சிந்து நதிக்கரையோரம்..
செல்வமெனப் பெருகிவரும் செந்தமிழைச் சீராட்டிப் பாராட்டிப் போற்றி மகிழ்ந்த கவியரசர் செப்பியதெல்லாம் செய்யுள்களானதா? வாய்மொழிந்த வார்த்தைகளெல்லாம் பாடல்களானதா? கவிதையுடன் கைசேரும் இசைமகளை நம் இதயம்தொடத் தருவதற்கு இளையராஜா!! கவியரசரோடு இணைந்து தந்த காதல் கீதம்!! எழுதிவைத்த ஓவியமா? இசைவடித்த காவியமா? குரள்களிரண்டும் அருவிகளா? கண்ணுக்குக் குளிர்ச்சியூட்டும் அற்புதப் படப்பிடிப்பா? நடிகர் திலகத்துடன் வாணிஸ்ரீ நடித்துத் தந்த மற்றொரு வசந்த மாளிகையா? நல்லதொரு குடும்பம் என்கிற திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் காட்டும் பாவம்!! கற்பனை உச்சம் தொட.. கவிதைமலர் இதழ் விரிக்க.. இசைவடிவில்.. இங்கு ஒரு இன்ப கங்கை பொங்கிப் பெருகி வருகிறதே! உற்சாகம் கரைபுரள.. நம் உள்ளக்கரை நனைகிறதே!!
அன்றாட வாழ்வோடு போராடும் சராசரி மனிதர்களே.. அகவாழ்வின் சுக இலக்கியம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணமிதோ.. கேளுங்கள்.. கேட்டு ரசியுங்கள்! ஒருமுறையல்ல.. பல முறை!!
சிந்துநதிக்கரையோரம்.. அந்தி நேரம்..
எந்தன் தேவன் ஆடினான்..
தமிழ் கீதம் பாடினான்..
என்னைப் பூவைப்போலச் சூடினான்!
சிந்துநதிக்கரையோரம்.. அந்தி நேரம்..
எந்தன் தேவி ஆடினாள்..
தமிழ் கீதம் பாடினாள்..
என்னைப் பூவைப்போலச் சூடினாள்!
மஞ்சள் மலர் பஞ்சணைகள்..
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்..
கோதை எந்தன் சீர்வரிசை!
சொல்லிக் கொடுத்தேன் கதை கதை..
அள்ளி எடுத்தேன் அதை அதை..
சிந்துநதிக்கரையோரம்.. அந்தி நேரம்..
எந்தன் தேவன் ஆடினான்..
தமிழ் கீதம் பாடினான்..
என்னைப் பூவைப்போலச் சூடினான்!
தெள்ளுத்தமிழ் சிலம்புகளை
அள்ளியவள் அணிந்து கொண்டாள்!
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லைமலர் நான் கொடுத்தேன்!
வானவெளியில் இதம் இதம்..
சோலைவெளியில் சுகம் சுகம்..
காதல் மன்னவா...
சிந்துநதிக்கரையோரம்.. அந்தி நேரம்..
எந்தன் தேவன் ஆடினான்..
தமிழ் கீதம் பாடினான்..
என்னைப் பூவைப்போலச் சூடினான்!
இதயத்தின் வாசலில் இன்பத்து ஊஞ்சலைக் கட்டிவைத்தவன் யார்? இளமையின் வீணையில் எத்தனை இராகங்கள் மீட்டெடுத்தவன் யார்? அன்புக்கு மட்டுமே ஆயிரம் அர்த்தங்கள் சொல்லிக்கொடுத்தவன் யார்? தமிழுக்கு மட்டுமே சொற்களில் சுகங்கள் கொட்டிவைத்தவன் யார்? கவியரசருக்கு செந்தமிழின்மீது உள்ள காதலால் காதலியை வர்ணிக்கும்போதுகூட கன்னித்தமிழ் கனிந்துருகி வருகிறது! காதலிலே தெய்வீகம் என்பது கண்ணதாசன் பாணி என்பதை நிரூபிக்கிறார் வரிகளில்!! இராகதேவன் தந்த இசையில் இன்பத்தின் லாவணி பாடலில் மட்டுமல்ல.. திரைப்படத்தின் காட்சியிலும்தான்.. கேளுங்கள் பாடலை.. பாருங்கள் காட்சியை! சுகம்.. சுகம்.. சுகமோ சுகம்!!
பயணம் தொடரும்...
Leave a comment
Upload