தொடர்கள்
கவர் ஸ்டோரி
மீண்டும் கச்சத்தீவு?! - ஜாசன்

20240303190539403.jpeg

கச்சத்தீவு ஒரு காலத்தில் அது இந்தியாவுக்கு சொந்தமாக இருந்தது.

இந்திரா அம்மையார் பிரதமராக இருந்தபோது கச்சத்தீவை ஸ்ரீலங்காவுக்கு வழங்கினார்.

கச்சத்தீவு தமிழக எல்லையில் இருந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பு கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. இதற்கான ஆவணப்பதிவு இப்போதும் உள்ளது.

ஒரு கட்டத்தில் கச்சத்தீவுக்கு ஸ்ரீலங்கா உரிமை கொண்டாடியது.

1980-இல் வெளியிட்ட ஸ்ரீலங்கா வரைபடத்தில் கச்சத்தீவு இல்லை. கச்சத்தீவு உண்மையில் எண்ணெய் வளமும், மீன் வளமும் உள்ள ஒரு தீவு. இப்போதும் தமிழக மீனவர்கள் அங்குள்ள மீன்வளத்தை தெரிந்திருப்பதால் தான் அந்தப் பகுதிக்கு செல்லும் போது இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. ஆனால், அது தரிசு நிலம் என்று காட்டி இந்திரா அம்மையாரை ஏமாற்றி அதை வாங்கி விட்டது அன்றைய ஸ்ரீலங்கா அரசு. கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இந்திரா அம்மையாரும் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்காவும் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள்.

20240303190723299.jpg

கச்சத்தீவை திமுக காங்கிரஸ் இலங்கைக்கு தாரை வார்த்து விட்டது என்று தொடர்ந்து ஜெயலலிதா குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார். இது பற்றி ஜெயலலிதா போட்ட பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் இருக்கிறது. இப்போது இந்த பிரச்சனையை தான் பாரதிய ஜனதா கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. கச்சத்தீவை மீட்போம் என்று திராவிட கட்சிகள் தேர்தல் சமயத்தில் வாக்குறுதி தருவது வழக்கம்தான். அதன் பிறகு அவர்கள் மறந்து விடுவார்கள்.

20240303190742697.jpg

பாராளுமன்றத்திலும் திமுக, அதிமுக இந்த பிரச்சனையை பலமுறை எழுப்பிய போது அப்போது இருந்த மத்திய அரசு இது முடிஞ்சு போன பிரச்சனை என்று தான் சொல்லிக் கொண்டிருந்தது. இப்போது பாரதிய ஜனதா கச்சத்தீவை மீட்போம் என்கிறது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்கள் அந்தப் பகுதியில் மீன் பிடிக்கவும் வலைகள் உலர்த்தவும் பத்தாண்டு அனுமதிப்பதாக அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1974-இல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. வெளியுறவுத்துறை அமைச்சர் சமீபத்தில் தந்த பேட்டியில் இது பற்றி தமிழகத்தில் பிரச்சனை இருந்தால் நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி சொன்னதாக அந்தப் பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், அப்போதே திமுக கச்சத்தீவை இலங்கைக்கு தருவது பற்றி தமிழக அரசுடன் எந்த ஆலோசனையும் மத்திய அரசு நடத்தவில்லை என்று சொல்லி இருக்கிறது. இது சம்பந்தமாக சட்டசபையில் 21.08.1974 கச்சத்தீவு மீது இந்திய இறையாண்மையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இலங்கையுடன் ஒப்பந்தத்தை திருத்த வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் தமிழக மீனவர்கள் பிடிபடும்போதெல்லாம் முதலமைச்சர் கடிதம் மட்டுமே எழுதினார். நாங்கள் தான் மீட்டு தந்தோம் என்று குறிப்பிடுகிறார். ஒரு நாடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வெளியுறவுத்துறை அமைச்சகம் தான் இந்த பணியை செய்ய முடியும், செய்ய வேண்டும், இது அவர்கள் கடமையும் கூட. ஆனால், தமிழக அரசு கடிதம் மட்டும் எழுதியது என்று சொல்வது ஏற்புடையது அல்ல என்ற விமர்சனமும் தற்சமயம் வரத் தொடங்கி இருக்கிறது.

கச்சத்தீவு பிரச்சனையை அதுவும் மிகப் பழைய பிரச்சனையை பாரதிய ஜனதா இப்போது களரி இருப்பது தமிழகத் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு குறிப்பாக மீனவர்களுக்கு அதிருப்திவர வேண்டும். அதை தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிடுகிறது என்பது திமுக கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டு.

பத்தாண்டு பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தது. இலங்கை கிட்டத்தட்ட திவால் ஆகும் நிலையில் இருக்கும்போது 34,000 கோடி கடன் கொடுத்தது. அப்போது கச்சத்தீவை இந்தியாவுக்கு தந்தால் தான் கடன் என்று ஏன் நிபந்தனை விதிக்கவில்லை என்று திமுக கேட்கிறது. அதே சமயம் இலங்கை அரசு கச்சத்தீவை திருப்பித் தர வேண்டும் என்று இந்திய அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.

மத்திய நிதியமைச்சர் கச்சத்தீவு பிரச்சனை இப்போது ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். 50 வருடங்களாக உண்மைக்குப் புறமான பிரச்சாரம் நடந்தது. தேர்தலுக்கும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்துக்கும் சம்பந்தமில்லை. நாட்டின் இறையாண்மை தான் முக்கியம் என்கிறார். அதாவது தேர்தலுக்காக இந்த பிரச்சினையை நாங்கள் எடுக்கவில்லை என்று சொல்கிறாராம். கச்சத்தீவை பொறுத்தவரை பாரதிய ஜனதா வாதம் நேரு அது ஒரு தொல்லை சீக்கிரம் கையை விட்டு போனால் நிம்மதி என்று கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்திரா காந்தி அது வெறும் பாறை என்று சொல்லி இருக்கிறார் அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது அவர்கள் வாதம்.

திமுகவை பொருத்தவரை கச்சத்தீவை மீட்பதற்கான சட்ட நடவடிக்கை நாங்கள் ஆரம்பம் முதலே மேற்கொண்டு வந்துள்ளோம். இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றம் உதவியோடு தான் தீர்வு காணும் சூழல் உள்ளது. அதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை சீனா உறவை கருத்தில் கொண்டு

கடந்த 10 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக அரசு சமரசமாகத்தான் இருந்தது என்பது அவர்கள் குற்றச்சாட்டு. வாக்கு வங்கி அரசியலோ இந்திய இறையாண்மையோ தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கடல் எல்லையில் மீன் பிடிக்க உதவினால் அதுவே போதும்.