தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 25 "புத்தக இனிமை" - மோகன் ஜி

என் பிள்ளை இன்று பெங்களூர் போய் வந்தான். 20240803203512598.jpg

அந்நாளில், வெளியில் போய்விட்டு என் அப்பா திரும்பும் போதெல்லாம் ஏதும் வாங்கி வந்திருக்கிறாரா என்று அவர் கொண்டுவரும் பையை சொளையம் வைப்பது வழக்கம். பிள்ளையிடம் அப்படி ஏதும் செய்வதில்லை என்றாலும், அவனே ஏமாற்றம் தராமல் எதேனும் வாங்கி வருவதுவும் வழக்கம்தான்.

“இந்தா நைனா இது உனக்கு”என்று சீல் செய்த பெரிய புத்தகம் ஒன்றைக் கொடுத்தான்.

‘Heritage of Karnataka’ என்று பொன்னெழுத்துக்களில் அதன் தலைப்பைப் பார்த்தவுடன் என்னில் டோபொமைன் சுரந்தது. அழகாக வடிவமைக்கப்பட்ட கெட்டி அட்டையுடன் புத்தகம் என்னைப் பிரிக்கச் சொல்லி அலைக்கழித்தது.

ஹொய்சளர், இராஷ்டிரகூடர், போசளர், சாளுக்கியர், களப்பிரர், காவேரி, யக்ஷ கானா, சோமன குனிதை, மைசூரு, ஹம்ப்பி, ச்ரவண பேளாகுலா...

என்று பலவற்றின் விவரங்கள் மேலும் தெரிந்து கொள்ள வாய்ப்பென்ற மகிழ்ச்சி சூழ்ந்தது. அதுவும் பிள்ளை தேர்ந்து வாங்கின புத்தகம். வாஞ்சையுடன் புத்தகத்தை வருடிக் கொடுத்தேன்.

20240803203721672.jpg

மெல்ல அதன் பிளாஸ்டிக் பொதிவைப் பிரித்தேன்.. மேலட்டையைப் புரட்டி உள்ளே பார்த்தேன்... அது மணம் வீசும் சுவைப் பெட்டகம் தான்.

அட! ஆனால் அது புத்தக மணமல்ல. நெய்மணம்…

Heritage of Karnataka புத்தகமல்ல…

நீங்களே பாருங்களேன்.

20240803203637512.jpg

‘ஸ்வீட் டப்பா’... ‘அட்டையை வைத்துப் புத்தகத்தை எடை போடாதே’ என்று சும்மாவா சொன்னார்கள்?!

அது நாலு வகை இனிப்புகளை அடுக்கி வைத்து அலங்காரமாக ஒரு டப்பா. ஏர்போர்ட்டில் வாங்கியதாம்.

அதன் விலையில், புதுசா ஒரு செட்டு கடல்புறா, ஒரு செட்டு யவன ராணி, ஒரு செட்டு ஜலதீபம் வாங்கிட்டு,

மிச்ச காசுல ஒரு கிலோ வறுத்த வேர்க்கடலையும் அள்ளிக்கிட்டு ஜன்னலோரமா செட்டிலாயிருப்பேன். பெய்யற மழைக்கு சுகமான காம்பினேஷன்.

நம்ம ஜாதகம் புத்தகத்துல கூட பல்ப் ஒண்ணு ஒளிஞ்சிருக்குதே! ஆனாலும் இனிமையான பல்பு தான்!

ஏமாத்திட்டீங்க மை சன்!