ஒவ்வொரு 365 நாட்களுக்கு பிறகு ஒரு புது வருடம் உதயமாகிறது.
ஒவ்வொரு புது வருடமும் ஒரு புதிய பயணத்தை, இலக்கை நோக்கி நம்மை நகர்த்துகிறது. புதிய உந்துதல்கள் புதிய முயற்சிகளை தருகின்றது. அப்படியென்றால் கடந்த வருடங்களில் இது எதுவும் நிகழவில்லையா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
கடந்துப் போன வருடம் ஒவ்வொன்றும் புது விதமான சிறந்த அனுபவத்தை தந்துள்ளது. மகிழ்வான நிகழ்வுகள், வெற்றிகள், நட்புகள், பயணங்கள் வாய்ப்புகள், உறவுகள் என பலவும் நம்மை மேம்படுத்தவும் , நமக்குள் ஒளிந்திருக்கும் திறமையை, தைரியத்தை நமக்கே அடையாளப்படுத்திய தோல்விகள், காரணம் தெரியாத வெறுப்புகள், துடிக்க வைத்த துரோகங்கள், வலிக்கச் செய்த அவமானங்கள், கைநழுவிச் சென்ற வாய்ப்புகள்,விட்டுச் சென்ற உறவுகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியது. நினைவுகள்-
இதுவே நமக்கு ஒவ்வொரு ஆண்டும் கிடைத்த மிக உயர்ந்த ஒப்பற்ற பரிசு. அனைத்தும் அனுபவமாக நம்மை செதுக்கத்தான் வந்துள்ளது என்பதை உணர்த்துகிறது. வாழ்க்கைப் பயணத்தில் இளைப்பாறவும், களைப்பு நீங்கி முன்னோக்கிச் செல்லவும் இது உதவுகிறது.
ஒவ்வொரு வருடமும் நமக்கு பல நினைவுகளை விட்டுச் செல்கின்றது அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சியை இந்த புது வருடத்தில் எடுக்கும் தீர்மானங்கள் அந்த தீர்மானங்கள் வெறும் தீர்மானங்களாக அல்லாமல் நாம் தினந்தோறும் அவற்றை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதே மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும் .ஒரு புதிய பயணத்தை நோக்கி புதிய ஆவல், புதிய முயற்சிகளை தருகின்றது. கடந்து போன வருடமோ சிறந்த அனுபவத்தை தருகின்றது.
ஒவ்வொரு வருடமும் நமக்கு பல நினைவுகளை அனுபவப் பாடமாக விட்டுச் செல்கின்றது. அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சியை இந்த புது வருடத்தில் எடுக்கும் தீர்மானங்கள் தருகின்றது. அந்த தீர்மானங்கள் வெறும் தீர்மானங்களாக அல்லாமல் நாம் தினந்தோறும் அவற்றை செயல்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றுவதே மிக முக்கியமாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
அதற்கு நாம் நேரத்ததை சரியாகவும், விவேகமாகவும் பயன்படுத்த வேண்டும்.
ஆகவே,
கடந்து செல்லும் கணமொன்றும் ,
கடின உழைப்பை தருவாயே,
நடந்து செல்ல அலுப்பானால் ,
நமக்கு யார் உதவிடுவார்?
நடக்க முடிக்கையில் ஓடவும்,
ஓட முடியில் பறக்கவும்,
ஆயத்தமாக இருக்க முனைவாயே ,
கால்கள் நமக்கு
பயணத்துணை ,
காலம் நமக்கோ வாழ்க்கைத்துணை,
சிறுகச் சிறுக சேமிக்க, காலம்
நமக்கு காத்திராதே,
அந்த கணத்தை அப்பொழுதே,
முழுதாய் நீயும் பயன்படுத்து,
முடிந்துவிட்டால் திரும்பாது,
விலையெதிலும் அடங்காது,
விட்டு விட்டால் அவ்வளவுதான்,
விரட்டிப் பிடிக்க முடியாது,
தட்டிப் பறிக்க நினைக்காதே,
தரமாய் உழைத்தால் உயர்ந்திடுவாய்,
தரணியை நீயும் வென்றிடுவாய்,
ஏற்றத்தாழ்வு இதற்கில்லை,
சாதி மதமும் பார்ப்பதில்லை,
அதனால் காலம் எப்போதும்- கைகளில் இருக்கட்டும்
கவனமாய்!!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Leave a comment
Upload