பிரபு மெல்ல கண்விழித்துப் பார்த்தார். இப்பொழுதுதான் அவர் மெல்ல மெல்ல நினவுக்கு வருகிறார்.நேற்று மாலை ஆபீஸிலிருந்து காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்பொழுது எதிர்பாராமல் ஒரு திருப்பத்தில் வேகமாக வந்த லாரி, இவருடைய காரின் டிரைவர் பக்கம் இடித்தது. இந்நிகழ்வு அவரை நிலை குலைய வைத்து, மயக்கத்தில் தள்ளியது. அதுவரைதான் அவருக்கு நினைவில் இருக்கிறது. அப்புறம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. தான் இருக்கும் இடம் ஒரு ஹாஸ்பிடல் ஐ சி யு என்பதை மட்டும் புரிந்து கொண்டார்.
அவரைப்பார்க்க வந்த டாக்டர் அவரை பரிசோதித்தார். ‘ஒன்னும் யோசிக்காதீங்க. கண்ணை மூடி ரிலாக்ஸா தூங்குங்க.’யூ ஆர் அவுட் ஆப் டேஞ்சர்’ என்று சொல்லிவிட்டு மெல்ல நகர்ந்தார்.
’அப்ப இதுவரை டேஞ்சரில் இருந்தோமா?’என்று மனதிற்குள் எண்ணினார் பிரபு.
ஒரு நர்ஸ் வந்து அவருக்கு ஒரு இன்ஜெக்க்ஷன் போட்டாள். மண்டையில் கட்டு போட்டு இருந்தது. என்ன நடந்தது என்று நர்சிடம் மெதுவாக கேட்டான்.
அவளும் மெதுவாக சொல்லத் தொடங்கினாள்.‘மெயின் ரோட்டில் உங்க காருக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு. நீங்க மூச்சு பேச்சு இல்லாம இருந்திங்க. யாரோ ஒரு பையன் உங்கள இங்க கொண்டு வந்து சேர்த்தான். உங்களுக்கு பிளட்டும் கொடுத்து உங்களை காப்பாத்தி இருக்கான். இப்ப நீங்க உயிரோடு இருக்க, அந்த பையன்தான் காரணம். நேற்று மாலை 5 மணி இருக்கும்’
’இப்ப மணி என்ன?’ என்று கேட்டான் பிரபு.
’இப்ப மணி 5.கொஞ்ச நேரத்தில பொழுது விடியப் போகுது’
’கவலைப்படாதீங்க. .ஒரு பத்து நாள் ரெஸ்ட் எடுத்தா போதும்.’என்று சொல்லிவிட்டு அவளும் நகர்ந்து விட்டாள்.
கண்ணை மூடிய பிரபு கொஞ்சம் நேரத்துல அப்படியே தூங்கிவிட்டார்.
பொழுது விடிந்தது. உடல் நலம் சற்று பரவாயில்லையாக அவனுக்கு தோன்றியது. மெல்ல எழுந்து உட்கார்ந்தார். அந்த பையனை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதற்குள் அவனுடைய மனைவியும், மகளும் வந்துவிட்டார்கள். முதுகை தட்டி அவர்கள் அவருக்கு ஆறுதல் சொன்னார்கள்.
மனைவியின் காதில் மெதுவாக ’அந்தப் பையனை பார்க்க வேண்டும்’ என்று சொன்னார்.
’அந்தப் பையன் பேர் பாபுவாம். வயது 25 இருக்குமாம். ரிசப்ஷனில் கேட்டு தெரிந்து கொண்டேன். சிசிடிவி ஃபுட்டேஜ்ல அவனுடைய போஃட்டோவ எடுத்து வைச்சிருக்கேன். அட்ரஸும் வாங்கி வைச்சுருக்கேன்.கடவுள்தான் அவன இங்க அனுப்பியிருக்கு. நீங்க கவலைப்படாம இருங்க’ என்று அவர் மனைவியும் மெதுவாகச் சொல்லி அவனை சமாதானப்படுத்தினாள்.மகளின் விசும்பல் சத்தம் கேட்ட பிரபு கொஞ்சம் அடக்கி வாசிக்கத் தொடங்கினார்.
வழக்கம் போல ஒரு ஃபிளாஷ்பேக்.
பிரபு சுமார் 45 வயதான தொழிலதிபர். சென்னையில் ஒரு பிரபல கம்பெனியின் எம்.டி. அவருடைய கம்பெனியில் இன்று காலை ஒரு இன்டர்வியூ நடந்தது. அதில் கலந்து கொண்ட 10 பேர்களில் பாபுவும் ஒருவன். எம்.பி.ஏ. பட்டதாரி.
இண்டெர்வியூ நடந்து கொண்டிருந்த போது வந்த ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர் ஒருவரின் ஃபோன் கால் மற்றவர்களை பலிகடாவாக்கியது.அதில் பாபுவும் ஒருவன்.
அன்று மாலை பாபு அவனுடைய டூவீலரில் வீட்டுக்கு போய்க் கொண்டு இருந்தான். அவனுக்கு முன்னால் ’டமால்’ என்ற ஒரு சத்தம். ஒரு லாரி ஒரு காருடன் அந்த திருப்பத்தில் மோதியிருந்தது.
விரைவாக செயல்பட்ட பாபு அதில் நினைவிழந்து இருந்தவரை ஆம்புலனஸ்ல கொண்டு போய் ஆஸ்பிடல்ல சேர்த்தான்.
ஆஸ்பிட்டல்ல ஹெவி பிளட்லாஸ்’ன்னாங்க.ஆஸ்பிடல்ல கேட்ட பிளட் க்ரூப்பும்,அவனது பிளட் க்ரூப்பும் ஒன்னுதான்.தயங்காம. ஃபார்மலிடி எல்லாம் முடிஞ்ச பிறகு பிளட்டும் கொடுத்தான்.இதுக்குள்ள போலீஸூக்கும்,அவர் வீட்டுக்கும் ஆஸ்பிடல்ல தகவல் அனுப்பிட்டாங்க.
கொஞ்ச நேரம் ஆஸ்பிடல்ல இருந்த பாபு,’பிரபு அவுட் ஆஃப் டேஞ்சர்’ன்னு தெரிஞ்சதும் வீட்டுக்கு புறப்பட்டான்.
பாபுவைப் பற்றி தெரிந்தது முதல்...பிரபுவின் மனதில் குற்ற உணர்வு தலை தூக்கியது. ’மனிதம் இன்னும் உயிரோடு இருக்கிறது. அந்த மனிதம் இல்லாமல் நான் தான் இருந்து விட்டேன்.’ன்னு மனதில் புலம்பினான்.
பத்து நாள் கழிந்தது. கொரியர்காரன் கொண்டு வந்த தபாலில் பாபுவுக்கு அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் இருந்தது.ஆர்டரை படித்த பாபு அவன் அம்மாவிடம்,’மனிதம் இன்னும் உயிரோடு இருக்கிறது’ என்றான்.
அவனுக்கு தெரியாது, அவன் காப்பாற்றியது அவன் இண்டர்வியு அட்டண்ட் பண்ண கம்பெனியின் எம்.டி. என்று. அவன் அன்று இண்டெர்வியு அட்டெண்ட் பண்ணது மொத்தம் எட்டு கம்பெனியில் ஆச்சே!
’
Leave a comment
Upload