அஜித் ஷாலினி
குட் பேட் அக்லி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயினில் நடந்து வருகிறது. அஜித், ஷாலினி மற்றும் தன் மகனுடன் ஸ்பெயின் வந்திருக்கிறார். அங்கு சாலையில் ஜாலியாக வாக்கிங் சென்று வீடியோ பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்சமயம் இணையதளத்தில் வைரல் ஆகிறது. தமிழ்நாட்டில் அவர்களுக்கு அது சாத்தியமில்லை. ஸ்பெயினில் அவர்கள் சாதாரண மனிதர்கள் போல் வலம் வந்தார்கள்.
கீர்த்தி சுரேஷ்
போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்தார் கீர்த்தி சுரேஷ். தயாரிப்பு குழு தரும் சாப்பாடு எனக்கு பிடிக்கவில்லை. உங்கள் வீட்டில் இருந்து எனக்கு வர செய்யுங்கள்,என்று சிரஞ்சீவி மிரட்டும் தொனியில் கேட்டு சாப்பிட்டாராம். ஆனால் சாப்பாட்டில் அது சரியில்லை, இது சரியில்லை என்று குறை சொல்லிக் கொண்டே தான் சாப்பிடுவாராம் கீர்த்தி சுரேஷ். இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் சிரஞ்சீவி.
மேகா ஆகாஷ்
ரஜினியின் பேட்ட படம் மூலம் அறிமுகமான மேகா ஆகாஷுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இத்தாலியில் தனது கணவருடன் ஹனிமூன் கொண்டாடுகிறார். அங்கு தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் மேகா ஆகாஷ்.
நிமிஷா சஜயன்
அதர்வா நடித்துள்ள டி.என்.ஏ படத்தில் அவருக்கு ஜோடியாக நிமிஷாசஜயன் நடித்திருக்கிறார்.
கீர்த்தி ஷெட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் உங்களுக்கு யார் மீது கிரஷ் என்று நடிகை கீர்த்தி ஷெட்டியிடம் கேட்டபோது கொஞ்சமும் யோசிக்காமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் மீது தான் என்று சொல்லி இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
எனக்கு வைர நகைகள் மீது இன்வெஸ்ட்மெண்ட் செய்ய விருப்பமில்லை என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மாளவிகா மோகனன்
தன்னை அதிரடியான பேய் வேடத்தில் நடிக்க வைக்குமாறு இயக்குனர்களிடம் கோரிக்கை வைக்கிறார் மாளவிகா மோகனன்.
சுட சுட
அப்பா மகன் மோதல்
வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு அப்பா சிரஞ்சீவி நடிக்கும் "விஷ்வம் பாரா" படமும் மகன் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகப்போகிறது.
தமன்னா
ஸ்திரி -2 இந்தி படத்தில் தமன்னாவின் குத்தாட்டத்துக்கு பிறகு தமன்னா தான் குத்தாட்டத்தில் நம்பர் ஒன் என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது.
ரீமேக் ?
பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பசு வந்த் கேசரி தெலுங்கு படத்தின் ரீமேக் தான் விஜய் நடிக்கும் கடைசி படம் என்று ஒரு பேச்சு உலா வருகிறது. அந்தப் படத்திலும் மூன்று ஹீரோயினிகள் இந்தப் படத்தில் மூன்று ஹீரோயினிகள். அந்தப் படத்தின் ரீமேக் என்று ஒரு சந்தேகம் வரத் தொடங்கி இருக்கிறது.
Leave a comment
Upload