தொடர்கள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
ஹாங்காங் கிறிஸ்துமஸ் - ராம்

20221124085223958.jpeg

கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடம் தான் ஹாங்காங்கின் அதிகபட்ச சுற்றுலா பயணிகள் வரும் நேரம்.

அந்த குளிரில் நகரெங்கும் வண்ண விளக்குகள் கண் சிமிட்ட, சிலு சிலுவென பதினைந்து முதல் பதினெட்டு டிகிரி வரை உள்ள வெப்ப நிலையில் ஹனிமூன் ஜோடிகள் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை ஹாங்காங் வந்து குதூகலிக்கும் நேரம் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள்.

கரோனா கொடுமையில் கடந்த மூன்று வருடங்களாக இந்த வைபவம் மிஸ்ஸிங்.

இந்த வருடம் நவம்பர் முதல் கரோனா தட்டுப்பாடுகளை தளர்த்தியிருக்கும் ஹாங்காங் அரசு புதுவருடத்தை கொண்டாட மக்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

இதுவரை உணவகங்கள் 50 சதவிகித அளவில் தான் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும், மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் நீல நிற பார்கோடு காட்ட வேண்டும் அது இது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.

20221124085501267.jpg

அனைத்தையும் ஒரு வழியாக எடுத்து விட்டு போங்கடா நல்லா என்ஜாய் பண்ணுங்க என்றதும் தான் தாமதம்.

மெதுவாக சுற்றுலாப் பயணிகள் வரத்துவங்கியிருக்கிறார்கள்.

இருந்தாலும் ஒரு தயக்கம் இருக்குமல்லவா. மளமளவென்று முன்னர் போல வராவிட்டாலும் ஹாங்காங் விடுதிகள் புக்காக துவங்கி விட்டன.

சிம் ஷா சூய் என்ற இடத்தில் வருடந்தோறும் அமைக்கும் உயரமான கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் வெள்ளம் மூன்று வருடமாக அடைப்பட்டுக் கிடந்த சிறையிலிருந்து வெளியே விட்டதைப் போல உற்சாகமாக நடமாடத்துங்கியிருக்கிறார்கள்.

இதன் நடுவே தாய்நாடு சீனாவிலும் கரோனா தட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. கரோனா தொற்று அதிகமாகியிருக்கிறது என்று வரும் செய்திகள் உண்மைதான்.

20221124085523520.jpg

ஆனால் அதை நேர்கொள்வது என்று அரசு முடிவெடுத்து விட்டதைப் போலத்தான் தோன்றுகிறது

உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் வெறும் காய்ச்சல் இருமல் என்றால் கரோனாவை கடந்து செல்லலாம் என்றே மக்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள்.

சீனாவில் நிலமை கட்டுக்கடங்கால் இருக்கிறது என்று வரும் செய்திகளில் உண்மையில்லை. நிங்போ ஷாங்காய் பகுதிகளில் வசிக்கும் நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்டதில் காய்ச்சல் இருந்தால் வேலைக்கு வர வேண்டாம் மற்றபடி கரோனா இருந்தாலும் வேலைக்கு வரலாம் என்றே அரசு சொல்லிவிட்டதாம்.

இது உண்மையாகும் பட்சத்தில் ஹெர்டு இம்மூனிட்டிக்கு தயாராகி விட்டது சீனா. அந்த வகையில் இனி கட்டுப்பாடுகள் இருக்காது.

இருப்பினும் தாய்நாட்டிலிருந்து எல்லை தாண்டி ஹாங்காங்கிற்கு வரும் சீனர்களின் வரத்து இன்னமும் அதிகரிக்கவில்லை.

அது போலவே தான் அருகாமையில் இருக்கும் மக்காவ் நகரமும். சீனாவில் இருந்து மக்காவ் வரலாம். போகலாம். ஆனால் ஹாங்காங்கிலிருந்து மக்காவ் செல்ல வேண்டுமெனில் ஐந்து நாட்கள் குவாரண்டைன் தேவை இருக்கிறது.

20221124085707743.jpeg

அதுவும் இல்லையென்றால் இந்தப் பகுதியில் கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது.

இது போன்ற சில நெருடல்கள் இருந்தாலும், மூன்று வருடங்களுப் பின் ஹாங்காங்கில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பிஸினஸ் ஓஹோ என்று இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட நல்வாழ்த்துக்கள்.