சென்னை அடையாறில் ஆளுநர் மாளிகை அருகே 189 ஏக்கர் பரப்பளவில் அண்ணா பல்கலைக்கழகம்.
15,000 மாணவ மாணவிகள் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் பி.எச்டி ஆராய்ச்சி படிப்புகள் படிக்கின்றனர்.. 3500 பேர்கள் பணியாற்றுகின்றார்கள்.
200 கட்டடங்கள் உள்ளன. 180 ஆய்வுக்கூடங்கள் இயங்குகின்றன.
இப்படி வரலாற்று சிறப்புமிக்க அண்ணா பல்கலைக்கழகம் கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்தி ஆகிவிட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் சாதனை ஏதும் செய்யவில்லை, பல்கலை வளாகத்தில் உள்ளேயே கல்லூரி மாணவி ஒருவர் பிரியாணி கடை உரிமையாளர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்கொள்ளப்பட்டார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திலிருந்து இன்னும் தமிழகம் வெளியே வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதன் அதிர்வுஅலை இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது என்று கூட சொல்லலாம்.
அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருக்கும் பொறியியல் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவருக்கும் இரண்டாம் ஆண்டு மாணவிக்கும் காதல்.
23-ஆம் தேதி இரவு 8 மணிக்கு பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் முதலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
காதல் வசப்பட்டு இருவருமே எல்லை மீறி இருக்கிறார்கள்.
இதை நோட்டமிட்டு பார்த்த ஒருவர் இதை அப்படியே வீடியோ எடுத்து அவர்கள் இருவர் முன்பும் செல்பேசியில் எடுத்திருந்த வீடியோவை காண்பித்து இப்போதே உங்கள் அப்பா அம்மாவுக்கு இந்த விஷயத்தை சொல்கிறேன்.
உனக்கு டிசி வாங்கி தருவேன். இனிமேல் படிக்கவே முடியாது என்று மிரட்டி இருக்கிறார்.
மிரண்டு போன இருவரும் கெஞ்ச வீடியோ எடுத்தவர் அப்படி என்றால் எனக்கும் நீ அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள் அப்போதுதான் விடுவேன் என்று மிரட்ட இருவரும் கெஞ்ச, அப்போது அந்த மிரட்டல் ஆசாமி காதலரை அடித்து விரட்டி விட்டார் என்ற தகவல் வெளியானது. .
சம்பவம் நடந்தது 23-ஆம் தேதி இரவு..... மறுநாள் 24-ஆம் தேதி அந்த மாணவி காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தொடர்பு கொண்டு டிசம்பர் 23-ஆம் தேதி இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் என்னை மிரட்டி நகை உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு சென்று விட்டார் என்று மட்டும் புகார் அளித்திருக்கிறார்.
இந்த புகாரின் விவரம் அழைப்பு வந்த தொடர்பு எண் புகார் அளித்த மாணவியின் பெயர் ஆகிய விவரங்கள் கோட்டூர்புரம் காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோட்டூர்புரம் உதவி ஆய்வாளர் அந்த மாணவியை தொடர்பு கொண்டு நான் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து எஸ்ஐ பேசுகிறேன் உங்கள் புகார் சம்பந்தமாக உங்களை நான் விசாரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு 24-ஆம் தேதி காலை அண்ணா பல்கலைக்கழகம் சென்றார்.
அங்கு மாணவி படிக்கும் துறையின் பேராசிரியர்களிடம் இது பற்றி விசாரித்த போது தான் அவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது தெரிந்திருக்கிறது. இப்போ எல்லோரும் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் மாலை வாருங்கள் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள் பேராசிரியர்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது எனவே இது நிச்சயம் பேசும் பொருளாகும் என்று உஷாரான எஸ்ஐ இது பற்றி உதவி ஆணையர் , துணை ஆணையர் ஆகியோரிடம் சொல்ல அவர்களும் உஷாரானார்கள்.
மாலையில் அந்த மாணவியிடம் போலீஸ் விசாரித்த போது அவன் என்னை நகைகளை மட்டும் பறித்து கொள்ளவில்லை என்னை கட்டிப்பிடித்து என்னை சீரழித்து விட்டான் என்று அந்த மாணவி கதறி அழ ஆரம்பித்தார்.
இது மிகவும் சீரியசான விஷயம் உஷார் ஆன போலீஸ் அந்த மாணவியிடம் அந்த நபர் பற்றிய அங்க அடையாளங்களை விசாரித்து பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர் அது சந்தேகப்படும்படி இருந்த சிலரை மாணவியுடன் காட்டிய போது மாணவி ஒருவனை அடையாளம் காண்பித்து இவன்தான் என்று ஆவேசமாக சொன்னார்.
போலீசார் அது பிரியாணி கடை நடத்தும் ஞானசேகரன் கோட்டூர்புரத்தில் உள்ளவன் ஏற்கனவே அவன் மீது வழக்குகள் உள்ளவன் குற்ற பின்னணி கொண்டவன் தான் என்றாலும் அவனுக்கு ஆளுங்கட்சி பின்பலம் உண்டு என்பதும் அவர்களுக்கு தெரியும்.
ஞானசேகரன் போலீஸ் பிடித்து விசாரித்த போது இருங்க சார் நான் மினிஸ்டர் கிட்ட பேசிட்டு வரேன், மாவட்டத்திடம் பேசி வரேன், என்றெல்லாம் சொல்ல பேசிக்கலாம் பேசிக்கலாம் வா என்று அவனை அப்படியே அள்ளி தூக்கி போட்டு கொண்டு சென்று விட்டார்கள்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்ற செய்தி தீயாகப் பரவியது. போலீசார் அவன் செல்பேசியை ஆராய்ந்த போது ஆபாச படங்களாக அதில் நிறைய இருந்தது. இந்த மாணவியையும் அவன் படம் பிடித்து வைத்திருந்தான்.
ஞானசேகரன் மீது 14 வழக்குகள் உள்ளன. பெண்கள் சம்பந்தமான பாலியல் புகார் சில சமயம் வந்த போது மேலிட அழுத்தத்தால் அவன் தப்பி இருக்கிறான். அது காவல்துறை முதல் முதலில் வெளியிட்ட செய்தி குறிப்பில் இவர் வேறு ஏதாவது குற்ற செயலில் ஈடுபட்டு இருக்கிறாரா என்று விசாரணை நடைபெறுகிறது என்று மட்டும் தெரிவித்தது
இந்த விஷயம் கேள்விப்பட்ட மாணவர் அமைப்பு அண்ணா பல்கலைக்கழக எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதிமுக பாஜக இரண்டு கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.
சட்ட அமைச்சர் நிருபர்களை சந்தித்து பேசும் போது அவருக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்து இருக்கிறார்.
சமூக வலை தளத்தில் பிரியாணி ஆசாமி ஞானசேகரன் மா.சுப்பிரமணியம், துணை முதல்வர் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்கள் வலம் வருகின்றன.
பாஜக அண்ணாமலை இந்த குற்றத்தை கையிலெடுத்து சாட்டையடி முதல், செருப்பு போடப் போவதில்லை என்று சபதம் முதல், திமுகவுக்கு எதிரான போர் தொடுத்து இருக்கிறார்.
ஒரு தனிநபர் குற்றம் செய்ததற்கு கட்சிப் பொறுப்பேற்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அவர் திமுக உறுப்பினர் தான் ஆனாலும், இந்த குற்றத்தை அவர் செய்திருக்கிறார் என்பது தெரிந்ததும் உடனே அவரை கைது நடவடிக்கை எடுத்தோம். எங்கள் கட்சி உறுப்பினர் என்பதால் அவர் செய்த செயலை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று வெளிப்படையாக சொல்வதில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.
திமுக மட்டுமல்ல எந்த ஆளும் கட்சியும் உடனே அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உடனே கை கழுவி விடுவார்கள்.
இது எந்த வகையான அரசியல் என்று தெரியவில்லை!.
Leave a comment
Upload