தொடர்கள்
பொது
ஆறு பெருசா ஐந்து பெருசா
எங்க துணை ஆசிரியர் ஜாசன் அவர்கள் கீழ்கண்ட வீடியோவை பகிர்ந்தார். எனது சிந்தனை பறந்து விரிய உருவானது இந்த எழுத்து.

பறவை வளத்த காட்டை மனுஸன் அழிக்கத் துணியறான்...

அந்த மரத்தோட நிழலிலே குளுரும் நல்லா காயறான்.

கூடவே,

அந்த பறவையைச் சூடாக்கி பாவி மனுஸன் திங்கறான்.

உள்ளங்கையை நக்குறான். அந்த உள்ளங்கை நாத்தத்த பிரியமுடியாம மூக்கத் தேச்சி இழுக்கறான்.

கையக்கூடக் கழுவாம பேப்பர வெச்சி துடைக்குறான்.

தொடச்ச பேப்பர கண்ட எடத்துல எறியறான்.

கூட்டம் போட்டு தேர்தல் வெச்சி ஆளும் அரசை இப்படியெல்லாம் திட்டுறான்.

தெருவெல்லாம் குப்பை

ஊரெல்லாம் குப்பை

இவன் போடும் ஒலிப்பெருக்கி கோஷமே ஒலிக்குப்பையாய் அடைக்குதே..

நம்ம காத அடைக்குதே.

பறவைக்கிருக்கும் அறிவு கூட இவனுக்கு இருக்குற அறிவில் இல்லையோ..

ஆறு பெரிசா ஐந்து பெரிஸா

சொல்லுண்ணே!

ஆமா உங்களைத்தானண்ணே!!!

கோழை மவன், அவன், தானாக அவன் நட்டு காடு வளந்த சரித்திரம் தான் இருக்குதா?.

பாவி மவன் நன்றி மறந்ததனாலோ கைக்கெட்டியது வாய்க்கெட்டாம பரிதவிக்கின்றானோ?

பறவையிட்ட சாபம்தானோ பாவி மனுசன் அனுபவிக்கிறானோ?

தண்ணீருக்கு விலையா?

பொருளாதாரம் தானே அண்ணே.

டிமாண்டுக்கும் சப்ளைக்கும் உள்ள தொடர்புதானே

கூறு போட்டு விக்குறாங்க.

உங்கள் கைகளுக்கு எட்டும் வரை அவர்கள் செய்யும் உழைப்பல்லவோ? அதற்கு சன்மானம் தராமல் இருக்கத்தான் முடியுமா?

நாமே வீட்டிலிருந்து நம்முடனே அதை ஏற்றித் தான் வரலாமே.

அந்த சொகுஸுக்குத் தான் அந்த பணம்.

ஒன்று மட்டும் நிச்சயம்.

அண்டத்திலிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஐம்பூதங்கள் மீது சொந்தம் உண்டு.

ஐம்பூதங்களும் அளவில் என்றுமே குறைவதில்லை. பிறக்கும் மனிதன் அனைவருக்கும் ஒரே இடத்தில் அனைத்தும் எப்போதும் எவ்விதம் கிட்டியவாரே இருக்க முடியும்.

ஜனத்தொகை வளர்ந்தால் இடம் பெயர்வது தான் இயற்கை. இல்லையெனில் மேலே சொன்ன பொருளாதார தீர்வை தான் ஒரே கதி.

உதாரணத்துக்கு, அனைத்து ஜீவராசிகளும் சென்னையிலேயே அனைத்தையும் எதிர்பார்க்க முடியுமா?

எத்தனையெத்தனை இயற்கை வளங்கள் எந்த மனிதனும் தீண்டாமல், ஆனால், அவனை விட்டு மற்ற ஜீவராசிகளின் குடியில் இருக்கின்றனவே..

மரங்களை வெட்டினால் மழையேது? பெய்த மழைக்கும் அணைப்பேது? கடந்து செல்லும் நீருக்கும் இருத்தி வைக்க இடமேது? இவை அனைத்தும் இருக்கும் இடத்தில் அனைத்தும் இருக்கும்.

இன்றும் மனிதன் கால் படாத நிலமும் உண்டே. அங்கு போய் பாருங்கள் நிக்கத்தெரியாமல் மழை பெய்து கொண்டே இருக்கும்.

ரயில் பிரயாணத்திலேயே இதைக் கண் கூடாய் கண்டதுண்டுதானே.

ஸ்வாமி சின்மயானந்தாவை நினைக்கின்றேன்.

இயற்கையின் விதிகளை எவ்வளவுக்கெவ்வளவு அவமதிக்கின்றோமோ அவ்வளவுக்கு அந்த இயற்கையின் சீற்றத்தை அதனச் சீண்டியவர், பட்டே ஆகவேண்டும் என்பது ஒரு விதி.