பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்: இமாசலப் பிரதேசம், மண்டி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜ சார்பில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி-யானார். அதன்பிறகு அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதில் முதலிடம் பிடித்து, 2024-ம் ஆண்டில் கங்கனா ரணாவத் அதிகளவு செய்திகளில் இடம்பிடித்து பிரபலமடைந்தார்.
மஹுவா மொய்த்ரா: மேற்குவங்க மாநிலத்தில் கிருஷ்ணா நகர் நாடாளுமன்றத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மஹுா மொய்த்ரா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி-யானார். அதன்பிறகு, தனது சர்ச்சைக்குரிய அறிக்கைகளால் டிவி மற்றும் நாளேடுகளில் தலைப்பு செய்தியாக மாறி, 2024-ம் ஆண்டு அரசியல் வானில் 2-வது பெண் பிரபலமாகத் திகழ்ந்து வந்துள்ளார். இரண்டாவதாக அரசியல் வானில் பிரபலமடைந்தார். ஒருகட்டத்தில், இவரது சர்ச்சைக்குரிய கருத்துகளால் எம்பி பதவியைக்கூட இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சுவாதி மாலிவால்: டெல்லியில் சமூக ஆர்வலரும் மாநிலங்களவை எம்பி-யுமான சுவாதி மாலிவால், டெல்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டினால், 2024-ம் ஆண்டில் 3-வதாக சுவாதி மாலிவால் டெல்லி மக்களிடையே பிரபலமானார்.
மாதவி லதா: ஐதராபாத் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட மாதவி லதா, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியிடம் தோல்வியடைந்தார். மேலும், இவர் இரு வகுப்பினரிடையே வகுப்புவாதத்தை தூண்டியதாக குற்றச்சாட்டுகள்கூட எழுந்தது. அதன்பிறகு சமூக ஊடகங்களில் பல்வேறு வகைகளில் விமர்சிக்கப்பட்டு வருவதால், அரசியல் வானில் 4வது பெண்ணாக மாதவி லதா பிரபலமடைந்து உள்ளார்.
வசுந்தர ராஜே: ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வராக கருதப்பட்ட ராஜகுடும்பத்தை சேர்ந்த வசுந்தர ராஜேவுக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவில் பாஜ மேலிடம் முதல்வரை பதவியை தரவில்லை. அவருக்கு பதிலாக, பாஜ மூத்த தலைவர் பஜன்லால் ஷர்மாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதன்பிறகு அரசியல் வானில் ஒதுங்கியிருந்த வசுந்தர ராஜே, தனது சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலம் பிரபலமாகி 5-வது பெண் அரசியல்வாதிகள் இடம்பிடித்துள்ளார்.
Leave a comment
Upload