரீரங்கத்தில் தட புடல் ஏற்பாடுகள் இப்போதே நடந்து வருகிறது.
வரும் ஆண்டாவது மக்களுக்கு செழிப்பான ஆண்டாக இருக்க வேண்டும்
Leave a comment
Upload