தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20241015212140386.jpeg

மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு விட்டன, வாக்கு சேகரிக்க நெஞ்சை நிமிர்த்தி செல்லலாம் அமைச்சர் அன்பரசன் பேச்சு.

ஆனா பாருங்க அமைச்சரே, அடுத்த முறை எதிர்க்கட்சி தான் என்று சாபம் விடறாங்க அரசு ஊழியர்கள் !!

தமிழகத்தில் இந்த ஆண்டு நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு.

சாலையில் தேங்கி இருந்த தண்ணீரில் மின்சாரம் எடுத்து இருப்பாங்களோ !!

தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்காது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கருத்து.

அக்காவுக்கு ஜோசியம் தெரியும் போல இருக்கு !!

நடிகை கஸ்தூரி திடீர் தலை மறைவு ? தேடும் பணியில் போலீசார் தீவிரம்.

மேக்கப் இல்லாமல் வீட்டிலேயே இருப்பாங்க கண்டுபிடிக்கிறது கஷ்டம் !!

பெண்களுக்கு மாதம் 2100 உதவித்தொகை மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி.

அரசியல் கட்சிகளுக்கு இப்போது பெண்கள் என் கண்கள்.

பெண்களுக்கு மாதம் 3000, இளைஞர்களுக்கு 4000 மகாராஷ்டிரா காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு.

சபாஷ் சரியான போட்டி !!

தொழிலதிபர்கள் ஆதாயம் அடைய பிரதமர் உதவுகிறார் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

ரொம்ப பழசு தலைவரே புதுசா யோசிங்க !!

தாமிரபரணிக்கு 'மேக்கப் 'போட்ட அதிகாரிகளுக்கு நீதிபதிகள் டோஸ்.

சினிமாக்காரங்க ஆட்சியோ இது !!

மது அருந்திய போது தகராறு லாரி டிரைவர் குத்திக் கொலை.

எல்லாம் போதை விழிப்பு பிரச்சாரத்தினுடைய விளைவு தான்.

நகராட்சி கமிஷனர் காரில் ரூபாய் 11.70 லட்சம் பறிமுதல்.

கமிஷனர் தான் கலெக்ஷன் கிங் போல தெரியுது!!

அதிமுக ஆட்சியில் அதிகார பகிர்வு பற்றி தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்படும் முன்னாள் அமைச்சர் பொன்னையன்.

அதாவது முதல்ல அதிகாரம் கையில வரட்டும் அப்புறம் பேசலாம்னு முடிவு செய்வாங்க அதான தலைவரே !!

முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை இருக்கிறதா ? கே.பாலகிருஷ்ணன்.

கம்யூனிஸ்ட் தலைவர்களுடைய கூட்டணி தர்மமே வேற லெவல் !!

உதயநிதி துணை முதல்வரானதில் தவறில்லை மதுரை ஆதினம் கருத்து.

இவர் திராவிடமாடல் ஆதீனம் அப்படித்தான் பேசுவார்.

திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..

நீங்கள் யாரை சொல்றீங்க திருமாவளவனையா இல்ல காம்ரேட் களையா ?

ஆம் ஆத்மி மீது பொதுமக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் அர்விந்த் கெஜ்ரிவால்.

நீங்க அமலாக்கத்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் !!

நீர் நிலம் காட்டை பாஜக பறிக்க விரும்புகிறது ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

ஒரு வேளை எல்லோரும் செவ்வாய் கிரகத்தில் குடியேற வைப்பார்களோ !!

இமாச்சல் முதல்வருக்காக வாங்கிய சமோசாக்கள் மாயம்.

எடுத்துப் போன பெருச்சாளி பற்றி ஏதாவது துப்பு கிடைத்ததா ?