தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை; அடுத்தவனுக்கு அபசகுனமாக வேண்டும் என்றுநினைத்துத் தன் மூக்கையே அறுத்துக் கொண்டானாம்" அப்படி ஒரு பழமொழி் இருக்கு, அதுபோல இருக்கு நீ செய்த காரியம் என திட்டிக்கொண்டிருந்தாள் பதினொன்றாம் வகுப்புபடிக்கும் தன் மகள் கெளரியை சவிதா.
என்ன நடந்தது ?
பள்ளிவிட்டு வீட்டிற்கு வந்த தினேஷின் லன்ச் பாக்ஸை திறந்த அம்மா சாந்தி அதில் ஒருபேப்பர் இருப்பதைப் பார்த்து என்னது ? என்று விழித்திறந்து வியந்தாள் அதில்
நீ என்னை கதலிக்கின்றாய் என தேரியும், நானும்
உன்னை கதலிக்கின்றேன்' -- இப்படிக்கு சுஜா என எழுதியிருந்தது.
இது யாரு ? தினேஷின் நண்பர்கள் வடட்த்தில் பள்ளியில் எங்கும் கேள்விப்படாத பெயராகஇருக்கே, என நினைத்தவள் பின் சிரித்துக்கொண்டே, விளையாடப் போயிருந்த தினேஷ்வரட்டும் கேட்போம் என எடுத்து வைத்துக்கொண்டாள் ஆனால் அவனிடம் அதைப்பற்றிக் கேட்கவில்லை,
மறுநாள் அவன் பள்ளிக்கு சென்ற பின், கெளிரியின் அம்மா சவிதாவிற்கு போன் செய்துவிவரங்களைக் கூறிட இருவரும் சகஜமாக சிரித்துக்கொண்டே பேசினர்.
இந்தக் காலப் பிள்ளைகள் அப்படித்தான் இருக்குங்க என்ன செய்கிறது, அவர்களின் வயசுஅப்படி கூடவே ஒன்றாக சைக்கிளில் போகிறார்கள், நல்லா படிக்கிறார்கள் ஆனாஅவர்களுக்குள்ளே போட்டி, பொறாமை எல்லாம் வயதானதும் தானாக வந்துவிடுகிறது. அதுவும் இயல்புதானே என இருவரும் தன் பிள்ளைகளை நன்கு புரிந்துக்கொண்டுப்பேசினார்கள்.
நல்ல வேளை நீங்கள் தினேஷிடம் இதுபற்றி கேட்கவில்லை நீங்கள் கேட்டிருந்தால்அவர்களுக்குள் ஏதும் அப்படி இல்லை என்றாலும் ஏதாவது புதியதாக ஆரம்பமாகியிருக்க காரணமாகியிருக்கும் என்றாள் சவிதா.
நான் கெளரியிடம் இதைப் பற்றி விசாரிக்கின்றேன் என்ற சவிதாவிடம், சரி என கூறிபோனை அவர்களின் சிறுபிள்ளைத்தனத்தை நினைத்து ரசித்தபடி போனை வைத்தாள் சாந்தி.
வீட்டிற்கு வந்த கெளரியிடம், யாருடி அது சுஜா ? எனக் கேட்டாள் சவிதா.
ஏன்மா, என் கிளாஸ்தான்.
பெயர் புதிதாக இருக்கே என்றதற்கு,
இந்த வருடம்தான் திருச்சி யிலிருந்து வந்து சேர்ந்தது.
நல்லா படிப்பாளா ? என்றதற்கு,
சுமாரா படிக்கும், ஆனால் அலட்டல் ரொம்ப என்றாள்.
அவளின் அலட்சியப் பேச்சே காட்டிக்கொடுத்தது அவளுக்கு சுஜா மீது உள்ள வெறுப்பை.
தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை,அடுத்தவனுக்கு அபசகுனமாக வேண்டும் என்றுநினைத்துத் தன் மூக்கையே அறுத்துக் கொண்டானாம்"
அப்படி ஒரு பழமொழி் இருக்கு தமிழில, அதுபோல இருக்கு நீ செய்த காரியம் என்றசவிதாவை மிரண்டு போய்ப்பார்த்தாள் கெளரி.
என்னம்மா? நான் என்ன செய்தேன்? என்றவளிடம்.
நீயே சொல், உண்மையைச் சொல் என்றதும்,
ஆமாம், நான்தான் அதைச் செய்தேன் என ஒப்புக்கொண்டாள் கெளரி.
இத்தனை வருடமாக என் கூடவே நட்பாய் இருந்து வரும் தினேஷ், இப்போ அப்படி இல்லைஎன்றாள்.
ஆனால் இன்னமும் சேர்ந்துதானே பள்ளிக்கு சைக்கிளில் போறீங்க அவன் கூட வீட்டிற்குப்போய் படிக்கிறாய் என்றதற்கு,
சேர்ந்து பள்ளிக்குப் போனால் போதுமா ? அங்கே அவகிட்டேதான் போய் சந்தேகம்கேட்கிறான், புத்தகம் கேட்கிறான், விளையாடுகிறான் மதியம் சாப்பிடும் போதும்இப்போவெல்லாம் என்னைக் கூப்பிடுவதில்லை என்ற தனது ஆதங்கத்தைக் கொட்டியவள், அதான் அவர்களிடையே பிரிவை உண்டாக்க தினேஷின் அம்மா பார்க்கட்டும் என்றுதான்அப்படி எழுதி பாக்ஸில் வைத்தேன் என்றவளிடம்,
நான் உனக்கு அறிவுரை கூறவில்லை கெளரி, புரிய வைக்க முயல்கிறேன். எரிச்சல் மற்றும்பொறாமை என்பதும் இயல்பான உணர்ச்சிகள்தான், அதனை தவறு என்று நான்சொல்லவில்லை ஆனால் அது மகிழ்ச்சியைத் தராது என்று மட்டும் சொல்வேன் என்றவள், நீமகிழ்வான உணர்வில் எப்போதும் உன்னை வைத்திருந்தால் யாரையும் பார்த்துபொறாமைப்பட வேண்டிய சூழலே வராது என்ற சவிதா.
எனக்கும் நல்லா புரியுயதம்மா,நான் செய்தது தப்புதான்,
அவசரத்திலே யோசிக்காமல் செய்து விட்டேன் சாரி என்றவள்,
ஆனால் ஒரு சந்தேகம் எனக்கு என்றாள்.
என்ன ? என்றாள் சவிதா
அதை நான்தான் எழுதினேன் என்று எப்படி தினேஷின் அம்மா கண்டு பிடித்தார்கள்?
இப்படி தமிழில் பிழையேடு "கதலிக்கின்றேன்" , தேரியும் என யார் எழுதுவார்கள் என தினேஷின் அம்மாவிற்கு கூட தெரிந்திருக்கு, உன் கையெழுத்தும் அவர்களுக்குத் தெரியும்என்பது உனக்கு எப்படித் தெரியாமல் போச்சு என கெளரியைக் கேலி செய்தாள்.
வெட்கத்தில் சிரித்த கெளரியை, நல்லவளாக இருப்பது எப்படி முக்கியமோ, அது போலபிள்ளைகள் விவேகத்துடன் இருப்பதும் அவசியம் கெளரி என்ற பஞ்சுடன் தன் மகளைக்கட்டிக்கொண்டாள் சவிதா.
Leave a comment
Upload