வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமி பாலியல் கொடூரத்துக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட கொடூரம் புதுச்சேரியில் நடந்திருக்கிறது. இது சம்பந்தமாக 19 இளைஞர் ஒருவரும் 59 வயது முதியவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இளைஞர் போதை மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவராம்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் பொது இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டு அதுவும் நான்கு வயது ஐந்து வயது சிறுமிகள் கூட கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்வது என்பது தற்சமயம் அடிக்கடி நடக்கிறது. இது பற்றி அரசாங்கம் பெரிய அளவு கவலைப்படுவதாக தெரியவில்லை.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021ல் 1,49,604. 2022 ல் 1,62.469 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் 39 சதவீதம் போக்ஸோவழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது .போக்ஸோ வழக்குகளை பொருத்தவரைகுற்றவாளிகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்து வருகிறார்கள் இந்த வழக்கில் இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது காலதாமதமான விசாரணை வழக்கு தேக்கம் இவையெல்லாம் குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் பற்றி ஒரு பொது ஜனம் அந்த குற்றவாளிகள் எங்களிடம் ஒப்படையுங்கள் அவர்களுக்கு நாங்கள் தண்டனை தருகிறோம். பொது இடத்தில் அடித்தே கொன்று விட்டால் இது போன்ற குற்றங்கள் நடக்காது என்று சொன்னது இப்போதைக்குஇருக்கும் சூழ்நிலையில் யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் ஆகிவிட்டது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை இது போன்ற சம்பவத்தின் போது எதிர்ப்பை சரிகட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தந்து அதன் பிறகு இந்த சம்பவத்தை மறந்து விடுகிறது. இப்போதும் புதுச்சேரி அரசு இறந்து போன சிறுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தந்திருக்கிறது. இழப்பீடு தந்தாகிவிட்டது என்று இத்தோடு இந்த விஷயத்தை முடிக்காமல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கித் தர வேண்டும்.
ஆளுநர் ஒரு வாரத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தண்டனை தரப்படும் என்கிறார் .ஆளுநர் ஒரு பெண் என்பதால் அரசியல் தலைவர் என்ற கருத்தில் இந்த பேச்சு இருக்க கூடாது குற்றம் குறைய தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் அதை ஆளுநர் பொறுப்பாக செய்ய வேண்டும்
Leave a comment
Upload