தொடர்கள்
அனுபவம்
எழுதிக் கிழித்தது ! 1 மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

ஆர்.நடராஜன் ஓர் அறிமுகம்

20241127235334572.jpeg

பத்திரிகை உலகில் இலக்கிய வட்டத்தில் 'ஹிண்டு நடராஜன்' என்று அறியப்படும் டாக்டர்.ஆர்.நடராஜன் இரு மொழி எழுத்தாளர். இவர் இளம் வயதில் ஒரு கலைக் கல்லூரியில் முதல்வராகவும், ஆங்கிலப் பேராசிரியராகவும் இருந்தவர். பின்னர் ஆங்கில ஹிண்டு நாளிதழில் சிறப்பிதழின் ஆசிரியராகவும், அமெரிக்க தூதரகத்தில் அரசியல் ஆலோசகராகவும் இருந்துள்ளவர்.

இவர் தமிழ்நாட்டின் நாளிதழ்களிலும், வார, மாதப் பத்திரிகைகளிலும் கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். துணிச்சலுடன் அரசியலை விமர்சித்து துக்ளக் இதழில் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறந்த தமிழ் நூலாசிரியர், சிறந்த தமிழ் பத்திரிகையாளர், சிறந்த ஆங்கில நூலாசிரியர், சிறந்த ஆங்கிலப் பத்திரிகையாளர், சிறந்த இருமொழி (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும்) மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் இலக்கிய அமைப்புகள் மூலம் விருதுகள் பெற்றுள்ளார்.

சாகித்ய அகடமியின் தமிழ் ஆலோசனை குழு உறுப்பினராக இருந்துள்ளவர். ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள ஹன்னன் பல்கலைக்கழகத்தில் விருந்து நிலை ஆராய்ச்சியாளராக இருந்திருக்கிறார். இங்கு தலைமைப் பண்புகள் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

பல பன்னாட்டு கருத்தரங்குகளில் மொழி, இலக்கியம், பண்பாடுகள் பற்றி கட்டுரைகள் வழங்கியிருக்கிறார். 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணம் செய்திருக்கிறார்.

இவரது நூல்களில் சிலவற்றை முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால், அப்போதைய கர்நாடக முதல்வர் வீரப்பமொய்லி ஆகியோர் வெளியிட்டிருக்கிறார்கள்.


“காணும் பொருட்களில் ஒன்றிப்போகும் படைப்பாளி கவிஞன். கதாபாத்திரங்களில்ஒன்றிப் போகும் படைப்பாளி எழுத்தாளன். அவனும் சிலசமயங்களில் பாத்திரங்களை விட்டு விலகி இருக்க வேண்டும்.

ஆனால் ஒரு நிருபர் எப்போதும் ஒரு விலகல் மனப்பான்மையுடன் தான் செயல்பட்டாக வேண்டும். அதுதான் தொழில் தர்மம். இல்லையென்றால் செய்திகளில் சார்பு சாயம்ஏறிவிடும். எனவே இந்தக் கட்டுரைத் தொடர் மூன்றாம் நபர் சொல்வது போலவேஅமைகிறது. இது ஒரு உத்தி அல்ல, ஒழுக்கம்.

நிகழ்ச்சிகளை செய்தியாக எழுதிய காலத்திலும், அந்த நினைவுகளை இப்போது நினைவுகூறும் காலத்திலும், இங்கே அவன் தனக்குத் தானே அயலானாக இருக்கிறான்.”


ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

20241127235748767.png

(நன்றி டைம்ஸ் வலைதளம்)

மங்களகரமான இடத்தில் தான் எல்லோரும் தங்கள் தொழிலைத் தொடங்கவிரும்புவார்கள். ஆனால் அவன் தன் நிருபர் பணியை தொடங்கிய முதல் இடம் சென்னைபொது மருத்துவ மனையின் பிணவறை (மார்ச்சுவரி). பிணவறை, அரை இருட்டு, ஒருவிதமான நெடி. கூடுதலாக குளிர். அவன் ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகையின் நிருபர்என்பதால் பிணவறை ஊழியர் அவனை உள்ளே அனுமதித்தார். ஒரு டார்மிடரியில்கட்டிலில் பலர் படுத்துக் கொண்டிருப்பது போல், கட்டில்களில் பிணங்கள் மல்லாக்கக்கிடத்தப்பட்டிருந்தன.

ஒவ்வொரு பிணமாகத் தாண்டி அந்த அறையின் மூலையில் கட்டிலில் இருந்த ஒருவெளிநாட்டுக்காரியின் பிணத்தை ஊழியர் காண்பித்தார். அவரைப் பற்றிய செய்தியைசேகரிக்கத்தான் அங்கே அவன் சென்றான். ஊழியரிடமிருந்து அதிகத் தகவல்கள்பெறமுடியவில்லை. இருந்தாலும், என்று, எப்போது, யார் அவளை மருத்துவமனையில்அனுமதித்தார்கள், எப்போது பிணவறைக்கு கொண்டுவரப்பட்டார் என்ற தகவல்களை, கேட்டுத் தெரிந்து கொண்டான் அவன்.

பிணவறையில் பெற்ற தகவல்கள் போதாது என்பதனால், மருத்துவமனைத் தலைவரைசந்தித்து, அவர் கை காட்டியபடி ஒரு மருத்துவரிடம் பேசி, கொஞ்சம் தகவல்கள் பெற்றான். ஆனாலும் செய்தியை முழுமையாக எழுதுவதற்கு போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. அதற்காக அவன் செல்ல வேண்டி இருந்த இடம் போலீஸ் கமிஷனர் அலுவலகம். அந்தகமிஷனர் நல்ல பொது ஜனத் தொடர்பு கொண்டவர். அவர் உடனே ஒரு அசிஸ்டென்ட்கமிஷனரை அழைத்து தன் எதிரிலே தகவல்களைப் பெற்றுத்தந்தார். இவ்வளவுதகவல்களைப் பெற்ற அவன், அலுவலகத்திற்கு வந்து அந்தச் செய்தியை 15வாக்கியங்களில் எழுதிக் கொடுத்தான். அப்போதும் கூட அந்த வெளிநாட்டுப் பெண்மணிஎப்படி சாலை விபத்தில் சிக்கினார் என்ற சந்தர்ப்ப சூழ்நிலையை அவனால் எழுதமுடியவில்லை. ஏனென்றால் துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை. ஊகங்கள்செய்தியாகாது என்பதனால், தெரிந்த தகவல்களை மட்டுமே வைத்துக் கொண்டு செய்தியைஎழுதிக் கொடுத்தான். இதுதான் ஒரு நிருபராக அவன் எழுதிய முதல் செய்தி. ஆகயாருடைய முடிவிலோ அவனது தொழிலின் தொடக்கம் அமைந்தது. எல்லாம் தெய்வசித்தம்.

முதல் செய்தி ஒரு பிணத்தைப் பற்றியது என்பதை அடுத்து மூன்றாம் நாள், அவன் எழுதிய2வது செய்தி 3 பிணங்கள் பற்றியது. சென்னை தியாகராயநகர், மூப்பற்ற அம்மன் கோவில்அருகே தீப்பற்றிய குடிசையில் மூவர் சிக்கிக் கொண்டார்கள். இவன் தகவல் அறிந்துஅங்கே சென்ற நேரத்தில் குடிசை முழுவதுமாக எரிந்து இருந்தது. சில போலீஸ்காரர்கள்நின்றிருந்தார்கள். எரிந்த குடிசையின் மிச்சங்களான கருகிய கீற்றுகள், பாதி எரிந்தமூங்கில்கள் இவற்றின் நடுவே, வேகவைத்த பிரமாண்டமான சக்கரவள்ளி கிழங்குகள்போல் 3 பிணங்கள் தீயில் வெந்து தாறுமாறாகக் கிடந்தன. கோரமான காட்சி அது. மனம்கொஞ்சம் கலங்கியது, அவர்கள் யாரோ என்னவோ என்று. ஆனாலும் செய்தி எழுதுவதில்மன கலக்கம் இருக்கக் கூடாது என்பதை யாரும் சொல்லாமலேயே புரிந்துகொண்டிருந்தஅவன், அக்கம்பக்கத்தில் கேட்டு, இறந்தவர்கள் யார் யார்? குடிசை எப்படி எரிந்தது? என்றதகவலைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். அடுத்து எழும்பூரில் இருந்த போலீஸ் கமிஷனர்அலுவலகத்துக்குச் சென்றான், கூடுதல் தகவல்கள் பெற.

அந்த தீ விபத்து பற்றி செய்தியை எழுதிக் கொடுத்தான். எழுதிக் கொண்டிருந்தபோது 3பிணங்கள் கிடந்த காட்சி, அவன் கண் முன்னே வந்து சென்றது. ஏனென்றால் அதுஅவனுக்கு புது அனுபவம்.

மூன்றாவது சம்பவமும், ஒரு சாலை விபத்து மரணம் தான். அண்ணா சாலையில் எல்.ஐ.சி. கட்டிடத்திற்கு எதிரே ஸ்கூட்டரில் சென்ற ஒருவரை, ஏதோ ஒரு வாகனம் இடித்துத் தள்ளி, நசுக்கிவிட்டுச் சென்றது. அந்த இடமெல்லாம் ரத்தம் உறைந்து இருந்தது. அந்த இடம் தன்அலுவலகத்துக்கு அருகே என்பதனால் விரைந்து சென்றான். அப்போது தான்போலீஸ்காரர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் ஸ்கூட்டரை நகர்த்தி, சாலையோரம்வைத்து விட்டு, இறந்தவரின் உடலை ஒரு வாகனத்தில் ஏற்றினார்கள். அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து அவன் தெரிந்து கொண்டது, அவர் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன்அலுவலகத்தில் பணிபுரிந்தவர் என்பது. ஆனால் அப்போது பெயர் தெரியவில்லை.

அவன் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் அலுவலகத்துக்குச் சென்றபோது அவர்களுக்கும்விபத்து பற்றிய செய்தி எட்டியிருந்தது. விபத்தில் உயிரிழந்தவர், கிருஷ்ணன் என்கிறடெபுடி மேனேஜர் என்பது தெரிந்தது. ஆனாலும் இதை வைத்துக் கொண்டு மட்டுமே, முழுமையான செய்தியை எழுதிவிட முடியாது என்பதனால், அருகே இருந்த காவல்நிலையத்துக்குச் சென்று, விபத்து எப்படி நடந்தது, யார் காரணம் என்றெல்லாம் கேட்டான். அவர்கள் அதுபற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றார்கள். அவர்களுக்கும்அப்போது முழு விபரம் கிடைக்கவில்லை. விபத்தை செய்தி ஆக்கியபோது, சாலையில்படிந்திருந்த ரத்தம் அவன் மனதை பிராண்டியது. உள்மனம் சொன்னது, ‘‘செய்தியை மட்டும்எழுது, கலங்காதே, கலங்கி விடாதே.’’

இப்படி, இவன் அடுத்தடுத்து செய்தியாக்கிய 3 நிகழ்வுகள், அசம்பாவிதங்கள். மூன்றிலும்அவன் காவல் துறையைத் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. அப்போது, சென்னைபத்திரிகை துறையில் ஒரு கிண்டல் வாசகம் உலவி வந்தது, அதாவது, ஹிண்டு பத்திரிகை எதிரேயே ஒரு விபத்து நடந்தாலும், அதை நிருபர்கள் போலீஸ் கமிஷனரை கேட்டுக்கொண்டுதான் செய்தி எழுதுவார்கள் என்று.

அடுத்த சில வருடங்களில் அவன் தென்னாற்காடு மாவட்ட நிருபராக இருந்தபோது, மாநிலகாவல்துறை உயர் அதிகாரியுடன், நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு திரும்பும்வழியில், சிதம்பரத்தில் காலை உணவுக்காக ஒரு மணிநேரம் தங்கியிருந்தான். அவரைச்சந்திக்க தென்னாற்காடு மாவட்டம், மற்றும் பக்கத்து மாவட்டங்களிலிருந்து போலீஸ்அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக வந்திருந்தார்கள். எல்லோரும் பணிக்கான உடுப்பில்இருந்தார்கள். அவன் மட்டுமே சாதாரண உடையில் இருந்தான். அப்போது போலீஸ்கமிஷனர் ராம்தாஸ் ஷெனாய் அவனை சுட்டிக்காட்டி, ‘‘யார் இந்த நபர்?” என்று கேட்டார். மாவட்ட கண்காணிப்பாளர் Ôஹிண்டு நிருபர்Õ என்று சொன்னதும், அவர் அவனைப்பார்த்து, ‘‘நல்லவேளை உங்களை இந்த நேரத்தில் இங்கே சந்தித்தேன். எனக்கு ஒருதகவல் கிடைத்திருக்கிறது. இந்திரா காந்தியின் மகன் சஞ்ஜய் காந்தி டெல்லியில், விமானவிபத்தில் காலமானார் என்று. அந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் உடனே உங்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அது உறுதிதானா என்றுசொல்லமுடியுமா?’’ என்று கேட்டார்.

அவன் உடனே, அந்த ஹோட்டலில் இருந்த தொலைபேசி மூலம் (அப்போது செல்போன்கிடையாது), சக நிருபர், ஜெயந்த்தை தொடர்பு கொண்டான். தகவல் உண்மை என்றுதெரிந்தது-. அதை போலீஸ் கமிஷனரிடம் இப்படிச் சொன்னான், ‘‘ஐயா, நீங்கள்கேள்விப்பட்டது உண்மை தான். போலீஸ் கமிஷனரைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டபிறகுதான் செய்தியை ஹிண்டு பேப்பர் வெளியிடும் என்பார்கள். இப்போது போலீஸ்கமிஷனராகிய நீங்கள் ஹிண்டுவிடம் கேட்டு செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள், ஜிலீமீ tணீதீறீமீs ணீக்ஷீமீ tuக்ஷீஸீமீபீ’’ என்றான்.

அப்போது அந்த போலீஸ் கமிஷனர் சொன்னார் ‘‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.’’

* * *