இந்த வாரம் நமது பரணீதரனிடம் தொடைகளைப் பற்றிய நமது கேள்விகளைத் தொடுத்தேன்.
இதோ அந்த உரையாடல்.
இன்றைய காலகட்டத்திலும் நாம் தொடைகளை பயன்படுத்துகிறோமா ? அவை இன்றும் உபயோகத்தில் உள்ளதா ?
கண்டிப்பாக.
இன்றைய காலகட்டத்திலும் நாம் தொடைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எடுத்துக்காட்டாக தமிழ் சினிமா பாடல்களில் பல்வேறு விதமான தொடைகளை நமது கவிஞர்களும் பாடகர்களும் அந்த காலம் முதலே கையாண்டு உள்ளார்கள்.
அவைகளில் சில எடுத்துக்காட்டுகளை நாம் இப்போது பார்ப்போம். சில குறிப்பிட்ட சினிமா பாடல்களின் வரிகளை கீழே கொடுக்கப் போகிறேன். அவற்றில் உள்ள தொடைகளையும் போல்ட் செய்து போடுகிறேன். அதன் பிறகு உங்களாலே தொடைகளை மிகவும் சுலபமாக கண்டுபிடிக்க முடியும்.
பழைய தமிழ் சினிமா பாடல்கள்
அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே (மோனை, இரட்டை)
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாட வைத்தேனே (மோனை, இயைபு)
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா (மோனை, இயைபு)
பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன்
முகம் காண வில்லை
ஏனென்று நான் சொல்லாகுமா
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா (எதுகை, மோனை, முரண் - கண்டேன், காணவில்லை)
கொஞ்சம் பழைய தமிழ் சினிமா பாடல்கள்
அந்தமான் இங்கு வந்தமான் உன்
சொந்தமான் சிந்து பாடும் (எதுகை)
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது (எதுகை, இயைபு)
இது குழந்தை பாடும் தாலாட்டு (முரண் - குழந்தை - தாலாட்டு, இரவில் - பூப்பாளம், மேற்கில் - உதயம்)
இரவா பகலா நிலவா வெயிலா (முரண் - இரவு - பகல், நிலவு - வெயில்)
உருகுதே மருகுதே ஒரே பார்வையால (எதுகை, மோனை -அடுத்த வரி)
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்கு சொந்தம் இல்லை (எதுகை, மோனை)
கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு
வஞ்சி கொடி இங்கே வருவா (எதுகை, இயைபு)
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் கண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய் பெண்ணே (எதுகை, மோனை, இயைபு)
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது (மோனை, இயைபு - அடுத்த வரி)
போரானே போரானே போகாமல் தான் போரானே (இரட்டை, முரண் - போரான் - போகாமல்)
புதிய தமிழ் சினிமா பாடல்கள்
வேங்க மவன் அவன் ஒத்தைல நிக்கான் மொத்தமா வராய்ங்களே (எதுகை, இயைபு)
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தொகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும் (மோனை, இயைபு)
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லயே (எதுகை, மோனை)
வீரா ராஜ வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட
தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர
மாறா காதல் மாற
பூவோர் ஏங்கும் தீர
பாவோர் போற்றும் வீர (எதுகை, மோனை, இயைபு)
பொதுவான தமிழ் பாடல்கள் (எதுகை, மோனை)
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
இதே போல வேறு மொழிகளிலும் தொடைகளும் அதற்குரிய இலக்கணங்களும் உள்ளதா?
இந்திய மொழிகளில் தொடைகளும் அதற்குரிய இலக்கணம் பாடல்களும் இசையும் பொதுவாகவே உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு மொழிகளில் உள்ள பாடல்களை எடுத்து சிறிது நாம் ஆராய்வோம். ஒவ்வொரு மொழியிலும் சில பாடல்களை கீழே கொடுத்துள்ளேன். அவற்றை ஆராய்ந்தாலே நமக்கு இவைகளில் உள்ள ஒற்றுமை நன்றாக தெரியவரும்.
தமிழ் கர்நாடக சங்கீதம் (மோனை, எதுகை)
கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சி அளித்தது பழனியிலே
மலையாளம் (மோனை, எதுகை, இயைபு)
ஆலாயால் தற வேணம் அடுத்தொரம்பலம் வேணம்
ஆலினு சேர்ன்னொரு குளவும் வேணம்
குளிப்பானாய் குளம் வேணம் குளத்தில் செந்தாமர வேணம்
குளிச்ச் சென்னகம் புக்கான் சந்தனம் வேணம்
பூவாயால் மணம் வேணம் பூமானாயால் குணம் வேணம்
பூமானினிமார்கள் அடக்கம் வேணம்
யுத்தத்திங்கல் ராமன் நல்லூ, குலத்திங்கல் ஸீத நல்லூ
ஊணுறக்கமுபேக்ஷிக்கான் லக்ஷ்மணன் நல்லூ
படய்க்க் பரதன் நல்லூ, பறவான் பைங்கிளி நல்லூ
பறக்குன்ன பக்ஷிகளில் கருடன் நல்லூ
நாடாயால் ந்ருபன் வேணம் அரிகில் மந்த்ரிமார் வேணம்
நாடினு கூணமுள்ள ப்ரஜகள் வேணம்
கன்னடம்
பாடல் 1 (மோனை, எதுகை, இயைபு)
மாதவ மாமவ தேவா கிருஷ்ணா
யாதவ கிருஷ்ணா யதுகுல கிருஷ்ணா
ஸாதுஜனாதார ஸார்வபவ்மா
மாதவ மாமவ தேவா கிருஷ்ணா
பாடல் 2 (மோனை, எதுகை, இயைபு)
ஜகதோத்தாரன அடிஸிதளெஶோதா
ஜகதோத்தாரன மகனெந்து திளியுதா
ஸுகுணாoதரங்கன அடிஸிதளெஶோதா
நிகமகெ ஸிலுகத அகணித மஹிமன
மகுகள மாணிக்யனா அடிஸிதளெஶோதெ
அனோரணீயன மஹதோமஹீமன
அப்ரமெயன அடிஸிதளெஶோதெ
பரம புருஷன பரவாஸுதேவன
புரந்தர விடலன அடிஸிதளெஶோதெ
தெலுங்கு
பாடல் 1 (மோனை, எதுகை, இயைபு)
எந்தரோ மஹானுபாவுலு
அந்தரீகீ வந்தனமுலு
சந்துரு வர்ணுனி
அந்தசந்தமுனு ஹ்ருதயா
அரவிந்தமுன ஜூசி ப்ரஹ்மா
அனந்தமனுபவிஞ்சுவா
பாடல் 2 (மோனை, இயைபு)
ஜகதானந்த காரகா
ஜய ஜானகி ப்ராண நாயகா
பெங்காலி
பாடல் 1 (மோனை, எதுகை, இயைபு, இரட்டை)
ஜன கண மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
த்ராவிட உத்கல வங்கா
விந்த்ய ஹிமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆஷிச மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜயஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே,
ஜய ஜய ஜய, ஜய ஹே
பாடல் 2 (மோனை, இயைபு, இரட்டை)
வந்தே மாதரம் வந்தே மாதரம்
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜஶீதலாம்
ஶஸ்ய ஶ்யாமலாம் மாதரம்
ஶுப்ர ஜ்யோத்ஸ்ன புலகித யாமினீம்
புல்ல குஸுமித த்ருமதலஶோபினீம்,
ஸுஹாஸினீம் ஸுமதுர பாஷிணீம்
ஸுகதாம் பரதாம் மாதரம்
வந்தே மாதரம்
ஒடியா (ஒரியா) - (எதுகை, மோனை, இயைபு, இரட்டை)
வந்தே உத்கள ஜனனீ
சாரு ஹாஸமயீ சாரு பாஸமயீ,
ஜனனீ, ஜனனீ, ஜனனீ
கன கன பனபூமி ராஜித அங்கே,
நீள பூதரமாளா ஸாஜே தரங்கே,
கள கள முகரித சாரு பிஹங்கே
ஜனனீ, ஜனனீ, ஜனனீ
ஸுந்தர மந்திர மண்டித தேஶ
சாருகளாபளி ஶோபித பேஶ
புண்ய தீர்தசய பூர்ண்ண ப்ரதேஶ
ஜனனீ, ஜனனீ, ஜனனீ
மராட்டி
பாடல் 1 (எதுகை, இயைபு, அந்தாதி, இரட்டை)
ஓம்கார ஸ்வரூப, சத்குரு சமர்த்த
அநாதச்ச நாதா, துஜ நமோ
துஜ நமோ, துஜ நமோ, துஜ நமோ
நமோ மாயாபாபா, குருகிருபா தான
தோடியா பந்தன மாயாமோஹ
மோஹஜாலா மாஜே கோநா நீரக்ஷிர்
துஜாவிநா தயாலா சத்குரு ராயா
பாடல் 2 (மோனை, எதுகை, இயைபு)
பண்டரீசே பூத மோடே
ஆல்யா கேல்யா ஜடபீ வாடே
ஹிந்துஸ்தானி (உருது கலக்காத ஹிந்தி) - (இயைபு)
பதுமநாப தும்ஹாரி லீலா
க்யா கஹூம் மேம் ஸாவரோ
தாப ஸங்கட ஶரணாயோ
ஸோஹமாரோ தும் ஹரோ
பஜன்கள் (மோனை, எதுகை, இயைபு)
ராமா ராகவா ஜய ராஜீ வல்லபா
ராமா ராகவா ஜய ராஜீ வல்லபா
ராமா ராகவ ராஜீ வல்லப
காமித பலதா கரி வரதா
க்ருஷ்ணா கேசவா ஜய கோபி வல்லபா
க்ருஷ்ணா கேசவா ஜய கோபி வல்லபா
க்ருஷ்ணா கேசவா ஜய கோபி வல்லப
காமித பலதா யது வரதா
வடமொழி (சமஸ்கிருதம்) - (மோனை, எதுகை, அந்தாதி, இரட்டை)
விஶ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு : ।
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந :
பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி : ।
அவ்யய : புருஷ : ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோऽக்ஷர ஏவ ச
இப்படி இசையும், இலக்கணமும், யாப்பும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இந்திய மொழிகளில் ஒன்று போலவே காணப்படுகிறது. அதனால்தான் இசைக்கு மொழி தேவை இல்லை என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இசைக்கு இலக்கணம் அனைத்து மொழிகளையும் ஒன்றே தான். அவர் எடுத்துக்காட்டாகச் சொன்ன அனைத்து பாடல்களும் பிற மொழிப் பாடல்களாய் இருப்பினும் பெரும்பாலானவர்க்கு பரிச்சயமானதது தான். புழக்கத்தில் உள்ளது தான்.
ஒன்று தெள்ளத் தெளிவாகிறது. மொழிகள் இணைபிரியாத சகோதரிகள் போலே வளர்ந்துள்ளன. வளர்கின்றன. அவர்களிடையே போட்டியோ பொறாமையோ இருந்ததில்லை.
அடுத்த வாரம் மீண்டும் சிற்றிலக்கிய வகைகளை பார்ப்போம் என்று ரூப்பு தேரா மஸ்தானா ப்யாரு மேரா தீவானா என்று ராஜேஷ் கன்னாவின் பாடலை முனகியவாறே விடை பெற்றார்.
Leave a comment
Upload