அரசு பஸ்ஸில் பயணித்த போலீஸ்காரர் ஒருவர் உரிய பயணச் சீட்டு இன்றி பயணிக்க முயற்சித்த போது கண்டக்டர் அவரிடம் டிக்கெட் வாங்க வற்புறுத்திய போது நான் அரசுப் பணியாக தான் போகிறேன் உங்கள் ஊழியர்களை நீங்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பது போல் என்னையும் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இருவருக்கும் நடந்த வாக்குவாதம் வீடியோ வைரல் ஆனது. இந்த வீடியோ சர்ச்சைக்குரிய விஷயமாகி காவல்துறைக்கும் போக்குவரத்து துறைக்கும் மோதலாக வெடித்தது.
விளைவு நோ பார்க்கிங் பகுதியில் அரசு பேருந்து நிறுத்தியது. சீட் பெல்ட் இல்லாமல் அரசு பஸ் இயக்கியது சரியான சீருடை இல்லை என்று கிட்டத்தட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக போக்குவரத்து போலீசார் அரசு பஸ் ஓட்டுனர்களை வழிமறித்து அபராதம் விதித்தார்கள். இதில் வேடிக்கை எந்த அரசு பேருந்திலும் சீட் பெல்ட் வசதி கிடையாது. இதேபோல் நோ பார்க்கிங் இடங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வது மாமுலான வழக்கம்தான். இதையெல்லாம் கண்டும் காணாமல் இருந்த போக்குவரத்து காவல்துறை கண்டக்டர் போலீஸ்காரரை டிக்கெட் கேட்டார் என்பதற்காக பழிவாங்கும் நடவடிக்கையாக போக்குவரத்து காவல்துறை ஈடுபட்டது எந்த வகை அணுகுமுறை என்பது உண்மையில் தெரியவில்லை.
இதைவிட வேடிக்கை இரு துறை சம்பந்தப்பட்ட செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது. பிரச்சனைக்கு காரணமான கண்டக்டர் போலீஸ்கார இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு சமரசமானார்கள். இது எந்த வகை நடவடிக்கை என்பது தெரியவில்லை. விதிகளை மீறினார்கள் என்று தான் அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கை திரும்ப பெரும் அதிகாரம் யார் தந்தது. அது சரியான நடவடிக்கையா. அவசர வேலையாக செல்லும் பொதுமக்கள் விதிமீறல் போது அவர்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் போக்குவரத்து காவல்துறை எவ்வளவு கண்டிப்பாக அவர்களிடம் நடந்து கொள்கிறது. அதே விதி மீறலை செய்த அரசு போக்குவரத்து ஓட்டுனர் மீது நடவடிக்கை வாபஸ் என்பது எந்த வகையில் சரி. இது சரியான தீர்வாக தெரியவில்லையே?
Leave a comment
Upload